Friday, April 26, 2019

AANDAVAN PICHAI



தமிழ் புலவர்கள். சித்தர்கள், மஹான்கள்.
ஆண்டவன் பிச்சை. - J K SIVAN
மரகதமும் மயிலோனும்
அந்தக்கால மத்திம குடும்ப பெண்களைப்
போலவே மரகத்தம்மாவும் பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு நிறைய குழந்தைகள் பெற்றாள் . கணவன் நரசிம்மன் வக்கீல். பதிமூன்று வயது நிரம்பாத மரகதத்தின் முதல் குழந்தை உயிரற்ற பிண்டமாக பிறந்தது. (still-born child) அப்புறம் ஐந்து குழந்தைகள். கடைசி குழந்தை சேஷாத்திரி பிறந்த ரெண்டாம் நாள் மரகதத்துக்கு மீண்டும் முருகன் தரிசனம் தந்தான். மனதில் ஒரு மயக்கம் பிறந்தது. அடடா.. அப்புறம் கிட்டத்தட்ட 600 பாடல்கள் முருகன் மேல் பாடினாள் மரகதம். எல்லாமே ''பழணியான்டி, முருகாண்டி, என்று ஆண்டி யாக முடியும். குழந்தை பசியோடு அழுதபின் தான் மரகதம் பூலோகம் திரும்பினாள். அதற்குள் அத்தனை பாடல்கள். கடல் மடைபோல்.

''நீ ஒரு ஆத்தாவா... குளந்தை பசியில் பாலுக்கு அழுவுது. நீ என்னமோ சாமி பாட்டு பாடிக்கிட்டு இருக்கியே.. என்று அருகில் இருந்த ஆயா ம்மா குரலை உயர்த்தி பேசினாள் . அவள் சொன்னது உலக ஞாயம் தானே. அந்த ஆயா, மரகதத்தின் மாமியார் காவேரியம்மா
விடம் விஷயத்தை போட்டுக்கொடுத்து விட்டாள் . வீட்டில் கசமுசா.

''குழந்தையை கவனிக்கவில்லை என்பது இருக்கட்டும். பிள்ளை பெத்த தீட்டு இன்னும் தலைக்கு குளிக்கலை . தீட்டோடு சுப்ரமணிய ஸ்வாமிமேலே பாடலாமா? இதுமட்டுமா? ஸ்வாமியை ஆண்டி கீண்டின்னு அவமரியாதையோடு பாடினா தெய்வ குத்தம் சாபம் குடும்பத்துக்கு வந்து சேராதா?'' இப்படி ஒரு குற்றச்சாட்டு. காவேரியம்மா மரகதத்தின் அருள் பாடல்கள் அத்தனையும் எங்கு வாரி சுருட்டி ஒளித்து வைத்துவிட்டாள். கட்டாயப்படுத்தி மரகதத்திடம் ''இனிமே முருகன் மேலே பாடமாட்டேன், அவனைப்பத்தி வீட்டிலே பேசமாட்டேன்'' என்று சத்தியம் வேறு வாங்கிக்கொண்
டாள். சத்தியம் செய்து கொடுத்தாளே தவிர மரகதத்தின் நெஞ்சிலே, மனதிலே, இதயத்திலே அந்த பழனியாண்டி பெர்மனெண்டாக குடியிருந்தான். நல்லவேளை காவேரியம்மா மரகதத்தை கட்டாயப்படுத்தி ''இனிமே முருகனை ''நினைக்கவே மாட்டேன்'' என்று சத்தியம் வாங்கவில்லை. மேலும் குழந்தை பெரும் மெஷினாக வாழ்ந்தாள் மரகதம். வெங்கட்ராமன் என்கிற குழந்தை பிறந்தபோது ''செப்டிசீமியா'' நோய் பற்றிக்கொண்டது. அறுவை சிகிச்சை பண்ணினால் பிழைப்பாள் என்ற நிலை. மயக்க மருந்து (anaesthecia அந்த காலத்தில் chloroform கொடுப்பார்கள். ''மயக்க மருந்து வேண்டாம். அறுவை சிகிச்சை செய்யுங்கள். எந்த வலியும் தாங்குவேன்'' என்றாள் . முருகன் இருக்க மயக்கமருந்து எதற்கு என்று அவளுக்கு தெரியும். உடல் பற்றிய உணர்வு அவளை விட்டகன்றது. இன்னும் நிறைய குழந்தைகள் பெற்றாள். அந்தக்காலத்தில் பத்தில் ஐந்து ஆறு தங்காது. எஞ்சியது தப்பினால் அது தெய்வ சங்கல்பம். எங்கள் வீட்டில் நான் 13வது. என்னோடு சேர்த்து தப்பித்தது 4.. மரகதத்தின் உள்ளே மரகத மயில் மீது முருகன் எப்போதும் இருந்தான்.
'என்னைப் பாடு'' என்றான். மாமியாருக்கு சத்தியம் செய்து கொடுத்த மரகதம் மனதிற்குள்ளே பாடல்கள் இயற்றியும் பாடியும் ''முருகனுக்கு பாமாலை'' சூட்டினாள். காவேரியம்மா காலமான பிறகும் கணவன் குழந்தைகள் மேல் சத்தியம் செய்து கொடுத்ததால் மரகதம் முருகன் மீது பாடலை வெளிப்படையாக பாடவில்லை. ''கந்தா என் நிலை புரிகிறதா?'' நான் என்ன செய்வேன்? என்று மனதில் கதறினாள். அதற்கப்பறம் முருகன் அவள் நெஞ்சை விட்டகன்று விட்டான். ''ஐயோ உனக்கேன் கோபம். முருகா. மீண்டும் வா என் நெஞ்சில்'' என்று மனதிலேயே கெஞ்சினாள், கூவினாள்.

சிறிது நாளில் ஒரு குரல் அவளுக்குள் கேட்டது ''பைத்தியமே, நான் எங்கே போனேன்?, தேடு, உன்னுள்ளேயே இருக்கிறேனே'' என்றான் குமரன். முருகன் அவளுக்கருள் புரிந்ததால் பார்க்குமிடமெங்கும் நீக்கமற பரிபூரணானந்தமாக ஆறுமுகன் எங்கும் எதிலும் அவளுக்கு தோன்றினான். யசோதை ''வாயைத் திற '' என்று அதட்டி கண்ணன் வாயை திறந்ததும் மூவுலகும் அதில் தெரிந்ததே அது போல.

உறவுகளோடு ஒரு முறை ஸ்ரீசைலம் சிவ ராத்ரிதரிசனத்துக்கு சென்றுவந்தாள். பல வாரங்கள் அதற்கப்புறம் படுத்த படுக்கை. ஒருநாள் முடியாமல் ஒரு பேரக்குழந்தையை இடுப்பில் தாங்கி மாடிப்படி இறங்கினாள் . தலை சுற்றி மயக்கம்.தடுமாறி விழுந்தாள். மார்பு வலி. மாரடைப்பு. நினைவு தப்பியது. பிழைப்பதே கடினம் என்று ரெண்டு பிள்ளைகள், அவர்கள் டாக்டர்கள், பயந்தார்கள்.

அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...