Thursday, March 8, 2018

THIRUMANDHIRAM

திருவாவடுதுறையில் திருமந்திரம் - J.K. SIVAN

நமது தேசம் பெரும்பாலான பக்தர்களால் அனுபவிக்கப்படுவது விஷ்ணு பூமி அல்லது சிவபூமி` என்று தான். இருபாலாரும் ஒற்றுமையோடு தமது வழிபாட்டை தொடர்ந்து வந்தனர். மொத்தத்தில் தமிழுணர்ந்தவர்கள் போற்றிய பல நூல்களில் ஒன்று திருமூலரின் திருமந்திரம். அதன் சொற்கட்டு, உள்ளார்ந்த அர்த்தம் உயர்ந்த தத்துவத்தின் எளிய வெளிப்பாடு எல்லோர் நெஞ்சையும் கவர்ந்தது. அன்றும் இன்றும் என்றுமே. திருமந்திரம் பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறை.

திருமூலர் ஒரு யோகி. சாத்தனூர் என்ற ஒரு ஊரில் இருந்தபோது எதிரே ஒரு பசுக்களை மேய்க்கும் இடையனை பார்க்கிறார். நாம் இப்போது சொல்லும் MYOCARDIAL INFARCTION , திடீர் மாரடைப்பு, போல் ஒன்று. நேரிட்டு மாட்டிடையன் திடீரென்று இதயம் நின்று ஸ்தலத்திலேயே மரணம் அடைகிறான். மேய்ப்பவன் இன்றி கதறும் அந்த பசுக்களை யார் அவற்றின் வீடுகளில் கொண்டு சேர்ப்பது?? திருமூலர் ஒரு சித்தர். அஷ்ட சித்தியும் கைவரப்பெற்றவர். அந்த மாடு மேய்க்கும் இடையனது உடம்பிற் புகுந்து அவற்றை கொண்டு சேர்த்தார். மூலன் மனைவி ''ஏன் மூலன் என்னவோ போல் இருக்கிறான். வழக்கம்போல் இல்லையே என திகைத்தாள். மூலன் படிக்காதவன் உயர்ந்த தத்துவங்கள் எப்படி இன்று சாயந்திரம் பேசுகிறான் ? அவன் காலில் விழுகிறாள். ''என்னைத் தொடாதே என்கிறார் என்ற பற்றற்ற யோகி. கூடு விட்டு கூடு பாய்வதற்கு முன் தான் மறைத்து வைத்திருந்த தனது யோகியின் உடலைத் தேடி அதை காணாமல் கூடு பாய்ந்த மூலன் உடலுடனேயே, சிவ க்ஷேத்ரங்களை அடைகிறார். . திருவாவடுதுறை செல்கிறார். அம்மையப்பன் தரிசனம் மனதை இனிக்க வைக்க கோவிலின் மேற்கே ஒரு பெரிய வயதான அரசமரத்தடியில் அமர்கிறார். மூவாயிரம் வருஷம், வருஷத்துக்கு ஒன்று என்று அவர் இயற்றிய திருமந்திரம் நமக்கு கிடைத்தது நமது பாக்யம்..

ஒன்றவன் தானே, இரண்டவன் இன்னருள்,
நின்றனன் மூன்றினுள், நான்குணர்ந்தான், ஐந்து
வென்றனன், ஆறு விரிந்தனன், ஏழும்பர்ச்
சென்றனன், தானிருந் தானுணர்ந் தெட்டே. -தி.10 பாயி. பா.2

திருமந்திரம் உருவாகிறது. மூவாயிரம் முடிந்து திருமூல நாயனார் கைலாய பதவி அடைகிறது சிவனோடு இணைகிறார்.

பின்னை நின்றென்னே பிறவி பெறுவது
முன்னை நன்றாக முயல்தவஞ் செய்திலர்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே. -தி.10 பா.20

சிவ பெருமானுக்கு தமிழ் பிடிக்கும். மதுரையில் நக்கீரனோடு வாதம் செய்தவனல்லவா? தமிழை நீ நன்றாக சுவையாக பாடல்களாக எழுது எம் தமிழ் மக்களால் உன் அருந்தமிழில் அற்புத தத்துவங்களை, என்னை, அனுபவிக்கட்டும் என்று ''பலே, பலே என்று திருமூலர் முதுகில் ஷொட்டு கொடுத்தது போல் இருந்தது என விளக்கும் '' என்னை நன்றாக படைத்தனன் தன்னை நன்றாக தமிழ் செய்யும் பொருட்டு'' என்கிறார் பாருங்கள்.

சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனைச்
சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை
சேர்ந்திருந் தேன்சிவ போதியின் நீழலிற்
சேர்ந்திருந் தேன்சிவன் நாமங்கள் ஓதியே. -தி.10 பா.18

அந்த உமாபதியை சேர்ந்து விட்டேன். திருவாவடுதுறையில் தான் சேர்ந்தேன். அந்த அரசமரத்தடியில் அவன் என்னை ஆட்கொண்டான், சிவன் நாமங்கள் சொல்லி சிவனோடு இணைந்துவிட்டேன் என்கிறார்.

திருவாவடுதுறையில் சிவன் பெயர் கோமுக்தீசுவரர். சுயம்பு மூர்த்தி . ஒப்பில்லாமுலைநாயகி . இவ்வாலயம் காவிரியின் தென்கரையில் 36ஆவது சிவஸ்தலம். நாகப்பட்டினம் மாவட்டம். பத்து ஏக்கர் நிலப் பரப்பு. ஐந்து நிலை ராஜ கோபுரம், மூன்று பிராகாரங்கள். வடக்குப்புற வாசலில் புதிதாக மூன்று நிலை ராஜகோபுரம் கண்ணைப்பறிக்கும். இந்த ஊர் மயிலாடுதுறையில் இருந்து 20 கி.மீ. நரசிங்கன்பேட்டை இரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே 3 கி.மீ.

ஒரு சின்ன ஒருவரி கதை. திருவாவடுதுறை சிவபக்தரான ராஜா, திருமாளிகைத் தேவர் மீது நரசிங்க புர ராஜா போரிட்டபோது அவனை ஜெயிக்க அம்பாள் திருவாவடுதுறை கோயில் மதில் மீது இருந்த எல்லா நந்திகளையும் ஒரே பெரிய நந்தியாக்கி அவனை வென்றதால் இந்த கோயில் சுவற்றில் நந்திகள் கிடையாது.. இங்கே தான் விஸ்வரூப நந்தி.தஞ்சை பெரிய கோயில் பெரிய நந்தியைவிட பெரிசு.





திருஞானசம்பந்தருக்கு சிவன் ஆயிரம் பொற்காசுகள் வழங்கிய ஸ்தலம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...