Thursday, October 24, 2019

A DECISION



    ஒரு  தீபாவளி சங்கல்பம்... J K  SIVAN 

நண்பர்களே, 


ஒரு பெண்கள் (மனைவிகள்) மாநாடு நடந்து, வழக்கம்போல எல்லா மனைவிகளும் தங்கள் கணவர்களைப்  போல ஹிட்லர்கள் கிடையாது, அன்பு என்ற ஒன்று இல்லாத இதையும் கொண்டவர்கள், யோசித்து எதையும் செய்யாத   AK  (அவசர குடுக்கை) கள் , சுயநலவாதிகள் என்று ஏகோபித்து தீர்மானித்து  சில  பிரேரணைகளை முன்வைத்து  அதை எல்லா கணவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவாயிற்று.

அவை என்ன என்பதை கொஞ்சம் நாமும் கவனிப்போமா?

இனிமேலாவது கணவர்கள் மனைவி மனம் புண்படாமல்  அளவுகடந்த அன்போடு கோபமில்லாமல், செய்த உணவில் தப்பு கண்டுபிடிக்காமல் எப்போதும் மனைவி முடிவு தான் சரி என்று அவள் கூப்பிடும் இடங்களுக்கு சென்று, எதையும் கலந்து ஆலோசித்து அவள் முடிவுப்படியே மதித்து  நடந்து, அவள் எது சொன்னாலும் செய் தாலும் அது ஒன்றே சரி என்று ஒப்புக்கொண்டு, பணம் என்பது சம்பாதிக்கவே அன்றி செலவு செய்வது மனைவியின் தலையாய கடமை என்று புரிந்துகொண்டு, இவற்றிற்கு உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்,  மனைவி வெளியே  நண்பி வீட்டுக்குப் போனால் வீட்டை,  குழந்தைகளை பார்த்துக்கொண்டு, சமையல் செய்து, பாத்திரம் துலக்கி, வீடு பெருக்கி, துணி துவைத்து காயவைத்து இஸ்திரி போட்டு, முக்கியமான விஷயங்கள் அவள் தான் சரியாக முடிவெடுப்பாள்  என்றுணர்ந்து,  அவளை விட அழகி இன்னும் பிறக்கவில்லை என்று சத்தியம் செயது,   அம்மாவை விட சிறந்த பெண்மணி கடவுளின் அம்சம் மனைவி தான் என்று ஞானம் பெற்று,  பசித்தாலும் அவள் அளித்த நேரத்தில் கொடுத்ததை வாய் மூடி உண்டு (வாய் மூடி எப்படி சாப்பிடுவது, உணவைம் அதன ருசியைப்  பற்றி ஒரு எழுத்தும் சொல்லாமல்) ஆபீஸ் வீடு என்று  கட்டின பசுவைப்போல் அமைதியாக இருந்து, மனைவியின்  பெற்றோர் கடவுளின் அம்சம் என்று அடிக்கடி போற்றி, அவளது பிறந்த நாள்,  திருமண நாள் எல்லாமே  தீபாவளி பொங்கலை விட  கடவுள் அருளால் கிடைத்த சிறந்த கொண்டாட்ட நாள் என்று ஆனந்தப்படவேண்டும்.''

நண்பர்களே  மேலே சொன்ன  ஒரே ஒரு பாரா தானே மனைவிகள் எதிர்பார்ப்பது. அதிகமாக பக்கம் பக்கமாகவா  தீர்மானங்கள் தீட்டி இருக்கிறார்கள்?.  இந்த சின்ன எதிர்பார்ப்பை,  தத்தம் கணவன்மார்கள் மேல்  அன்பும் பாசமும் கொண்டு  தியாக எண்ணத்தை  நன்றியோடு நினைத்து,  அவர்களது பரந்த மனதை பாராட்டி  இந்த தீபாவளி முதல்  கடைபிடிக்க  ஆண்கள் ஒரு மீட்டிங் போட்டு முடிவெடுத்தால் என்ன?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...