Wednesday, March 21, 2018

VEMANA

தேனான வேமனா - J.K. SIVAN

Apadaina velanarasi bandhula joodu................ఆపదైన వేళ నరసి బంధుల జూడు
bhayamuvela joodu bantu tanamu...................భయమువేళ జూడు బంటు తనము
Pedavela joodu pendlamu gunamu...................పేదవేళ జూడు పెండ్లము గుణము
Viswadhaabhuraama, Vinura Vema................విశ్వధాభిరామ, వినుర వేమ

கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் உனக்கு வரும் வேளையில் தான் உன்மேல் உன் பந்துக்களின் அக்கறை எவ்வளவு என்பது தெரிந்துகொள்வாய் . உன் எதிரிகளின் பலத்தை நீ பயத்தில் இருக்கும்போது புரிந்துகொள்வாய். நீ எல்லாம் இழந்து பரம ஏழையாகும்போது தான் உன் மனைவி யார் என்பது புரியும். இல்லானை இல்லாளும் வேண்டாள் பாட்டு அர்த்தம் ''நச்'' சென்று புரியும்.

Chippalonabadda chinuku mutyambayye....................చిప్పలోనబడ్డ చినుకు ముత్యంబయ్యె
nitabadda chinuku nita galise....................................నీటబడ్డ చినుకు నీట గలిసె
Brapti galugu chota phalamela tappura......................బ్రాప్తిగలుగు చోట ఫలమేల తప్పురా
Viswadhaabhiraama, Vinura Vema........................... విశ్వధాభిరామ, వినుర వేమ

மழை பெய்கிறதே அதில் எங்கோ ஒரு சொட்டு வாய் திறந்த சிப்பிக்குள் வீழ்ந்தால் முத்தாகிறது.
பெரிய சமுத்ரத்தில் அது வீழ்ந்தபோது கடல் நீரோடு கலந்து அடையாளமில்லாமல் உப்பு நீராகிறது.
புரிந்துகொள். உண்மையான பக்தி உனக்கிருந்தால் அதன் பலன் மேன்மையானதென்று

Veshabhashalerigi Kashayavastramul...................వేషభాషలెరిగి ఖాషాయవస్త్రముల్
gattagane mukti galugabodhu...............................గట్టగానె ముక్తి గలుగబోదు
talalu bodulina talapulu bodula.............................తలలు బోడులైన తలపులు బోడులా
Viswadhaabhiraama, Vinrua Vema.......................విశ్వధాభిరామ, వినుర వేమ
வெறும் வேஷம் போட்டுக்கொள்வதால் நீ மதிக்கபடமாட்டாய். கதர் சட்டை தொப்பி ஒருவனை காந்தி ஆகாது. கதர் வேஷ்டி காமராஜாக்கி விடாது. பேச்சின் தோரணை மாற்றிக்கொண்டதால் நீ உயர்ந்துவிட மாட்டாய். உன் காவியுடையும், மொட்டைத்தலையோ தாடியோ, ஜடாமுடியோ, உனக்கு மோக்ஷத்தை அளிக்காது. உன் எண்ணமும் செயலும் தான் உன் மதிப்பின் எடை கல். புரிந்துகொள்.

Cheppulona rayi chevilona joriga...................చెప్పులోన రాయి చెవిలోన జోరీగ
kantilona nalusu kali mullu.............................కంటిలొన నలుసు కాలి ముల్లు
intilona poru intinta gadaya............................ఇంటిలోన పోరు ఇంతింత గాదయ
Viswadhaabhiraama, Vinura Vema................ విశ్వధాభిరామ, వినుర వేమ

அன்றாட வாழ்வில் எது துன்புறுத்தும்? . செருப்புக்குள் மாட்டிக்கொண்டு காலை உறுத்தும் ஒரு துண்டு கல். காதைச் சுற்றி சுற்றி பறந்துகொண்டு கத்தும் கொசுவோ ஈயோ. கண்ணில் நுழைந்து உறுத்தும் தூசி, காலுக்குள் குத்தி உள்ளே உடைந்து போன ஒரு முள், வீட்டில் மனைவியோடும் குழந்தைகளோடும் மற்றவரோடும் நீ போட்ட சண்டை. உன்னால் இதையே தாங்கமுடியவில்லையே நீ எப்படி மற்றவர்கள் துன்பத்தைத் தீர்க்கபோகிறாய் ?

Tappulennuvaru Tandopatandambu...................తప్పులెన్నువారు తండోపతండంబు
Lurvi janulakella nundu tappu............................లుర్వి జనులకెల్ల నుండు తప్పు
Tappu lennuvaru tamatappu lerugaru................తప్పు లెన్నువారు తమతప్పు లెరుగరు
Viswadhaabhiraama, Vinura Vema................... విశ్వధాభిరామ, వినుర వేమ

உன்னைச் சுற்றிப்பார். எங்கே எதில், எதால் தப்பு கண்டுபிடிக்கலாம் என்று அலைவோரையே தான் பார்க்கிறோம். தப்பில்லாதவன் யாரேனும் ஒருவன் உண்டா? மற்றவன் தப்பை எண்ணுகிறவன் தன்னிடம் உள்ள கூடை தப்புகளை ஏன் எண்ணிப்பார்க்கவில்லை. ஆஹா இது என்ன வேடிக்கை! யோசித்து பாரடா வேமா என்று தன்னை கேட்டுக்கொள்கிறார் வேமனா.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...