Monday, October 28, 2019

ADI SANKARA




ஆதி சங்கரர்     J K SIVAN

   ஆத்ம ஞானம் இன்றி  என்ன பிரயோஜனம் ?-2 

இதற்கு முன் முதல் ஆறு ஸ்லோகங்களை ஆதி சங்கரர் அற்புதமாக  எழுதி  நம்மை முதலில் நாம் யார் என்று அறிய முடுக்கி விட்டதை பார்த்தோம்.  அற்புதமாக 18 ஸ்லோகங்களை   அனாத்மா விகரண பிரகரணம்  என்று எழுதியதில் இன்று  அடுத்த ஆறு  ஸ்லோகங்கள்  இன்று.  ஒவ்வொன்றிலும் ஸ்தத  கிம்  என்று  என்ன பயன் என்று அழகாக கேட்கிறார் பாருங்கள்.  அடுத்த  ஆறு ஸ்லோகங்கள் அப்புறம் படிப்போம். ENGLISH TRANSLATION: SRI P R RAMACHANDER

Annairviprastharpitha va sthatha kim,Yagnairdeva sthoshitho va sthatha kim,Keerthyavyaptha sarvalokaisthatha kim,Yenaswamathma naiva sakshathkrutho abhooth. 6
What if he has satisfied with foodlearned Brahmins?

What if he has made devas happy byYagnas?What if his fame has spread all overthe world,If he is not aware of the knowledge ofhis own self.

நான்  சாதாரணன் இல்லை.எனக்கு வசதி யுண்டு. பார்த்தாயா  எத்தனை  பிராமணர் களை கூப்பிட்டிட்டு போஜனம் செய்வித்தேன்.? நிறைய  யாக யஞ த்துக்கு தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு வந்து  பெரியா யாகம் பண்ணினேன் தெரியுமல்லவா?என் புகழ் எல்லா இடத்திலும் பரவி இருக்கிறதல்லவா? எல்லோரும் நான் யார் என்று தெரிந்துகொண்டிருக்கிறார்களே!அடே முட்டாளே, இதெல்லாம் செயதாய், உன்னை  யார் என்று எல்லோரும் தெரிந்துகொண்டார் கள் என்கிறாயே  நீ யார்  என்று உனக்கு முதலில் தெரியுமா சொல்? 

Kaya klishta schoupavasaisthatha kim,Labdha puthra sweeyapathnyasthathakim,Pranayama sadhitho va sthathakim,Yena swamathma naivasakshathkrutho abhooth. 7

What if he practiced starvationpunishing his body?
What if he got a son through his ownsweet wife?What if he has mastered the techniqueof Pranayama?If he is not aware of the knowledge ofhis own self.

நிறைய  பட்டினி கிடக்கிறாய். உபவாசம் என்கிறாய். விரதம் இருக்கிறாய், 
உன் ஆசை மனைவி உனக்கு ஒரு அழகிய பிள்ளை பெற்றுக் கொடுத்தாள்  என்று பெருமை...மூச்சை அடக்கி  பிராணாயாமம் நான் செய்வேன் என்று மார் தட்டுகிறாயே , ஏ மார்புக்குள்ளே ஒரு  ஆத்மா இருப்பதை அறிவாயா, நீ யார் என்று அதை விசாரித்து அறிந்தாயா அதை முதலில் சொல்?   மற்றதால்  என்ன பயன் சொல்?

Yudhe shathru nirjitho vaThatha kim,Bhooyo mithrair pooritho vaThatha kim,Yogipraptha sidhayo va Thatha kim,Yenaswamathma naiva sakshathkrutho abhooth. 8

What if he won over all his enemies inbattle,
What if he has added his strengththrough new friends?What if he has attained occult powersthrough Yoga?If he is not aware of the knowledge ofhis own self.

 நீ  தான்  அந்த  வீர தீர  சூர ராஜனோ? யுத்தத்தில் எதிரிகளை ஒடுக்கியவனோ?நிறைய  நண்பர்களாமே உனக்கு,  அதே ஒரு பலமா ?யோகம் பயின்று சித்திகளை எல்லாம் அடைந்தாயாமே, அதெல்லாம் சரிடா ராஜா.நீ யார் உன் ஆன்மாவை உனக்கு தெரியுமா அதை தெரியாத போது  மற்றதால் என்ன பிரயோஜனம்?

Aabdhi padhbhyam lankitho va,Thatha kim,Vayu kumbhe sthapitha vasthatha kim,Meru pana vrudhatho vasthatha kim,Yena swamathma naivasakshathkrutho abhooth. 9

What if he has crossed the ocean byfoot?What if he has able to retain hisbreath ?What if he holds the Mount Meru in hishand?If he is not aware of the knowledge ofhis own self.

சமுத்திரத்தை காலால் நடந்தே அக்கறை போகிறவனா நீ? மூச்சை அடக்கி காற்றில் பறக்க மூடுமாமே உன்னால்!ஒரு கையை நீட்டி மகா மேரு மலையை ஒரு கிள்ளு கிள்ளி  அசைத்து தூக்கி இன்னொரு உள்ளங்கையில் வைப்பவனாமே அப்படியா?]என்னடா ப்ரயோஜனம், இதெல்லாம் பண்ணும்  நீ,  உன்னை  யார் என்று இன்னும் அறிந்து கொள்ளாதபோது?

Kshwela peetho dugdha vadha ,Thatha kim,Vahnirjagdho laja vadha ,Thatha kim,Prapthaschara pakshi vathkhe,Thatha kim,Yena swamathma naivasakshathkrutho abhooth. 10

What if he has drunk poison , just likemilk?What if he has eaten fire like popped rice?What if he moves in the sky similar toa bird?If he is not aware of the knowledge ofhis own self.


எல்லோரும்  கை  தட்டினார்களாமே, கடகட வென்று ஒரு லோட்டா விஷத்தை பால் போல் குடித்தாயாமே,பொரி அவல் போல்  வாய் நிறைய நெருப்பை அள்ளி  போட்டுக்கொண்டு விழுங்குவாயாமே கருடன் கிளி  புறா போல்  விர்ரென்று  பறந்து மரத்தின் மேல் கோபுரத்தின் மேல் அமர்வாயாமே?ஓ  அவ்வளவு சாமர்த்தியக் காரன் நீ இன்னும் உன்னை  யாரென்று அறிந்துகொள்ளாத போது  என்ன பயன் சொல்?

Badha samyakpavakaadhyasthatha, Thatha kim,Sakshadhidha loha varyas ,Thatha kim,Labdho nikshepo anjanadhyous,Thatha kim,Yena swamathma naiva sakshathkruthoabhooth. 11

What if he ties and keeps fire undercontrol?What if he is able to pierce hardmetals?What if he is able to locate treasuresusing collyrium?If he is not aware of the knowledge ofhis own self.

பஞ்ச பூதங்களில் சக்திமானான  அக்னியை  கூட உன் கட்டுப்பாட்டில் நீ வைப்பவனா?இரும்பை கூட  ஒரு குத்து குத்தி  பிளக்க சக்தி கொண்டவனாமே, அப்படியா?மை வித்தை என்று  ஏதேதோ மந்திரங்கள் சொல்லி வெற்றிலையில் கருப்பு மை தடவி எங்கே புதையல் என்று கண்டுபிடிக்கும் வித்தை உனக்கு தெரியுமாம். ரொம்ப பெரிய ஆளாக இருக்கிறாயே?  அது சரி, முதலில் இதெல்லாம் தெரிந்து கொண்ட நீ உன்னை யார் என்று ஆத்ம விசாரம் செய்து கண்டுகொண்டாயா அதை சொல் ?

அடுத்த கட்டுரையோடு  நிறைவு பெறும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...