Wednesday, April 17, 2019

ADHI SANKARA



ஆதி சங்கரர்     J  K  SIVAN 

சிவபஞ்சாக்ஷர  ஸ்தோத்ரம்


ஆதி சங்கரர் ஒரு க்ஷண காலத்தில் மனது  ''ஓம் நமசிவாய''   என்று கைலாசநாதனை  நினைக்கும்போது கை  தானாகவே ஓலைச்சுவடியில்  சிவ பஞ்சாக்ஷரத்தை  ஐந்து ஸ்லோகங்களாக எழுதிவிட்டது நமது பாக்யம். இந்த ஸ்லோகம் எளிமையானது. குழந்தைகள் கட்டாயம் மனப்பாடம் செய்யலாம்.    இந்த ஸ்லோகம் தெரியாத பெற்றோர்கள்  பெரியவர்கள், வயதானவர்களும்  கூட இந்த விஷயத்தில் குழந்தைகளாகி  இதை  மனப்பாடம்  செய்யலாம்.   MSS  அம்மா  அற்புதமாக  ராகமாலிகையில் பாடி  இருக்கிறார். கிளிக் செய்யவும்: https://youtu.be/10sOYYBIUwU

1.நாகேந்த்ரஹாராய த்ரிலோசனாய
பஸ்மாங்கராகாய மஹேச்வராய!
நித்யாய சுத்தாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!

எங்கும்  காணப்படுபவன்   சிவன். சாதாரண  லிங்கமாக  வயல்களிலும் பொது இடங்களிலும் கூட , கிராமங்களிலும் , ஆலயமில்லாமல்  பூஜை, விளக்கு  வஸ்திரம் இல்லாமல்  எத்தனையோ  சிவ லிங்கங்கள்.. பார்க்கும்போது  கண்களில் ரத்தம் கண்ணீராக  வடிகிறது.  எதுவும் எதிர்பார்க்காத வெறும் ஜலத்திலான அபிஷேகம் மட்டுமே  தேவையான  சிவன் ஆதி நாயகன். மூலாதாரன்.   நாகங்களை ஹாரமாகக் கொண்டவரும்,  கருணை பொழியும்  தியான த்திலீடுபட்ட  யோகா நித்ரை அரை மூடி திறந்த கண்ணுடையோன். முக்கண்ணன்.  பவழம் போல் மேனியில் பால் போல் வெண்ணீறு   பூசியவன், மஹேஸ் ச்வரனாயும், என்றும் ஸாஸ்வதன்,  பரிசுத்தமானவன்,   எட்டு திசைகளையே ஆடையாக கொண்டவன்,  மான் மழு வேந்தியவனே .  ஓம் நமசிவாயா எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தில் முதல் அக்ஷரமான ''ந'' எனும் எழுத்தை உத்தேசித்து இந்த ஸ்லோகம்  நாகஸ்வரூபா , சிவனே, உனக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம். 

2.மந்தாகிநீஸலில சந்தனசர்ச்சிதாய
நந்தீச்வரப்ரமத நாதமஹேச்வராய!
மந்தாரமுக்ய பஹுபுஷ்பஸு பூஜிதாய
தஸ்மை மகாராய நம:சிவாய!!

புனிதமான கங்கை நீர் , புஷ்பம் , வில்வதளம்,  விபூதி இவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டவரும், நந்திகேச்வரர், பிரமதர்கள் இவர்களுக்கு எல்லாம்  அதிபதியானவரும்   மந்தாரம் முதலிய பல நல்ல புஷ்பங்களால்  மனம் குளிர  பூஜிக்கப்பட்டவரும் ஆன  சிவபெருமானே,   ஓம் நமசிவாயா எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தில் ரெண்டாம்  அக்ஷரமான ' ம '' எனும் எழுத்தை உத்தேசித்து இந்த ஸ்லோகம்  நாகஸ்வரூபா , சிவனே, உனக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம். 

3.சிவாய கௌரீவதனாப்ஜப்ருந்த-
ஸூர்யாய தக்ஷாத்வர நாசகாய!
ஸ்ரீநீலகண்டாய வ்ருஷத்வஜாய
தஸ்மை சிகாராய நம:சிவாய!!

உமாதேவி எனும்  கௌரியின்   செந்தாமரை வதனத்துக்கு  ஒளி கூட்டும் சூர்யன்  நீ.  தக்ஷனின் யாகத்தை ஒடுக்கியவன் நீ.   ஆலஹால விஷத்தை உண்ட  நீல கண்டா,  வ்ருஷபவாகன, கொடியுடையோனே, 
ஓம் நமசிவாயா எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தில்  மூன்றாம்  அக்ஷரமான ' சி '' எனும் எழுத்தை உத்தேசித்து இந்த ஸ்லோகம்  நாகஸ்வரூபா , சிவனே, உனக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம். .

4.வஸிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய-
முனீந்தர தேவார்சித சேகராய!
சந்த்ரார்கவைச்வாநர லோசனாய
தஸ்மை வகாராய நம:சிவாய!!

வசிஷ்டர், அகஸ்த்யர், கௌதமர் போன்ற  தேவ ரிஷிகளும்  முனிவர்களும், தேவர்களும் பூஜித்த உன்னத  உயர்ந்த  மஹா தேவா,  சந்திரன், சூர்யன், அக்னி ஆகிய  மூன்று சக்திகளையும் 
முக் கண்களாகக்  கொண்ட பரமேஸ்வரா, ஓம் நமசிவாயா எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தில்  நான்காம்  அக்ஷரமான 'வா  '' எனும் எழுத்தை உத்தேசித்து இந்த ஸ்லோகம்  ''வ' காரரூபா , சிவனே, உனக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம். .

5.யக்ஷஸ்வரூபாய ஜடாதராய
பிநாகஹஸ்தாய ஸநாதனாய!
திவ்யாய தேவாய திகம்பராய
தஸ்மை நகராய நம:சிவாய!!
ஈஸ்வரா,  நீ   யக்ஷஸ்வரூபன்,   நீண்ட ஜடா தாரி, பினாகம் எனும்  தனுஸ், வில்லை, கையில் ஏந்தியவன், திவ்ய ஸ்வரூபன் தேவாதி தேவன், பழமனாதி,  திகம்பரன், ஓம் நமசிவாயா எனும் பஞ்சாக்ஷர மந்திரத்தில்  ஐந்தாம்  அக்ஷரமான 'ய '' எனும் எழுத்தை உத்தேசித்து இந்த ஸ்லோகம்  ' 'ய ' காரரூபா , சிவனே, உனக்கு  சாஷ்டாங்க நமஸ்காரம். .

சிவபஞ்சாக்ஷர ஸ்தோத்ரம் முற்றிற்று.
   
  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...