Saturday, March 10, 2018

VIVEKA CHOODAMANI

விவேக சூடாமணி - J.K. SIVAN

संन्यस्य सर्वकर्माणि भवबन्धविमुक्तये ।
यत्यतां पण्डितैर्धीरैरात्माभ्यास उपस्थितै: ।।10।।

saṁnyasya sarvakarmāṇi bhavabandhavimuktaye ।
yatyatāṁ paṇḍitairdhīrairātmābhyāsa upasthitaiḥ ।।-- 10.

ஆதி சங்கரர் ''விவேக சூடாமணியில் '' கூறும் ஒரு அறிவுரை. ஸந்யாஸத்தை மேற்கொண்டு ஆத்மாவை தேடுபவன், எல்லாவற்றையும் துறந்தவனாக, கற்றறிந்த விவேகியாக, திட சித்தத்துடன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும். அவனுக்கு ஜனன மரண பந்தங்கள் கிடையாது.

वदन्तु शास्त्राणि यजन्तु देवान् var पठन्तु
कुर्वन्तु कर्माणि भजन्तु देवताः ।
आत्मैक्यबोधेन विनापि मुक्ति- var विना विमुक्तिः न
र्न सिध्यति ब्रह्मशतान्तरेऽपि ॥ ६॥

vadantu shaastraaNi yajantu devaan
kurvantu karmaaNi bhajantu devataaH
aatmaikyabodhena vinaapi muktiH
na sidhyati brahmashataantarepi. 6

ஒரு விஷயம் தெரியுமா. என்னதான் வேதம் சாஸ்திரம், புராணம் உபநிஷத் எல்லாம் படித்திருக்கட்டுமே. எதிலிருந்து வேண்டுமானாலும் தலைகீழ் மனப்பாடமாக மேற்கோள் அள்ளி வீசட்டுமே , எவ்வளவோ தானம் தர்மம் பண்ணட்டுமே, யாகங்களில் பலி கொடுக்கட்டும், எல்லா ஆலயங்களிலும் பூஜை செய்யட்டும், ஆத்மாவை புரிந்துகொண்டு அதோடு ஐக்யமாகாதவனுக்கு எத்தனை ப்ரம்மாவின் நூற்றுக்கணக்கான யுகங்கள் ஆனாலும் முக்தி என்பதே கிடையாது. ஏன் ப்ரம்மாவின் ஆண்டுகளில் நூறு என்கிறார் தெரியுமா. நமக்கு ஒருவருஷம் பிரம்மாவுக்கு ஒரு நாள் என்பார்கள்.... அது பெரிய கணக்கு. தலை சுற்றும். (Brahma lives for 311 Trillion, 40 Billion Human Years = 311,040,000,000,000 (Trillion = 1 followed by 12 zeros = 1,000,000,000,000).

इत: कोन्वस्ति मूढात्मा यस्तु स्वार्थे प्रमाद्यति ।
दुर्लभं मानुषं देहं प्राप्य तत्रापि पौरुषम् ।।5।।

itaḥ ko nvasti mūḍhātmā yastu svārthe pramādyati .
durlabhaṁ mānuṣaṁ dehaṁ prāpya tatrāpi pauruṣam –5

அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது. அப்படி கிடைக்க முடியாத பிறவியைப் பெற்றும், அதுவும் கண்கவரும் தேஹ காந்தியோடு கூடிய உடலோடு பிறந்தவன், கம்பீர, தோற்றமுள்ளவன், இந்த வாழ்க்கை பாதை, அது கொண்டு சேர்க்கவேண்டிய முடிவு என்ன, அதில் நம்முடைய பொறுப்பு என்ன, நமக்கு எது சாஸ்வதம் என ஆத்ம சிந்தனை இன்றி மூடனாக வாழ்ந்து ஆத்ம ஞானமற்றவனாகி பயனற்ற வாழ்க்கை வாழும் முட்டாளாக இருந்து என்ன பிரயோஜனம்? என்கிறார் சங்கரர்

मृतत्त्वस्य नाशास्ति वित्तेनेत्येव हि श्रुतिः ।
ब्रवीति कर्मणो मुक्तेरहेतुत्वं स्फुटं यतः ॥ ७॥

amR^tatvasya naashaasti vittenety eva hi shrutiH
braviiti karmaNo mukter ahetutvaM sphuTaM yataH. 7

இரவும் பகலும் தேடி சேர்த்து வைக்கும் பணம் ஆபத்தை தான் வீட்டுக்கு கொண்டு வந்து சேர்க்கும். எல்லா நீதி நூல்களும், சாஸ்திரங்களும் திரும்ப திரும்ப சொல்கின்றனவே, ''அப்பனே, செல்வம் நிரந்தரமல்ல, உனக்கு அழிவற்ற இன்பத்தை என்றுமே அதால் தர முடியாது'' என்று. யார் காதில் வாங்கிக்கொள்கிறார்கள்.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், என்கிற உபயோகமற்ற அந்த ரெண்டுக்காக தானே அலைந்து தேடுகிறோம்.

अधिकारिणमाशास्ते फलसिद्धिर्विशेषत: ।
उपाया देशकालाद्या: सन्त्यस्मिन्सहकारिण: ।।14।

adhikāriṇamāśāste phalasiddhirviśeṣataḥ|
upāyā deśakālādyāḥ santyasminsahakāriṇaḥ ||14||

சுலபமில்லை. ஒரு ஆத்ம ஞான வேட்கை கொண்டவனுக்கு வெற்றி அவ்வளவு எளிதாக கிட்டாது. எத்தனையோ கிணறுகளை தாண்டவேண்டும். அவன் தீர்மானமானவனா, திட சித்தனா, அதற்கு நேரம் ஒதுக்குகிறானா, தக்க நேரம் காலம் உண்டா, சரியான பொருத்தமான இடத்தில் இருந்து கொண்டு அந்த தேடல் துவங்குகிறதா. ஊஞ்சலில் ஆடியவாறு பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு பட்டிமன்றம் பார்த்துக்கொண்டே ஆத்ம விசாரம் பண்ண முடியுமா? சூழ்நிலை அவசியம் இல்லையா? வரும் இடையூறுகளை எல்லாம் தாங்க பொறுமை, மனோதிடம் அவசியம்.

ஆதிசங்கரரிடம் இன்னும் நிறைய கற்க வேண்டியிருக்கிறது.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...