Tuesday, April 23, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம்       J  K   SIVAN 

பகவத் கீதை 


                   4. கர்மா ...விகர்மா....அகர்மா   

மேலே கண்ட  தலைப்பை பார்த்து ஓஹோ இவர் தான்  அடுக்குச் சொல் அப்பாதுரையா? என்று கேட்கவேண்டாம். நான் உங்களுக்கு அநேக கதைகள் அடிக்கடி எழுதுகிறவன். விரும்பி படிக்கிறீர்கள். அதில் ஒன்றல்ல இது.  பகவத் கீதை  நிச்சயம் அதில் சேராது. வாழ பயிற்சி தரும் அதி உன்னத அறிவுரை. பகவான் கிருஷ்ணனின் உபதேசம். மிக மிக  மெதுவாகப் படித்து புரிந்துகொள்ள வேண்டிய விஷயம். முடிந்தவரை நான் தெளிவாக சொல்கிறேன்.  

'அர்ஜுனா மிகக் கடினமான பயிற்சி எது தெரியுமா மனிதனுக்கு ஆசை எதுவும் இல்லாமல்ஐந்து இந்திரியங்களையும்அதோடு சேர்த்து மனதையும் அடக்குவதும் வெறும் உடலை மட்டும் செயலுக்கு உபயோகப் படுத்துவதும்  என்பது.   அதாவது மெஷின் மாதிரி செயல் புரிவது.  மெஷின்  சம்பளம்லீவ்பதவிமுதலாளி யின் தயவு எதையாவது நினைக்கிறதா? கேட்கிறதா?  நேரம் காலம் பார்க்காது கொடுத்த வேலையை செய்கிறது. அதுபோல் ஒவ்வொருவனும் தனது  ஸ்வதர்மத்தின் கடமையை செய்து முடித்த திருப்தியை மட்டும் அடைந்துஅதனால் கிடைக்கும் வெற்றி தோல்வியில் மனதை செலுத்தாமல் இருந்தால் அதுவே அவன்  ஞானி ஆனதைக் குறிக்கும். கப கப என்று எரியும் அக்னி எப்படி அனைத்து காய்ந்த விறகுகளையும்   எரித்து சாம்பலாக்குகிறதோ அதைப் போல் ஐம்புலன்களையும், மனதையும் வென்றவன் தான் உண்மையான ஞானி.

''கிருஷ்ணாநீ பேசுவது காதுக்கு இனிக்கிறது.  ஆனால் சற்று புரியவில்லை. நிதானமாக  யோசித்து பார்க்க வேண்டியிருக்கிறது. கர்மங்களை  துறந்து விடுவதை பற்றி சொன்னாய்கர்மத்தில் முனைந்து ஈடுபடுவது பற்றியும் சொன்னாய் சரிஇந்த ரெண்டில் எது சிறந்தது சொல்என் சந்தேகத்தை நிவர்த்தி செய் ''   இப்படி அர்ஜுனன் கேட்பாதாக நினைக்காமல் நாம் கிருஷ்ணனை கேட்பதாகவும் எடுத்துக் கொண்டால் தான் நமது மனதில் கிருஷ்ணன் சொல்வது ஏறும். புரியும். தெளிவாகும்.

'அர்ஜுனா ரெண்டுமே  உயர்ந்த நலம் தரும்.  இரண்டில்  கர்மத்தை துறப்பதை விட (சன்யாசம் பின்பற்றுவது )  கர்மத்தை அனுஷ்டிப்பது சிறந்தது.  ஏனென்றால்  விருப்பு வெறுப்பு இன்ப துன்பம் எதிலும் சிக்காமல் கடமையை செய்பவன் தெளிந்தவன் எல்லா ஆத்மாவும் ஒன்றே தான்என்று உணர்பவன்பிரமத்தில் கலந்தவன். நீரில் தாமரை போல்  வாழ்க்கையில் இருந்தும் ஓட்டாதவன். எந்த பாவமும் அண்டாதவன். 

நமது இந்திரியங்களால் தான் எல்லா துன்பமும் விளைகிறது என்று அறிந்த யோகி அதில் ஈடுபடமாட்டான். தன்னுள் இருக்கும் ஆத்மா  எல்லா கர்மங்களையும் துறந்துஎதையும் செய்வது மில்லாமல் செய்விப்பதும் இல்லாமல் இந்த ஒன்பது வாசல் உடலில் நிம்மதியாக சுகமாக இருப்பதை உணர்வான்.

மாற்றம்  கொண்டு  நிலை மாறி அழியும் உடலை சோப்புபவுடர்வாசனை திரவியம் போட்டுநல்ல ஆகாரம் தேடி ஓடி உண்டு வளர்த்து அது  பிரதி பலனாக நமக்கு  ஆயிரம் வியாதி கொடுத்து அவதிப்படுவது  கேலிக்குரியது.  உள்ளே இருக்கும் ஒன்றுமே தேவை இல்லாத இன்பமே ஸ்வயமாக  இருக்கும்  ஆத்மா அல்லவோ நீ அது உன் உடலில் ஒட்டியும் ஓட்டாமல்  இருக்கிறதே உடலை அதற்குண்டான  வேலையை செய்ய வைத்து நீ ஆத்மாவில் அல்லவோ மனதை செலுத்த வேண்டும். உடலுக்கு தேவை அது வேலை செய்வதற்கான உணவுஒய்வு. இதை மட்டும் கொடுத்து அதை விடாமல் கடைசி வரை அது செய்யவேண்டிய காரியத்துக்கு (கர்மத்துக்கு) பயன் படுத்து. மனதை சிந்திக்க விடு. உன்னுள் இருக்கும் ஆத்மாவை புரிந்து கொண்டு அதோடு ஒன்றி இரு.  இந்த பயிற்சியில் ஈடுபடுவது தான் பற்றற்ற செயல். இதுவே கர்ம யோகம்.  .எல்லாவற்றையும்  துறந்து வாழும் ஞானியை விட கர்மயோகியால் பிரபஞ்சம் இயங்கும். 

''அர்ஜுனா உன்னை  ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன். பதில் சொல்.  வெறும் எண்ணெயும் திரியும் அகலும் இருந்தால்  தீபம் எரியுமா அக்னி வேண்டாமா அக்னி சேர்ந்தவுடன் தானே விளக்கு ஒளி  வீசுகிறது. இருள் அகல்கிறது. ஆத்ம ஒளி  இருந்தால் தான் மனிதன் தன்னுடைய தேகத்தை கர்மத்துக்கு ஏற்றவாறு செயல் புரியவைத்து இறைவனை அடையமுடியும்.  ஆத்மாவினால் தான் பரமாத்மனை அடைய  முடியும். இது தான் சித்தத்தை சிவன் பால் வைப்பது. தேகத்தின் மேல் ஆசைஅது விரும்பும் தேவைகளை பூர்த்தி செய்வது. அது சொல்லும் வழியில் போவது.   அதையே  ஆத்மாவாக தவறாக புரிந்து ஆனந்தம் தேடுவது தான் தேஹாத்ம புத்தி. போகாத ஊருக்கு வழி.  அப்படி அது ஏதாவது ஒரு ஊருக்கு கொண்டு சென்றால் அதன் பேர் தான் நரகம். 

உடல் செய்யும் அனைத்து காரியமும் 'கர்மம்' (ஸ்வதர்மம் ) என்று பெயர் பெறும்.   உண்பது உறங்குவதை இதில் சேர்ந்தது  என்றாலும் கணக்கில் எடுத்துக்  கொள்ள வேண்டாம். தனக்கெனப்  பயன் கருதாமல் பணி  புரிவதை மட்டும் எடுத்துக் கொள்வோம். இதற்கு பெரிதும் உதவ  அவசியமாக  தேவையானது மனம்.

மனத்தை கர்மத்தில்  ஈடுபடுத்துவது ''விகர்மம்''.   கங்கை நீரைப் போல் தெளிவாக அது மாறும் வரை பயன் கருதாமல் பணி புரிவது  எளிதில் நிறைவேறாது.  அப்படி பயன் கருதாமல் தூயமனத்தொடு ஈடுபடுவதை கீதை 'விகர்மம்என்கிறது. நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். 

கர்மத்தோடு  விகர்மம் ஈடுபட்டு  பரிமளிக்கும் சேவையே  ''அகர்மம்''. இது  என்னடா புதுசாக?  படிப்படியாக மேலே போகவேண்டாமா?   இதைத் தான் கிருஷ்ணன் செயகிறார், சொல்கிறார்.  ''எனக்கு என்று கர்மம், செயல்,  ஏதுமில்லை,ஆனால் நான் கர்மம், செயல்  புரியாமல் இல்லை. எந்த பலனும் எதிர்பாராமல் தொடர்ந்து ஈடுபடுகிறேன்'' என்கிறார்.  

சில கல்யாணங்களில், பெரிய  துணிக்கடைகளில்  வாசலில்  ஒரு பொம்மை சிரித்துக் கொண்டு நிற்கும். தலையை ஆட்டி, கையை அசைத்து கும்பிட்டு  வரவேற்கும். சாவி கொடுத்தாலோ, பேட்டரியாலோ , மின்சாரத்தாலோ அசையும்.   நாம்  அப்படித்தான்.    ''நமஸ்காரம் சார்''  என்று சொல்லும்போது வெறுமே தலையையோ கையையோ மனம் சேராமல் ஆட்டுவது பயனற்ற செய்கை. '' அட சுப்பிரமணியனை பார்த்து விட்டோமே என்று  தலை ஆட்டுவது  தான்  ''கர்மமே'' என்று தலையாட்டுவது'.  மனத்தில் மரியாதையோடுஅன்போடு சொல்லும்போது  அது அகர்மம்.  

ஒரு மரக்கட்டை பயனற்று இருக்கிறது அதில் நெருப்பு சேர்ந்தால் ஒளி  வீசுகிறது உஷ்ணம் தருகிறதுபயன் படுகிறது. பிறருக்கு பயன்பட்டு தான் சாம்பலாகிறது .  தனக்கென இல்லாமல் பிறர்க்கென  உழைப்பது விகர்மம்.  ''இதம் சரீரம் பரோபகாரம்''.  என் கடன் பணி செய்து கிடப்பது. நான்   எனது  என்ற   நிலை  தாண்டி கர்மம் செய்கிறேன் என்று  தோன்றாமல்  செய்வது அகர்மம். இதைத்  தான் கிருஷ்ணன்  ''கொன்றாலும் நீ கொலைஞ னில்லை'' என்பது. பாவம் புண்ணியம் அந்த செயலால் அங்கு  ஒட்டிக் கொள்வதில்லை . மனம்  துருவ நக்ஷத்ரமாகி சாஸ்வத ஒளி  வீசும். சாந்தாகாரம்  புஜக  சயனம். 

சித்தத்தை சோதிப்பதற்காக இயற்ற வேண்டிய காரியங்கள் (கர்மங்கள்) அனைத்தும் விகர்மம்.  புத்தகங்களினால்பிரசாரத்தினால் ஞானம் வராது.  ஒரு லைப்ரரியில் ஒருவர் பெரிய தலைகாணி, திண்டு கணக்காக  புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு போனார். அது என்ன புத்தகம்  என்று வாங்கி பார்த்தால்ஏதோ ஒரு ஆன்மீக புத்தகம்.  ஆனால்  பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்தது.  

''உங்களுக்கு  பிரெஞ்ச் மொழி தெரியுமா சார்? '' என்கிறார்  அருகே  ஒருவர்  அதை பார்த்து விட்டு. 
புத்தகம் தூக்கிக்கொண்டு வந்த ஆசாமி  '' தெரியாதே. ஆங்கிலம்  இல்லையா இது?''
என்றார் அவர். இப்படி புத்தகம் படிப்பவனுக்கு எப்படி  ஞானம் வரும்?  ஒவ்வொருவரும் தனக்குத் தானே  ஸ்புடம் போட்டுக்கொண்டு  ஆன்ம வேள்வியில் ஈடுபட்டால் தான்  ஞானம். சுலபமாய் வாங்க  ஞானம் ஒன்றும்  ஏதோ கிலோ 30 ரூபாய் விற்கும் கத்திரிக்காய் இல்லை. 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...