Monday, April 8, 2019

GARBA RAKSHAKAMBIKAI




                 தாய் இருக்கிறாள்   கருவைக்  காப்பதற்கு  

                                            j k sivan 






நாம் ஒருவரை  ''அவன் அவசர குடுக்கை''  அவன் கிட்டே  ஒரு வேலையை கொடுத்தா அவ்வளவு தான்'' என்கிறோம்.  இப்படி   A.K  பேர் வாங்குபவர்கள்  நிறையபேர் நமக்கு தெரியும்.  ஒரு வித்யாசமான ஆள் ரோமாபுரியில் இருந்தான்.  அவன் பலே  A.K .  நம்மைப் போல் பிறந்தபிறகு இந்த உலகில் அவசரக் குடுக்கையாக இல்லாமல் பிறக்கும் முன்னாலேயே  அம்மா  வயிற்றில் AK . அவன் எல்லோருக்கும் தெரிந்தவனாக போய் விட்டான். பத்து மாதம் பொறுத்து வெளியே வராமல் அவசர அவசரமாய் குறை மாதத்திலேயே பிறந்து விட்ட அவன் பெயரால்  நிறைய  ஆபரேஷன்கள் உலகமெங்கும்  நடந்து குழந்தைகள்  அவனைப்  போலவே வெளியே  AK யாக பிறந்து விடுவதால் அந்த குழந்தைகளுக்கு அவன் பெயராலேயே பிரசவம்.  'ஸிஸேரியன்''   என்பது ஜூலியஸ்  ஸீஸர்  என்ற அந்த AK  ரோம ராஜாவால் நிலைத்த பெயர்.

\இந்த விஷயத்தில் யாருமே  AK யாக  விரும்பமாட்டார்கள்.   கரு உருவானவுடனே வளர்ந்து சுக  ப்ரசவமாவதற்கு, , கரு உருவாவதற்கு  என்றே நமக்கு  ஒரு அம்பாள், தாய், இருக்கிறாள். அவள் இருக்கும் ஊர்.  திரு கருக் காவூர்.   கருவைக் காக்கும்  ஊர்.  அவள் பெயர்  கர்ப ரக்ஷகாம்பிகை. கர்பத்தை காப்பவள்.   கருக் காத்த நாயகி அம்மன். 

ஒரு  கதை.   நிருத்வர் என்கிற முனிவர் மனைவி வேதிகை  கர்ப்பவதி.   முனிவர் வெளியே எங்கோ சென்ற நேரம் பார்த்து  ஊர்த்துவ பாதர் என்கிற  இன்னொரு முனிவர் நல்ல பசியோடு,   வேதிகை மட்டும் வீட்டில் இருக்கும்போது கதவை தட்டுகிறார்.  உடம்பு முடியாமல்  கர்ப்பவதி  வேதிகை எழுந்து தள்ளாடி வெளியே  வெளிக்கதவை திறக்க  கொஞ்சம்  நேரம் ஆகிறது.   அந்த காலத்து வீடுகள் 2BKH  டைப் இல்லை. முதல் கட்டு, ரெண்டாம் கட்டு  மூன்றாம் கட்டு, முற்றம், ரேழி என்று பல பிரதேசங்களை கடந்து வாசல் கதவை திறக்கவேண்டும்.    ''லேட்டாக வந்து கதவை திறந்து என்னை அலட்சிய படுத்தியதால்  இந்தா பிடி சாபம்'' என்று  முனிவர்  சபித்ததால்  வேதிகை கரு கலைந்தது.   

வேதிகை தான் வணங்கும் அம்பாளிடம் அழுது புலம்பி  வேண்டுகிறாள்.   அம்பாள் விடுவாளா?  வேதிகையின்  கலைந்த கருவையே  முழுக்குழந்தையாக  பிறக்க  அருள்கிறாள்.  அப்படி பிறந்தவன் நைத்ருவன்.     விஷயம் வெளியே பரவி,  அம்பாள் கர்ப்ப ரக்ஷகி, கருக்காத்த நாயகி  என்று அழைக்கப்பட்டு பல கோடி  பெண்கள் அவளை நாடி  தேடி வந்து விரதமிருந்து அருள் பெற்று தாயாகிறார்கள்.

முல்லைக் காடாக இருந்த  இந்த ஊர்  முதலில் முல்லைவனம் என்ற  பெயரோடு இருந்து இப்போது திருக்கருகாவூர்.   ஆலயத்தின்  ஈஸ்வரன் ஸ்வயம்பு .  முல்லைவனநாதர் என்ற பெயரோடும் இன்றும்  அருள்பாலிக்கிறார்.    சுவாமி சன்னிதிக்கு இடது புறத்தில் கருக்காத்த நாயகி அம்மனுக்கு  தனி சந்நிதி.  மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலைப் போலவே, இந்த ஆலயத்திலும் அம்மனே பிரதானம்.  நின்ற கோலத்தில் கருணையை கண்களில் தாங்கியபடி  காட்சி தருகிறார். 

பாடல் பெற்ற  சிவஸ்தலம்.  ஒரு ஞான சம்பந்தர் பாடல் மட்டும் தருகிறேன். 

‘வெந்தநீறு மெய்பூசிய வேதியன்
சிந்தைநின்ற வருள் நல்கிய செல்வந்தன்
கந்தமெளவல் கமழும் கருகாவூர் எம்
எந்தை வண்ணம் எரியும் எரிவண்ணமே’.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில், பாபநாசத்தில் இருந்து தெற்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், தஞ்சாவூர்– நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலத்திற்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவிலும், விருத்த காவிரி என்னும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது திருக்கருகாவூர் திருத்தலம். பஞ்ச ஆரண்யத் தலங்களில் முதன் முதலில் தரிசிக்க வேண்டிய திருத்தலம்.  திருக்கருக்காவூரை  கொச்சையாக  திருக்களாவூர் என்றால் பலபேருக்கு தெரியும். 

முதலாம் இராசராசன் கல்வெட்டில் "நித்தவிநோத வளநாட்டு ஆவூர்க் கூற்றத்துத் திருக்கருகாவூர் " என்று இந்த ஊர் பற்றி கல்லில் வெட்டி இருந்தாலும் நமக்கு அர்த்தம் புரியாது. நமது தமிழ் வேறு. 

யார்  வீட்டிலாவது கர்ப்பமான  பெண்கள் மகப்பேறு எதிர் நோக்கி இருந்தாலோ, மகப்பேறு வேண்டினாலோ, இந்த  கர்ப்ப ரக்ஷகாம்பா   ஸ்தோத்ரம்  சொல்லலாம். 

Ehyehi Bhagawan Brahman,
Praja kartha, praja pathe,
Pragruhsheeniva balim cha imam,
Aaapathyaam raksha garbhineem.

யெஹி யெஹி  பகவான் பிரம்மன்,
பிரஜா கர்த்தா, பிரஜாபதே,
பிரகுருஹ் ஷீனிவ பலீம் ச இமம் 
ஆபத்யாம்  ரக்ஷ கர்பிணீம்    

'ஹே  ப்ரம்மா,  உலகில் உயிர்களை ஸ்ரிஷ்டிப்பவனே,  இந்த  குடும்ப ஸ்த்ரீ  கர்பமாக இருக்கிறாள், கர்ப்பிணி.  அவளை எல்லா ஆபத்துகளிலிருந்து பாது காத்து, காப்பாற்றி அருள் புரிவாயாக. இந்தா  நான்  மனமார  வேண்டி  கோருவதை அர்பணிப்பதை பெற்றுக்கொள்.

மொத்தம்  ஓன்பது ஸ்லோகங்கள் இருந்தாலும் மேற்கண்டது மற்றும் கடைசி ஒன்று மட்டும் விடாமல்  தினமும் 108க்கு  குறையாமல் சொல்லவும்:

Raksha Raksha Mahadeva,
Baktha anugraha Karaka,
Pakshi vahana Govinda
Sapathyam raksha Garbhineem – Sloka 9

ரக்ஷ  ரக்ஷா  மஹாதேவா 
பக்த அனுக்ரஹ காரக 
பக்ஷி வாகன கோவிந்தா 
சாபத்யம்  ரக்ஷ கர்பிணீம்  

எல்லாம் வல்ல  மகாதேவா  நீயே காப்பாற்றவேண்டும்.  பக்தர்களுக்கு அருள்பவனே , கருடனை வாகனமாக கொண்ட  நாராயணா, காக்கும் கடவுளே, சர்வ ஆபத்துக்களிலிருந்து  இந்த கர்ப்பிணியை  ரக்ஷிக்க வேண்டும்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...