Tuesday, April 23, 2019

ADHI SANKARAR



ஆதி சங்கரர் J K SIVAN

பவானித்வம்”

பவானித்வம் 2 என்ற பகுதி இன்று முகநூல் ஞாபகம் வைத்திருந்து எனக்கு அனுப்பியது. ஒரு வருஷம் முன்னாள் எழுதியது. அதை படித்தவர்கள். எங்கே சார் முதல் பகுதி. அதை படிக்க வில்லையே என்று கேட்டார்கள். நல்லவேளை. அதை எங்கோ ஜாக்கிரதையாக கம்பியூட்டரில் செருகி வைத்திருந்தேன். கண்டுபிடித்து இதோ உங்களுக்கு அனுப்பிவிட்டேன். அடுத்து 3ம் பகுதி. இதையும் 2ம் பகுதியும் படித்தபிறகு தானே 3வது. ஒரு நாள் இருக்கிறதே இன்னும்.


ஆதி சங்கரர் எழுதாத, தொடாத ஸ்லோகமா, ஸ்தோத்ரமா.... அடாடா! முப்பத்திரண்டு வயதில் முப்பத்து முக்கோடி தெய்வங்களையும் அறிந்த மஹான் அல்லவா. ஒரு எட்டு ஸ்லோகங்களை படித்தேன் பவானித்வம் என்று. பவானி நீ வேறு நான் வேறு அல்ல என்ற அத்வைத சார ஸ்லோகங்களில் தான் என்ன பக்தி பரிமளிக்கிறது. என்ன சரணாகதித்வம் இழையோடி இருக்கிறது. படித்துப் பாருங்களேன்.
நீங்களே கூட ''ஆமாமடா அப்பா'' என்று குருவாயூரப்பன் தலையாட்டினது போல தலை அசைப்பீர்கள்.
இன்று முதல் மூன்று. மீதி நாளைக்கு.

न तातो न माता न बन्धुर्न दाता
न पुत्रो न पुत्री न भृत्यो न भर्ता ।
न जाया न विद्या न वृत्तिर्ममैव
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥१॥

ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரீ ந ப்ருத்யோ ந பர்த்தா |
ந ஜாயா ந வித்யா ந வ்ருத்திர் மமைவ
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||1||

Na Taato Na Maataa Na Bandhur-Na Daataa
Na Putro Na Putrii Na Bhrtyo Na Bhartaa |
Na Jaayaa Na Vidyaa Na Vrttir-Mama-Iva
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||1||

I have no father or mother, nor any relation or friend, no helper with finance, I do not have a son or daughter, or any servant. There is no husband or wife for me. I have no education or knowledge or any job or profession. All that I said I dont have, are there only in your form to me, because I have none but you to save me my goddess O, the divine Bhavani ji:

அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடைய மாமனும் மாமியும் நீயே, பிள்ளையும் நீயே, பெண்ணும் நீயே, சகோதரனும் நீயே, சகோதரியும் நீயே, கணவனும் நீயே, மனைவியும் நீயே. பிள்ளையோ பெண்ணோ எதுவுமே நீயே தான். எனக்கு வேலைக்காரனோ, முதலாளியோ , செல்வமோ, கல்வியோ, வேலையோ ஊதியமோ எதுவுமே, ஏன் சகலமும் நீ தான் தாயே பவானி அம்மனே!

भवाब्धावपारे महादुःखभीरु
पपात प्रकामी प्रलोभी प्रमत्तः ।
कुसंसारपाशप्रबद्धः सदाहं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥२॥

பவாப்தாவபாரே மஹாதுக்க பீரு:
பபாத ப்ரகாமீ ப்ரலோபீ ப்ரமத்த |
குஸம்ஸாரபாசா ப்ரபத்த: ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||2||

Bhavaabdhaav-Apaare Mahaa-Duhkha-Bhiiru
Pa-Paata Pra-Kaamii Pra-Lobhii Pra-Mattah |
Ku-Samsaara-Paasha-Pra-Baddhah Sada-[A]ham
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||2||

This samsara, the ocean of a world, is limitless, and I am saddened and sorowful and am very much afraid when I think because of my expectations, desires, and jealousy and uncontrollable greed born of my madness like one intoxicated. I am very much exhausted and tired being caught up in the samsara. I do realise that O Bhavaniji, the divine mother, that you alone are my only hope who can relieve me of this bondage.

ஓ என் தாயே என் பவானி அம்மனே, நீயே கதி ஈஸ்வரி, இந்த மாயா உலகத்தின் துன்பக்கடலிலிருந்து என்னை மீட்க உன்னால் தான் அம்மா முடியும். என் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், கனவுகள், கோப தாபங்கள் எல்லாமே என்னை மேலே மேலே நீரில் மூழ்குபவன் கை கால்களை உதைத்துக்கொண்டு நீரைக் குடித்து இன்னும் ஆழத்துக்கு போவது போலே அமிழ்த்துகிறதே. அம்மா கருணைபுரிவாய் கடைக்கண்ணாலே தாயே.

न जानामि दानं न च ध्यानयोगं
न जानामि तन्त्रं न च स्तोत्रमन्त्रम् ।
न जानामि पूजां न च न्यासयोगं
गतिस्त्वं गतिस्त्वं त्वमेका भवानि ॥३॥

ந ஜானாமி தானம் ந ச த்யான யோகம்
ந ஜானாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ரமந்த்ரம் |
ந ஜானாமி பூஜாம் ந ச ந்யாஸயோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானீ ||3||

Na Jaanaami Daanam Na Ca Dhyaana-Yogam
Na Jaanaami Tantram Na Ca Stotra-Mantram |
Na Jaanaami Puujaam Na Ca Nyaasa-Yogam
Gatis-Tvam Gatis-Tvam Tvam-Ekaa Bhavaani ||3||

I dont know about helping others or giving any charity. I dont know how to meditate or do any yoga exercise. I am totally unaware of any Manthra or Thanthra, I cannot recite or chant or tell any prayer. In fact I dont know even how to worship, or indulge in any yogik practice. But you are my only solace and help, who can save me from this dark pit my mother O Bhavani, the divine goddess!

நான் என்னத்தை சொல்வேன்? எப்படிச் சொல்வேன்? என்ன தெரியும் எனக்கு? , தர்மம், தானம், உதவி, இதெல்லாம் பேரைக் கூட சரியாக தமிழில் எழுதத் தெரியாதே, எப்படி தர்மமோ தானமோ செய்திருப்பேன்? கண்ணை மூடி தூங்கியதைத் தவிர தியானமோ, யோகமோ, கடவுள் வாழ்த்தோ, சங்கீதமோ, ஸ்தோத்ரமோ எதுவும் தெரியாது.
மந்திரமோ தந்திரமோ எதுவும் தெரியாமல் சுதந்திரமாக வாழ்ந்த சோம்பேறி நான். ஆமாம் அம்மா, எனக்கு எதற்கு இதெல்லாம் தெரியவேண்டும். எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று, அது நீ. என் தாயே, பவானி அம்மனே, உன்னைத் தவிர எனக்கு எது தெரிந்து என்ன பயன் நீயே சொல்? என்னைக் காப்பாற்ற நீ இருக்க வேறு கவலை எனக்கு எதற்கு அம்மா?



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...