Wednesday, April 17, 2019



ஐந்தாம் வேதம்   J K  SIVAN
பகவத் கீதை 

                                                          
                                 பார்த்தனும்  சாரதியும் 
                                                                                 
அந்த காலத்தில் யுத்த்தத்துக்கு  கூட  நல்ல நாள் நல்ல  நேரம் பார்த்து தான் கடவுளை வழிபாட்டு ஆரம்பிப்பார்கள். யுத்த தர்மம் பற்றி அப்புறம் விவரமாக  கூறுகிறேன்.  இப்போது திருதராஷ்ட்ரன்  துடித்துக்கொண்டிருக்கிறான்.   யுத்தம் ஆரம்பித்து விட்டதா? என்ன நடக்கிறது அங்கே?   கண்ணில்லாத  சஞ்சயன் தான்  கம்மெண்ட்ரி  கொடுக்கிறான். திவ்யசக்ஷு என்ற சக்தியை  பெற்று குருக்ஷேத்திரத்தில் யுத்த களத்தில் நடப்பது  அனைத்தையும் எடுத்து சொல்கிறான்.
                                                       
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, புனித  களமான குருக்ஷேத்திரத்தில் போரிடும் விருப்பத்துடன் ஒன்று சேர்ந்திருந்த எனது மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?"? (1:1)

"பாண்டவப் படையின் அணிவகுப்பைக் கண்ட  துரியோதனன், துரோணரிடம்  சொல்கிறான்:
"ஓ! குருதேவா, உமது புத்திசாலி சீடனான துருபதன் மகன் திருஷ்டத்யும்னனால் அணிவகுக்கப்பட்ட பாண்டு புத்ரன்  யுதிஷ்டிரனின்  இந்தப் பரந்த  சேனையை பாருங்கள்  (1:3)

பாண்டவர்கள் படையில்  பீமனுக்கும், அர்ஜுனனுக்கும் போரில் இணையானவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமை மிக்கவர்களுமான பல  வில்லாளிகள் இருக்கிறார்கள். அதோ பாருங்கள்  யுயுதானன் {சாத்யகி}, விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், (1:4) திருஷ்டகேது, சேகிதானன், பெரும் சக்தியுடைய காசி ராஜன், புருஜித், குந்திபோஜன், மனிதர்களில் பலம் மிகுந்த  காளை போன்ற சைப்பியன், (1:5) பெரும் ஆற்றல் படைத்த யுதாமன்யு, பெரும் சக்தி கொண்ட உத்தமௌஜஸ், சுபத்திரையின் மகன் {அபிமன்யு},திரௌபதியின் மகன்கள் ஆகியோர் ரதர்கள் என்ற புகழ்  பெற்ற  தேர் வீரர்களாக இருக்கிறார்கள் (1:6). (1:4-6)

ப்ராமணர்களில் உத்தமராக திகழ்பவரே , துரோணரே, நம்மில் புகழ்பெற்ற எவரெல்லாம் படைத்தலைவர் என்பதைக் கேளும். நீங்கள் சேனாபதி என்பதால் உமது கவனத்துக்கு இந்த விஷயத்தை கொண்டு வருகிறேன்.  (1:7)

த்ரோணராகிய நீங்கள், பீஷ்மர், கர்ணன், எப்போதும் வெல்பவரான கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், சௌமதத்தன் எனும்  சோமதத்தனின் மகன் பூரிஸ்ரவஸ்,  மற்றும் ஜெயத்ரதன்  (1:8) [1]. இவர்களைத் தவிர, போரில் சாதித்தவர்களும், பல்வேறு வகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவர்களும், எனக்காகத் தங்கள் உயிரையும் விடத் தயாராக இருக்கும் துணிச்சல்மிக்கவர்களுமாகப் பல வீரர்கள் இருக்கிறார்கள். (1:8-9)

''குருநாதா,  எனக்கென்னவோ  பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை  தேவையான, போதுமான அளவுக்குக் குறைவாகவே இருக்கிறது என தோன்றுகிறது.  அங்கே பாருங்கள்,   பீமனால் பாதுகாக்கப்படும் பாண்டவர்களுடைய சைன்யம் பிரமிப்பாக போதுமானதாக  கண்ணுக்கு  தோன்றுகிறது  என்கிறான்  துரியோதனன். [2]. 1:10 .  உண்மையில் பாண்டவ சைனியம் கௌரவ படையை

உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் படைப்பிரிவுகளின் நுழைவாயில்களில் உங்களை நிறுத்திக் கொண்டு {தங்கள் தங்கள் இடங்களில் இருந்தபடி}, பீஷ்மரை மட்டுமே நீங்கள் அனைவரும் பாதுகாப்பீராக" என்றான் {துரியோதனன்}. 1:11

(சரியாக அதே நேரத்தில்) வீரமிக்கவரும், மதிப்புக்குரியவருமான குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனுக்கு (துரியோதனனுக்கு) பெரும் மகிழ்வை அளிக்கும்படி உரத்த சிங்க முழக்கத்தைச் செய்தபடி, (தனது) சங்கை ஊதினார். 1:12

பிறகு, சங்குகள், பேரிகைகள் {மத்தளங்கள்}, தாறைகள், கொம்புகள் ஆகியன ஒரே சமயத்தில் முழக்கப்பட்டன. அப்படி (ஏற்பட்ட) இரைச்சல், உரத்த பெரும் ஆரவாரமாக மாறியது. 1:13

பிறகு, வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சிறந்த தேரில் இருந்த மாதவன்   (கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன் அர்ஜுனன் ஆகியோர் தங்கள் தெய்வீக சங்குகளை முழக்கினார்கள். 1:14

 ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, தனது  சங்கான பாஞ்சஜன்யத்தையும்   தனஞ்சயன் {அர்ஜுனன்}, தன்னுடைய சங்கான  தேவதத்தத்தையும்  முழக்கினர். பயங்கரச் செயல்களைச் செய்யும் விருகோதரன் {பீமன்}, பௌண்டரம் என்ற   தனது  பெரிய சங்கை ஊதினான். 1:15

குந்தியின் மகனான பாண்டவ மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயம்  எனும் தன்  சங்கையும்  நகுல சகாதேவர்கள்  தமது  சுகோஷம் மணிபுஷ்பகம் எனும்  சங்குகளையும்  முழக்கினர். 1:16

அற்புத வில்லாளியான காசி ராஜன்,  வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன்,  மஹா வீரன்  சாத்யகி, துருபதன், திரௌபதியின் பிள்ளைகள் , வலிய கரங்களைக் கொண்ட சுபத்திரையின் மகன் அபிமன்யு ஆகியோரும், இவ்வாறு    ஓ! பூமியின் தலைவா திருதராஷ்டிரா   வெவ்வேறு சங்குகளை முழக்கினார்கள். 1:17-18

 வானத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த உரத்த முழக்கம்,  கௌரவ சேனை வீரர்களின்  இதயங்களைப் பிளந்தது. 1:19

எதிரே  திரண்டு நின்று கொண்டிருந்த  அணி அணியாக  ஆயுதம் ஏந்திய  கௌரவ  துருப்புகளை அர்ஜுனன் நோக்குகிறான்.  ஹனுமான்  கொடியில் காற்றில் பறக்க,  அர்ஜுனன், தனது  காண்டீபத்தை உயர்த்தினான். சரியாக  அஸ்திரங்களை பொருத்தி வீசும்  நேரம் வந்து விட்டது.  ஓ! பூமியின் தலைவா,  திருதராஷ்டிரா,  அர்ஜுனன் திடீரென்று  கிருஷ்ணனிடம் பேசுகிறான்.. 1:20


"அழிவிலாதவனே, அச்யுதா, கிருஷ்ணா, போரிட விரும்பி நிற்பவர்களையும், இந்தப் போரில் நான் உழைப்பைச் செலுத்தி யாருடன் போராட வேண்டும் (1:22) என்பதையும்  நோக்கும் வகையில் எனது தேரை இரு படைகளுக்கும் இடையில் (ஒருமுறை) நிறுத்துவாயாக  (1:21). 1:21-22
தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகன் துரியோதனனுக்கு   உதவ  இங்கே கூடியிருப்பவர்களையும், போரிடத் தயாராக இருப்பவர்களையும் நான் முதலில்  உற்று நோக்க வேண்டும்''  என்றான் அர்ஜுனன். 1:23

சஞ்சயா  அப்புறம் நடந்ததை சொல்''
"ஓ! பாரதா,  திருதராஷ்டிரா,   உறக்கத்தை வென்ற  (குடாகேசன் )அர்ஜுனன் இப்படி சொன்னவுடன்  கிருஷ்ணன் இரண்டு படைகளுக்கும் மத்தியில், (1:24) பீஷ்மருக்கும், துரோணருக்கும், மன்னர்கள் அனைவருக்கும் எதிரில் அர்ஜுனனின் தேரை நிறுத்தி, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கூடியிருக்கும் இந்த கௌரவ சேனையைப்  பார்" என்றான் கிருஷ்ணன்  (1:25). 1:24-25



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...