Sunday, April 21, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
பகவத் கீதை - 3ம் அத்யாயம் .

3. வினையும் பயனும்

எல்லோராலும் ஏகமனதாக சொல்லப்படும் ஒரு வாக்கியம். ''பகவத் கீதை எல்லாம் நம்மால் புரிந்து கொள்ள முடியாதுப்பா''. புரியற மாதிரி இருக்கும் ஆனால் புரியாது'' ஆமாம் சார் படிக்க ஆரம்பிக்கும்போதெல்லாம் சீக்கிரமாக தூங்கியே போயிடுவேன்''

உண்மையில் கீதை அப்படிப்பட்ட ஒரு பெயரை பெற்றாலும் வெகு எளிதாக புரியக்கூடிய ஒரு அற்புத பொக்கிஷம். நிதானமாக படிக்கவேண்டும். மர்மக்கதை , துப்பறியும் கதையைப் போல் அப்பறம் என்னஆச்சு என்று தேட வழியில்லை. உயர்ந்த வேதாந்த சாரம்.

நீ சொல்லும் இரு பொருள் கொண்ட வார்த்தைகள் எனக்கு தெளிவாகவில்லையே எனது அறிவு குழம்புகிறது. ன் நன்மையை அடையும்படியாக ஏதாவது நிச்சயமான ஒன்றை மட்டும் சொல்" என்றான் {அர்ஜுனன்}. 3:2


அர்ஜுனா, இங்கே இவ்வுலகில் ரெண்டு வகை நம்பிக்கைகள் இருக்கிறது என்று சொன்னேன், பக்தி ஞானம் என்று ஒன்று கர்மம் என்று ஒன்று. சாங்கிய சாஸ்திரம் பின்பற்றுபவர்கள் புத்தியின் அறிவின் மூலமும், கர்மயோக மார்க்கத்தை நம்பும் யோகிகள் வெவ்வேறு கருத்தை கொண்டவர்கள்.. 3:3


செயல்படாமல் இருப்பதால் மட்டும் ஓரு மனிதன் செயலில் இருந்து விடுபட்டுவிடுவதில்லை. அதேபோல, செயலைத் துறப்பதால் மட்டுமே அவன் முக்தியை அடைய முடியாது. 3:4


கர்மம் என்று சொல்லும்போதெல்லாம். நாம் செய்யும் செயல், எண்ணம் இரண்டையும் குறிக்கும். ஆகவே செயல் படாமல் யாராலும் ஒரு கணம்கூட இருக்க முடியாது. ஒவ்வொருவனுக்கும் உண்டான இயற்கையான குணங்களே அவசரமாகச் செயல்புரிய வைக்கின்றன. 3:5

ஒரு பக்கம் புலன் உறுப்புகளின் ஆட்டங்களை கட்டுப்படுத்திக்கொண்டு அதேசமயம் மனதால் புலன் திடும் நுகர் பொருள்களை நினைத்துக்கொண்டே ரெட்டை வேடம் போடுபவன் மூட ஆத்மா, நடிகன், போலியானவன். 3:6


அர்ஜுனா, மனத்தால் தனது புலன்களைக் கட்டுப்படுத்த முடிந்த ஒருவன், செயல் உறுப்புகளான (கர்மேந்திரியங்களினால்) செயல் பட்டு, பற்றில்லாமல் செயலாற்ற முடிந்தால் அவன் சிறப்பானவன். 3:7


ஆகவே தான் சொன்னேன். உனக்கென்று க்ஷத்ரிய தர்மத்தில் நீ உனக்கு விதிக்கப்பட்ட யுத்தத்தில் ஈடுபடு.

''இயற்கை குணத்தின் வேகத்தை முற்றிலும் மாற்றமுடியாது. அதைப் புரிந்து கொண்டு,கொஞ்சம் கொஞ்சமாக நல்ல வழியில் அதை மாற்றி சீர் பெறவேண்டும். விருப்புவெறுப்புகளில் சிக்கக் கூடாது. ஒவ்வொருவனுக்கும் பிரத்யேகமாக ஒரு தர்மம் (ஸ்வதர்மம்) உண்டு. அதை அனுசரித்து முன்னேறவேண்டும். ஒருவனது மற்றொருவனுடையதோடு பொருந்தாது. செயல்படாமல் இருப்பதை விட செயல்படுவது சிறந்தது. எதற்காக என்றால் உன் உடம்பைக்கூட உன்னால் பராமரித்துக் கொள்ள முடியாது. அது உன் வசத்தில் இல்லை.3:8


யாகயஞம் போன்ற செயல்களைத் தவிர மற்றதெல்லாம் ஏதோ ஒரு பற்றுதலால் விளைபவை. இதைத்தான் கர்மா பந்தம் கொண்டவை என்கிறோம். எனவே தான் சொல்கிறேன், பற்றை, விருப்பு வெறுப்பின்றி உன் செயலில் ஈடுபடு. 3:9


அந்தக்காலத்தில் விருப்பு வெறுப்பு எல்லாமே யாகயஞத்தில் தேவர்கள் மனம்வந்து அளித்ததாக இருந்தது. அவ்வாறு தேவ கிருபையால் கிடைத்ததை அனுபவித்துக் கொண்டு அவர்களுக்கு நன்றி காணிக்கையாக கைம்மாறு செய்யாதவன் திருடன் என்று ப்ரம்ம தேவனால் கருதப்பட்டான். 3:12


உணவை படைப்பதே இறைவனுக்காக என்று வேள்விகளில் அளித்து அதில் எஞ்சியதை பிரசாதமாக உண்பவனை பாபங்கள் அணுகாது. தனக்கென உணவை தயாரித்து உண்பவன் பாவத்தையும் உணவோடு பெறுகிறான். 3:13

உணவே அனைத்து உயிர்களும் வாழ பிரதானம். மழை யாகங்களால் உண்டாகிறது. யாகம் என்பது இங்கே செயல். கர்மா.3:14. அதனால் தான் நாம் எதை செய்தாலும் இறைவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு என்கிறோம். . இது இயற்கை. எனவே எல்லாக் காரியத்தையும் சர்வம் கிருஷ்ணார்ப்பணம் , ஈஸ்வரார்ப்பணம் என்று சமர்ப்பித்து விட்டு நம் கர்மாவை செயகிறோம். அர்ஜுனா என்மீது உன் பாரத்தை போட்டுவிட்டு உன் போர்த் தொழிலைச் செய்.'' என்றான் கிருஷ்ணன்.

செயல், கர்மா உண்டாக பிரம்மமே காரணம். சர்வ வேதங்களும பரமாத்மாவிடம் இருந்தே தோன்றியவை.

ப்ரம்மம் யாகங்களில் ஊடுருவி நிலைத்திருக்கிறது. 3:15 இப்படி வாழும் வாழ்க்கை காலச்சக்கரம். இதை பின்பற்றாதவன் வாழ்க்கை வீண். 3.16.

ஆத்மாவில் ஒன்றியவனாக, தன்னிலே பரமாத்மாவை அறிபவன் மன நிறைவு பெற்றவன். அவனுக்கு செயல் கர்மா எதுவும் இல்லை. 3:17 அவன் செயல், செயலின்மை எது பற்றியும் கவலை அற்றவன். பயன் கருதாதவன் 3.18

பற்று எதுவுமில்லாமல் செய்ய வேண்டியதை செய்பவன் பரமாத்வை அடைகிறான். 3.19.

ஜனகர் அப்படி வாழ்ந்தவர். பாமரர்கள் எப்படி பற்று வைத்து தமக்கு விருப்பப்பட்ட காரியங்களை செய்து கொள்கிறார்களோ அப்படி, ஒரு ஞானி சமுதாய நன்மைக்காக பற்றில்லாமல் எல்லாகாரியங்களையும் செய்பவன். ஜனகன் முதலானோர் அவாறு தான் பற்றற்று தமது கர்மங்களைச் செய்து புகழ் எய்தியவர்கள். துறவு பூணாத துறவிகள். இதால் தான்பெரியோர் உயர்ந்தோர் பாதையை மற்றோர் பின்பற்றுவார்கள். உதாரண புருஷராக அவரைக் கொண்டு நீ உன் செயலில் ஈடுபடு. 3.20. உயர்ந்த உதாரண புருஷர்களை மற்றவர்கள் பின் பற்றுகிறார்கள் 3.21

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு மேலும் சொல்கிறான்:

''அர்ஜுனா நான் கர்மமே அற்றவன் என்றாலும் நான் சோம்பலின்றி எண்டிசையும் மக்கள் என்னை பின்பற்ற, என் செயல்களில் ஈடுபடுகிறேன். நான் என் செயல்களை செய்யாமல் நிறுத்திவிட்டால் உலகங்கள் சீர்குலையும். நானே சீரழிந்தவர்களை அழிக்க நேரிடும். 3.23- 24.

அர்ஜுனா, எளிதாக சொன்னால் உனக்கு புரியும். நீ எப்படி உன் கடமையை செய்யவேண்டும் தெரியுமா?, அஞ்ஞானிகள், அறியாதோர், எப்படி செயலில் பயனை எதிர்பார்த்து பற்றுடன் செயல்படுவார்களோ, அப்படி, உன் செயலில் பற்றில்லாமல் அதை உன் ஸ்வதர்மமாக, கடமையாக கருதி யுத்தத்தில் ஈடுபடு. 3:25

'கிருஷ்ணா, எது ஒருவனை பாப கார்யம் செய்ய தூண்டுகிறது?

''அர்ஜுனா , நான் தான் சொன்னேனே. ஒவ்வொருவனும் அவனது குணத்தினால் உந்தப் பட்டு நல்லதோ, கெட்டதோ செயல் புரிகிறான். பிறவியோடு வந்த ரஜோகுணம் அது. அது ஒரு பிசாசு. மனிதனின் சத்ரு. அவனது மனதைப் புகைபோல் சூழ்ந்து கொண்டு ஆட்டிப் படைக்கிறது. கருவை அதன் கருப்பை சார்ந்தது போல, பளிங்கை அதோடு தொடர்பு கொள்ளும் அழுக்குபோல என்று கூட சொல்லலாம். இந்திரியங்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க பழகியவன் இதிலிருந்து விடுபடுகிறான். பலமுள்ள அவற்றை விட அறிவு அதிக பலம்பெற்றால் ('புத்திர் பலம் '') தான் மனத்தை அடக்க முடியும். காமம், குரோதம், மோகம், மதம் போன்ற சக்திவாய்ந்த உணர்வுகளிடமிருந்து தப்ப வைராக்கிய புத்திவளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவை ஜாக்ரதையாக ஒரு அளவுக்குள் அடக்கி ஆள வேண்டும். ஆணவம் இன்றி பாதுகாக்க வேண்டும். ஆத்ம விசாரம் பண்ணவேண்டும். இல்லையேல் வேலியே பயிரை மேயும்''.3:27

இயற்கையின் குணங்களால் மயங்கியோர், குணங்களால் செய்யப்பட்ட செயல்களில் பற்றுதலைக் கொள்கிறார்கள். சரியான அறிவு கொண்ட ஒருவர், நிறைவற்ற அறிவு கொண்ட அவர்களைக் {பற்றுதல் கொள்பவரைக்} குழப்பக் கூடாது. ஒவ்வொருவன் காணும், செய்யும் கர்மங்கள் அவன் குணத்தை ஒட்டியே அமைகிறது 3:29

அர்ஜுனா, ஆத்ம விசாரத்தில் உட்பட்ட உன் மனதால் உன் செயல்கள் அத்தனையும் எனக்கு அர்ப்பணித்து விட்டு செயலின் பயன் கருதாமல் போரிடு. 3.30 இப்படி செய்வதன் மூலம், நீ கர்ம பந்தத்திலிருந்து விடுபட்டு முக்தி அடைவாய் 3.31

மற்றவர்கள் மூலம் சரியாக செய்யப்படும் செயலை விட, ஸ்வதர்மத்தோடு ஒருவன் செய்யும் கர்மா, குறையோடு இருந்தாலும் அதுவே சிறந்தது. பரதர்மத்தை விட ஸ்வதர்மம் சிறந்தது என்று இதை சொல்வார்கள். ஸ்வதர்மத்தை புரிந்தபோது ஏற்படும் மரணம் போற்றத்தக்கது. 3,35

கிருஷ்ணா, தனக்கு விருப்பமில்லை என்றாலும் வேறொரு சக்தியால் தூண்டப்படுவதை போல ஒருமனிதன் யாருடைய, இதன் தூண்டுதலால் பாபத்தை செயகிறான் என்று சொல்? 3.36

அர்ஜுனா, பேராசையால் உண்டாவது தான் ஆசை, (காமம்), அது கோபத்தை (க்ரோதம்) வளர்க்கிறது. இது எல்லாவற்றையும் விழுங்கிவிடுகிறது. ஆகவே இதை நீ முதல் எதிரியாக கொள்ளவேண்டும். 3.37 நெருப்பை புகை மறைக்கிறது. கண்ணாடியை தூசி, அழுக்கு மறைக்கிறது, கருவை கருவறை மறைக்கிறது இல்லையா அது போல தான் ஞானத்தை, புத்தியின் செயல்பாட்டை, மேலே சொன்ன காம க்ரோதங்கள் மறைய செய்கிறது 3.38.

எனவே அர்ஜுனா மீண்டும் சொல்கிறேன், உன் ஸ்வதர்மமான க்ஷத்ரிய கடமையை, போரிடுவதை துவங்கு. புலன்களையம் அவற்றின் செயல்பாட்டையும் லக்ஷியம் செய்யாதே. விலக்கு .அது ஞானத்தை, தியானத்தை அழிக்கும். 3:41

உடலை, அதன் ஈடுபாடுகளை விட புலன்கள் உயர்ந்தவை, அதைவிட உயர்ந்தது மனம், அதை விட உயர்ந்தது புத்தி, ஞானம். இதெல்லாவற்றையும் விட உயர்ந்தது ஆத்மா. இதை புரிந்துகொண்டு செயல்படு. 3.42.



கிருஷ்ணனின் கீதோபதேசம் தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...