Thursday, April 18, 2019

LIES


நான் சொல்வது பொய்யல்ல J K SIVAN
பொய் இல்லாமல் நமக்கு வாழ்வே இல்லை. ''உங்க கேஸ் ஜெயிக்கவேண்டுமானால் நீங்கள் இப்படி சொல்லவேண்டும் என்று கருப்பு கோட்டுகள் கற்றுக்கொடுக்கும். பெரிய புஸ்தகத்தை அடித்து '' நான் சொல்வதெல்லாம் சத்தியம். சத்தியத்தை தவிர வேறல்ல'' என்போம். அத்தனையும் பொய் .

பொய் சொல்லாமல் ஒரு நாள் கூட நம்மால் இருக்க முடியாது. எதற்காகவோ யாரிடமோ ஏதாவது ஒரு காரணத்துக்காக ஒரு சின்ன பொய் . ''சார் அப்படியெல்லாம் இல்லை. எனக்கு பொய் சொல்லும் பழக்கம் இல்லை என்றால் அது தான் முதல் பொய். அவன் தான் சிறந்த பொய்யன்'' .

நம்மை நாமே கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்வோமா ?

பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது என்றனர் நமது முன்னோர். இது உண்மையா? நிச்சயம் என்று எல்லோரும் சொல்ல முடிகிறதா? பொய்யால் தான் வாழ்க்கையே நடக்கிறது என்று சிலரை, ஏன் பலரைப்பார்த்து வருந்துகிறோமே. தனது வீட்டில் கொள்ளை கொள்ளையாக பணம் பதுக்கினதை கண்டு பிடித்து விட்டார்கள். ''இது என்ன பணம், யார் கொண்டு வந்து இங்கு வைத்தது என்றே எனக்கு தெரியாது '' என்று சொல்வான். ஹிந்துவே இல்லாதவன் நான் தீக்ஷிதர் பரம்பரை என்பான். கட்டு கட்டாக் ருத்திராக்ஷம், பட்டையாக விபூதி சில நிமிஷங்களுக்கு வேஷம்.

உண்மை பொய்த்து விட்டதா? பொய் தான் புகழையும் பெருமையையும் தருகிறதா? அப்படித்தானே நிறைய பேர் நம்புகிறோம்.

பொய் சொல்லாமல் ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள். ஒரு பொய் சொன்னதால் தர்மன் தேர் தரையில் அழுந்தியது. பொய் நம்மை உள்ளே உறுத்தும். துன்பப்படுத்தும் என்று இன்றும் வாழ்பவர்கள் உண்டு.
இப்போது??
குழந்தைகளே பொய் சொல்லாதீர்கள், அது பாபம் என்று பள்ளிக்கூடத்தில் சொல்லித்தருகிறோம். வீட்டில் பெற்றோர் அறிவுறுத்துகிறோம். பெரியவர்கள் சொன்னால் அது பெரிய தவறு என்கிறோம்.
அப்படியென்றால் பொய் சொன்னாலும் பொருந்த சொல்வது ஒரு புகழக்கூடிய தகுதியாக ஏன் சிலருக்கு இருக்கிறது?.

வானத்தை வில்லாக வளைப்பேன் என்று எல்லாம் பொய் சொல்பவனை சாமர்த்தியக்காரன் என்று ஏன் பாராட்டுகிறோம்?.

நிறைய பேர் வாழ்வில் காதலே பொய்யால் தான் உருவாகிறது. வாழ்க்கை கட்டிடமே பொய் அஸ்திவாரத்தில் தான் ஸ்ட்ராங்காக நிற்கிறதே. மேலே சொன்ன கருப்பு கோட்டுகளுக்கு மூலதனமே பொய் என்று தலையாட்டுகிறோம். அழகாக ஜோடித்து அதை சொல்வோர் மிகச் சிறந்த வழக்கறி ஞர்களாமே. அரசியல்வாதி என்பவனுக்கு ஆதார சுருதியே பொய் என்று அநேகர் சொல்கிறார்களே. அது தெரியாதவன் பிழைக்க தெரியாதவனாமே? .

பெரிய நிர்வாகிக்கு வியாபாரத்தில் பொய் அழகாக அலங்கரிக்கப்பட்ட வியாபார மூலதனம். சிரித்துக்கொண்டே நம்பிக்கை ஊட்டி நம் தலையை தின்பவர்கள் பெரிய வியாபாரிகள் ஆச்சே.

கல்யாணமாகாதவன் சொல்லும் பொய்யெல்லாம் தற்பெருமைக்காகவா? தன்னுடைய இமேஜ் உயரவேண்டும் என்ற ஆர்வத்தால் தானே.
சின்ன சின்ன பொய் அன்றாட வாழ்வில் அவசியம் ஆகிறதே.
கவிஞன், கதை சொல்பவன் அதை நம்பித்தானே வாழ்கிறான் . அது தானே அவன் ஜீவனம். அதை கற்பனா சக்தி மிக்கவன் என்று எல்லவா புகழ் புகழ வைக்கிறதல்லவா.

வேலைக்காரன் முதலாளியிடம் சொல்கிற பொய் அவனை வேலையில் நீடிக்க வைக்கிறதே. முகஸ்துதிகள் பொய்யினால் பின்னப்பட்டவை தானே.

அநேக குடும்பத்தில் கணவன் மனைவியிடம் காலம் தள்ளுவதே இந்த பொய் அஸ்த்ரப்ரயோகம் என்கிற ஜீவநோபாயத்தால் அல்லவா?

உண்மையாகவே சத்யமேவ ஜெயதே என்பதற்கு என்ன அர்த்தம். வாய்மை உண்மையில் வெல்லுமா. பழைய காலத்தில் மட்டும் வென்றதா? இன்னும் வெல்லுகிறதா என்று கவலையாக இருக்கிறதே?
பொய் அசிங்கம் என்றால் அதற்கு எதிர்மறையாக வாய்மைக்கு அடையாளம் மூன்று சிங்கம் மட்டும்
தானா ?



''கிருஷ்ணா நீ தான் சொல்ல வேண்டும். இன்று தான் நானும் கூட்டத்தோடு கூட்டமாக சென்று ஒட்டு போட்டேன். வாய்மை வெல்லுமா, வெறும் வாய் தான் மெல்லுமா? உனக்கு தான் தெரியும் ''மே மே'' என்று செம்மறி யாட்டு கூட்டம் கத்தி அப்புறம் தெரிந்து கொள்ளட்டுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...