ஆத்ம ஞானம் இன்றி என்ன பிரயோஜனம் ? - 3 '
J K SIVAN
ஆதி சங்கரர் அற்புதமாக லோகாயதமாக நமக்கு தெரியவேண்டும் என்பதற்காக எளிய வார்த்தைகளில் 18 ஸ்லோகங்கள் ''அனாத்ம விகரண பிரகரணம்'' என்று எழுதி இருபதில் 12 ஸ்லோகங்களை படித்து விட்டோம். கடைசி பகுதியாக இன்று மிச்சம் 6ஸ்லோகங்களை படித்து நிறைவு செய்வோம். இந்த ஸமஸ்க்ரித ஸ்லோகங்களை அருமையாக நமது நண்பர் ஸ்ரீ பி . ஆர். ராமச்சந்திரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள தை கொடுத்து வருகிறேன்.
Bhoopendrasthwam praptha
murvya, Thatha kim,
Devendrathwam sambrutho vaa,
Thatha kim,
Mundeendrathwam chopa
labdham, Thatha kim,
Yena swamathma naiva
sakshathkrutho abhooth. 12
What if he secures the kingship of the
world?
What if he gets the lordship over all
devas?
What if he becomes the chief among the
sages?
If he is not aware of the knowledge of
his own self.
அவன் இந்த பூமிக்கே ராஜா என்று புகழ் வாங்கியவன். விண்ணுலகிலும் அவன் பெயர் பிரபலம். அங்குள்ள தேவாதி தேவர்கள் எல்லாம் அவனைத்தான் தலைவனாக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.
ரிஷிகள் ஞானிகள், முனிவர்கள் எல்லாம் கூட ''ஏது , இவன் நம்மைவிட பெரியவன். நிறைய விஷயங்கள் தெரிந்தவன் என்று தங்களுக்கு முதல்வனாக தேர்ந்தெடுக்கலாம். ஆனாலும், ஒரு விஷயம் நிச்சயம், இதெல்லாம் எதற்கும் உதவாது. அவனுக்கு தான் ''தான் யார்?'' என்கிற ஆத்ம ஞானம் கிடையாதே. எல்லாமே அவனை விட்டு கழன்றுவிடும் இதை அறியாததால். இதனால் என்ன பிரயோஜனம்?
Manthrai
sarva sthambhitho va, Thatha kim,
Banair
lakshya bedhitho va, Thatha kim,
Kala
gnanam cha aapi labdham, Thatha kim,
Yena
swamathma naiva sakshathkrutho abhooth. 13
What if he is able to control
everything through chants?
What if he is able to hit accurately
his aim?
What if he is able to know , past,
present and future?
If he is not aware of the knowledge of
his own self.
அவன் மந்திரத்தாலே மாங்காயை கூட வரவழைப்பவன் என்று எல்லோரும் சொல்லட்டுமே. குறி பார்த்து அம்பை செலுத்தி உச்சாணிக்கிளை பறவை மேல் அடிப்பவன், அர்ஜுனன் தோற்றான் என்றும் சொல்லட்டுமே.
அவன் என்னப்பா சென்றது, நிகழ்வது, வரப்போவது எல்லாமே உணர்ந்து சொல்பவன் என்றும் புகழாரம் சூட்டட்டுமே. அவன்என்னதான் இப்படி பெயர் வாங்கினாலும் எல்லாமே சைபர் தான். அவன் தான் இன்னும் ''தான் யார்?'' என்ற ஆத்ம விசாரத்தில் மூழ்கி அந்த ''நான்'' பற்றி இன்னும் தெரிந்துகொள்ளவில்லையே? என்ன பிரயோஜனம்.?
Kamathanga ganditho va,
Thatha kim,
Kopavesa kunditho va, Thatha
kim,
Lobha slesha varjitho va,
Thatha kim,
Yena swamathma naiva
sakshathkrutho abhooth. 14
What if he is able to cut passion and
worries?
What if he is able to blunt his anger?
What if he is able to keep away the
embrace of avarice?
If he is not aware of the knowledge of
his own self.
உணர்ச்சிகள், கவலை எதுவும் அவனை நெருங்காது? சரி.
அவனை மாதிரி கோபமே இல்லாதவனை பார்க்கமுடியாது. ரொம்ப சரி.
பேராசை, பொறாமை .. ஹுஹும். பேசவே கூடாது அவனிடம்... ஆஹா அதுவும் சரி.
ஒன்று சொல்... அவனுக்கு ''தான் யார்?'' என்ற ஆத்ம ஞானம் இன்னும் கை கூடாதபோது மற்றதால் என்ன பிரயோஜனம்?
Moha dwantha poshitho va,
Thatha kim,
Jathou bhoomou nirmadho va,
Thatha kim,
Mathsaryadhir meelitho va,
Thatha kim,
Yena swamathma naiva
sakshathkrutho abhooth. 15
What if he is able to crush the gloom
of delusion?
What if he is able to be completely
devoid of all his pride?
What if he is not affected by jealousy?
If he is not aware of the knowledge of
his own self.
உன்மத்தமாக மனதை கலக்கும் மயக்கும் விஷயங்கள் அவனை நெருங்க விடமாட்டான். ஆஹா!!
கொஞ்சம் கூட அவனிடம் தற்பெருமை, கர்வம், மண்டை கனம் கிடையாது ஸார் ... ஓஹோ !
எவரைப் பார்த்தும், எதற்கும் பொறாமைப்படும், ஆத்திரப்படும் குணம் நிழலுக்கு கூட இல்லை...ம்ம்
என்ன பிரயோஜனம் இந்த பெருமையால்.. அவனுக்கு ''தான் யார்?'' என்ற ஆத்ம ஞானம் இல்லாதபோது?
Dhathur loka sadhitho va,
Thatha kim,
Vishnur loko veekshitho va,
Thatha kim,
Shambhor loka sasitho va,
Thatha kim,
Yena swamathma naiva
sakshathkrutho abhooth. 16
What if he is acquired the world of
Brahma?
What if he has seen the world of
Vishnu?
What if he ruled over the world of
Shiva?
If he is not aware of the knowledge of
his own self.
''இந்தா நீ தான் இந்த பிரம லோகத்தை ஆள்வதற்கு சரியானவன் என்று பிரம்மாவிடம் பெற்றாலும் பயனில்லை.
வைகுண்டம் முழுதும் சுற்றி பார்த்து களைத்துப் போயும் அது வேஸ்ட்.. வீண்.
சரி, இதையாவது எடுத்துக் கொள்வோம் என்று சிவனின் கைலாசத்துக்கே நீ அதிபதியாக யாக தகுந்தவன் என்று ஒப்புக்கொண்டார்கள். என்றாலும் இதனாலெல்லாம் உனக்கு என்ன பிரயோஜனம். நீ ஸ்வாயாத்மாவான உன்னில் இருக்கும் ஆத்மாவோடு ஒன்று கலந்து அனுபவிக்க தெரியாமல், நீ யாரென்றே இன்னும் அறியவில்லையே,
Yasyedham hrudhaye
samyaghanathma Sri vigarhanam,
SAdho dhethi swatha
sakshathkarasya bhajanam. 17
Any one whose heart always thinks,
About the realization of the self.
Is the only one fit for realization of
the self,
இதில் உண்மை என்ன தெரியுமா? எவனுடைய இதயத்தில், நெஞ்சில் ஆத்ம ஞானம் என்றால் என்ன அதை எப்படி பெறுவது என்ற தாகம் தோன்றுகிறதோ, அவன் ஒருவன் மட்டும் தான் அதை அடைய பக்குவமானவன், தகுந்தவன். அவன் ஆத்ம ஞானம் பெற்று ஞானியாகும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
Anye thu mayika jagath
branthivya moha mohitha,
Na thesham jayathe kwapi
swathma sakshath kruthir bhuvi. 18
For others are in a stupor of desire ,
And do not realize this world,
And to them the thought of ,
Self realization never occurs.
ஆதி சங்கரரின் 18 ஸ்லோகங்கள் நிறைவு பெறுகிறது. மீண்டும் சங்கரரை சந்திப்போம்.
No comments:
Post a Comment