Wednesday, March 28, 2018

SUNDARAR

சுந்தர மூர்த்தி நாயனார் J.K. SIVAN கண்ணப்பன் லீலை சங்கிலியின் பெற்றோர்க்கு ஆச்சர்யம். நமது பெண் திருமணம் செயது கொள்ள சம்மதித்து விட்டாளா? சுந்தரரும் விட்ட குறை தொட்ட குறை சந்தோஷத்தில் மூழ்கி இருந்தார். பாவம் சிவனுக்கு தான் அதிக வேலை ரெண்டு பக்கமும் ஓடி கல்யாண சம்பந்தத்தை வெற்றிகரமாக முடித்து வைத்ததில். மறுநாள் காலை பொழுது விடிந்தது. மிகவும் மகிழ்ச்சியோடு சங்கிலி தொடுத்த மாலைகளோடு திருவொற்றியூர் தியாகராஜன் சந்நிதியில் நின்றாள். எப்படி அவளுக்கு முன்பே சுந்தரரும் அங்கே நின்று கொண்டிருந்தார். நாணிக்கோணி நின்ற சங்கிலியின் தோழிகள் சுந்தரரிடம் : '' ஐயா எங்கள் தோழி சங்கிலியாரின் நிபந்தனை ஒன்று இருக்கிறது. நீங்கள் அவரைத் திருமணம் செய்து கொள்ள ஏற்பாடுகள் நடந்தாகி விட்டது. நீங்களோ ஒரு இடத்தில் தங்காதவர். ஏற்கனவே மணமானவர். ஆகவே எங்கள் சங்கிலியாரை கைவிடமாட்டேன் எப்போதும் பிரியமாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டும்.'' ''ஆஹா நான் இதற்கு சம்மதிக்கிறேன்.'' ''அப்படி சொன்னால் போதாது. இதோ இங்கே நிறமும் ஒரு பச்சை மரம் சாட்சியாக அதை தெரிவிக்கவேண்டும்'' ''தியாகராஜா நீயே அந்த பச்சைமரம் உன் சாட்சியாக நான் பறவையை பிரியமாட்டேன் என்று சத்தியம் செய் கிறேன் '' என சுந்தரர் வாக்களிக்க சிவன் அவர் கண்களுக்கு அந்த பச்சைமரத்தில் காட்சி அளித்து வாழ்த்த சுந்தரர் சங்கிலி திருமணம் இனிது நடைபெற்றது. அங்கே திருவாரூரில் வசந்தோத்சவம் கோலாகலமாக நடைபெறுகிறது. பரவை ஆனந்தமாக அன்னதானம் நடத்தி தானும் பாடி ஆடுகிறாள். சுந்தரர் மனம் திருவாரூரில் இருந்தது. அங்கே போகவேண்டும், பரவையின் ஆடல் பாடல்களைக் காணவேண்டுமே . உடல் திருவொற்றியூரில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறதே. பல பல யோசனைகள்,எதிர்ப்புகள், சமாதானங்கள். முடிவில் திருவாரூர் போக நிச்சயமானது. சங்கிலிக்கு கொடுத்த வாக்கை, சத்தியத்தை மீறி சுந்தரர் கிளம்பிவிட்டார். திருவொற்றியூர் எல்லையைக் கூட தாண்டவில்லை. திடீரென சுந்தரரின் இரு கண்களும் குருடாயின. கீழே விழுந்தார். 'பரமேஸ்வரா, உனக்கு கொடுத்த வாக்கை மீறினது தவறு. உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். என்னை மன்னித்து பரவையைத் தேடி ஓடின எனக்கு பார்வையை கொடு. உன் திருவடியே சரணம்'' என கதறினார் சுந்தரர். சிறியேன் செய்த பிழையை பொருத்தருள்வது உன் கடமை அல்லவா? உனைக்கண்டு ஆனந்திக்க எனக்கு கண்கள் வேண்டாமா? யாரோ உதவ மெதுவாக திருமுல்லை வாயில் வருகிறார் சுந்தரர். இங்கும் சிவனை தரிசிக்க பார்வை வேண்டுகிறார். திருவெம்பாக்கம் செல்கிறார். அங்கும் வேண்டுகிறார் ''ஈஸா, என்னை ஆட்கொண்டவனே, உனைக் காணமுடியாமல் வணங்குகிறேன். எவ்வளவு அழகாக என் மனதை பேதலிக்க விட்டு என் கண்களை குருடாக்கி விட்டாய். நீ இங்கே ஆலயத்தில் இருக்கிறாயா ? '' ''சுந்தரா நான் இங்கே தான் இருக்கிறேன். உனக்கு ஒரு ஊன்று கோல் தருகிறேன் அதை உபயோகித்து நீ நடந்து போகலாம்'' ''பார்வதி பதே , என் மீது கோபம் வேண்டாம், நான் உன்னடிமை, என் மீது கருணை காட்டு. உன் அடியார்கள் நீ என்னிடம் கருணை இன்றி, உன் திருவடியில் கெஞ்சும் எனக்கு செவிமடுக்காமலிருந்தால் உன்னை ஏச மாட்டார்களா?'' அழுது புரண்டு, தாயினை பிரிந்த சேயாய் வாடுகிறேனே. சங்கிலியின் ஆசையை நிறைவேற்றி மகிழ்வித்த நீ என்னை தவிக்கவிடலாமா? ''-- கெஞ்சுகிறார் சுந்தரர். ''எல்லாம் விதி வழி '' என்று கோலை ஊன்றிக்கொண்டு சுந்தரர் காஞ்சிபுரம் செல்கிறார். வழியிலுள்ள சிவாலயங்கள் செல்கிறார். காஞ்சி காமாட்சியை வேண்டி ''நீயாவது உமாபதியிடம் சொல்லக்கூடாதா என்று கெஞ்சுகிறார். ஏகாம்பரேஸ்வரரை வேண்டுகிறார். காமாட்சிக்கு மனம் இரங்கிவிட்டது. பரமசிவனுக்கு அது புரிந்து விட்டது. சுந்தரரின் இடது கண் பார்வை பெறுகிறது. ஆனந்தத்தில் சுந்தரர் விழுந்து புரள்கிறார். அந்த கண்களில் ஆனந்த கண்ணீர் பிரவாகம். . சுந்தரர் திருவாரூர் செல்கிறார். போகும் வழியில் திருவாவடுதுறையில் ''பெருமானே எனக்கு மற்றொரு கண்ணிலும் பார்வை தரவேண்டும்'' என்று ஏங்குகிறார்.. அங்கிருந்து திருத்துருத்தி செல்கிறார். சிவனிடம் மன்றாடுகிறார். ''சுந்தரா, வடக்கே குளத்தில் நீராடு''. சிவனின் கட்டளையை நிறைவேற்றிய சுந்தரர் தனது உடல் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு அதிசயிக்கிறார். ஆலயத்தில் குழுமியிருந்த அனைத்து பக்தர்களும் இந்த அதிசயத்தை கண்டு வியக்கிறார்கள். சிவனின் சந்நிதியில் தன்னை மறந்து பாடுகிறார் சுந்தரர். இப்படியே சிலநாள் சென்று திருவாரூர் எல்லை வந்துவிட்டார் சுந்தரர். ''தியாகராஜா உன் திவ்ய தரிசனத்தை என் இருக்காங்களாலும் ஆனந்தமாக பெற்று மகிழ முடியவில்லையே என்று வருந்துகிறார். ஆலய கோபுரமே அவரை ஆனந்திக்க செய்கிறது. ஒரு கண் கண்ட இந்த திவ்ய அனுபவத்தை மற்றொரு கண் காண இயலவில்லையே என்ற ஆதங்கம் தியாகராஜனை இளக வைக்கிறது. வலது கண்ணிலும் பார்வை பெறுகிறார் சுந்தரர். அவரை விட ஆனந்தமான மனிதர் இன்றுவரை உலகில் யாருமே இல்லை என்று சொல்லலாம். சுந்தரர் பின்னால் செல்வோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...