Thursday, March 15, 2018

KUNTHIS PRAYER



குந்தியின் பிரார்த்தனை 7 J.K SIVAN

ஒரு தாயின் குமுறல்

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. கிருஷ்ணனின் குதிரைகள் தயார் நிலையில் இருந்தும், தாருகன் கிருஷ்ணனின் உத்தரவுக்கு காத்திருக்கிறான். வெகு தூரம் துவாரகைக்கு பிரயாணம் செய்யவேண்டும். ஆனால் குந்தியோ கிருஷ்ணனை விட்ட பாடில்லை. கெஞ்சுகிறாள், கிருஷ்ணனை போற்றுகிறாள், பிதற்றுகிறாள். அமைதியாக கிருஷ்ணன் அவளை புன்சிரிப்புடன் பார்த்துக்கொண்டு ரசிக்கிறான்: குந்தி தொடர்கிறாள்.


भारावतारणायान्ये भुवो नाव इवोदधौ ।
सीदन्त्या भूरिभारेण जातो ह्यात्मभुवार्थित: ॥१९॥

''கிருஷ்ணா, யார் யாரோ சொல்லி நான் கேட்டேனே. நீ ப்ரம்மாவின் பிரார்த்தனையால் இந்த பூமியில் அவதரித்தவனாம். எப்படி நீர் பரப்பில் செல்லும் படகு எல்லா சுமைகளையும் சுமந்து அக்கரைக்கு கொண்டு செல்கிறதோ நீ இந்த உலக வாழ்வில் என் போன்றோர்களுக்கு எல்லாம் விளையும் துன்பச்சுமையை சுமப்பவன், மோக்ஷத்திற்கு கொண்டு செல்பவன்.. உன்னை எப்படி போற்றுவேன்?

भवे sस्मिन्क्लिश्यमानानामविद्याकामकर्मभि: ।
श्रवणस्मणार्हाणि करिष्यन्नति केचने ॥२०॥

இன்னும் கூட உன்னைப் பற்றி சில அருமையான விஷயங்கள் அறிந்தேன் கண்ணா. நீ அஞ்ஞானிகள், அறியாதவர்கள், என்னைப்போல உலக நாட்டங்களின் ஆசையாலும், உணர்ச்சிகளாலும், அறியாமையாலும் அவதிப்படுவர்களை உன்னைப் பற்றி கேட்க, தெரிந்துகொள்ள, வழிபட மாற்றிக்கொள்ள, திருந்த உதவுபவனாம்.

शृण्वन्ति गायन्ति गृणन्त्यभीक्ष्णश: स्मरन्ति नन्दन्ति तवेहितं जना: ।
त एव पश्यन्त्यचिरेण तावकं भवप्रवाहोपरमं पदाम्बुजम् ॥२१॥

ஆமாம் கிருஷ்ணா, நான் இப்போது நன்றாக புரிந்துகொண்டுள்ளேன். உன்னைப்பற்றி செவிகுளிர கேட்பதாலும், உன் நாமங்களை ஓதுவதாலும் , உன்னை ஸ்மரணம் செய்து கொண்டு இருப்பதாலும் வெகு சீக்கிரம் அவர்களை உன் தாமரைத் திருவடிகளை அடையச்செய்வதோடு, இனி பிறவியற்று இன்பமாக மோக்ஷம் அடையச் செய்பவன்.

अप्यद्य नस्त्वं स्वकृतेहित प्रभो जिहाससि स्वित्सुहृदो sनुजीविन: ।
येषां न चान्यद्भवत: पदाम्बुजात्परायणं राजसु योजितांहसाम् ॥२२॥

என் தெய்வமே, கிருஷ்ணா, நீ எங்களுக்கு உதவியது கொஞ்சமா நஞ்சமா? எங்களை எதிர்த்து போரிட்டோர் எல்லாம் போய்விட்டனர், உன்னையே நம்பி, உன் கருணையால் உயிர் வாழும் நண்பர்களை, உன் திருவடி தொட்டு வணங்க வைத்து நீ விடை பெருகிறாய்.

के वयं नामरूपाभ्यां यदुभि: सह पाण्डवा: ।
भवतो sदर्शनं यर्हि हृषीकाणामिवेशितु: ॥२३॥

நீ இன்றி , நாங்கள், இந்த யது வின் நாம ரூப மஹிமையின்றி பாண்டவர்கள் கண்ணா, வெற்றி பெற்று புகழ் அடைந்திருப்போமா? எங்கள் நிலை, உயிரற்ற, உணர்ச்சியற்ற பிரேதமாக அல்லவோ இருந்திருக்கும்.

नेयं शोभिष्यते तत्र यथेदानीं गदाधर ।
त्वत्पदैरङ्किता भाति स्वलक्षणविलक्षितै: ॥२४॥

ஒன்று நிச்சயம் இந்த ஹஸ்தினாபுரம் சாம்ராஜ்யம், இனி உன் காலடி இன்றி, இப்போதிருக்கும் பொலிவை, மஹோன்னதத்தை, இனி நிச்சயம் அடையப்போவதில்லை கிருஷ்ணா.

इमे जनपदा: स्वृद्धा: सुपक्वौषधिवीरुध: ।
वनाद्रिनद्युदन्वन्तो ह्येधन्ते तव वीक्षितै: ॥२५॥

ஆமாம் கிருஷ்ணா, இந்த நாடே, நகரமே, தெருக்களே , உன் கடைக்கண் பார்வையால் எங்கும் வளமாக , செடியும், கொடியும், காயும் கனியும், வேரும் கிழங்குமாக, காடும் மலையும், வனமும், நதியும், மலையும் , கடலுமாக சுபிக்ஷமாக இருக்கிறதே, இனி அந்த காட்சி மாறிவிடும்.

अथ विश्वेश विश्वात्मन्विश्वमूर्ते स्वकेषु मे ।
स्नेहपाशमिमं छिन्धि दृढं पाण्डुषु वृष्णषु ॥२६॥

என் தெய்வமே, பிரபஞ்ச காரணனே இனி எனக்கு உறவு ஒன்றில்லை, பாசம் எவரிடமும் இல்லை. எல்லாம் நீ ஒன்றே.

त्वयि मे sनन्यविष्या मतिर्मधुपते sसकृत् ।
रतिमुद्वहतादद्धा गङ्गेवौघमुदन्वति ॥२७॥



கங்கை பிரவாகமாக கடலை நோக்கி ஓடுவது போல் என் மனம் விடாமல் உன்னை துரத்தி துரத்தி உன்னையே நாடி ஓடச்செய்வாய் கிருஷ்ணா.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...