Sunday, March 11, 2018

KRISHNA KARNAMRUTHAM

ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்ருதம் -- J.K. SIVAN

லீலா சுகர் எனும் பில்வமங்கள் எழுதிய கிருஷ்ண கர்ணாம்ருதம், சரியான பெயரைக் கொண்ட ஒரு பாடல் திரட்டு என்று சொல்வதை விட திரட்டுப் பால் என்று சொல்லலாம் போல் இருக்கிறது.


कमनीय किशोर मुग्ध मूर्तेः कल वेणु क्वणित आदृत आनन इन्दोः
मम वाचि विजृम्भताः मुरारेः मधुरिम्णः कणिक अपि कापि कापि 1.7

kamanīya kiśora mugdha mūrteḥ kala veṇu kvaṇita
ādṛta ānana indoḥ mama vāci vijṛmbhatāḥ
murāreḥ madhurimṇaḥ kaṇika api kāpi kāpi

கண்ணனை ஒருமுறை பார்த்தால் கண்ணை அவன் மீதிருந்து மீண்டும் எடுக்க முடியாது. எல்லோரும் தேடும் அவ்வளவு கவர்ச்சியான கம்பீர சிங்கக்குட்டி அவன். ஆஹா என்ன அழகான காந்த சக்தி கொண்ட கருணை ஒளி வீசும் தேனில் தோய்ந்த சந்த்ரோதய தாமரை முகத்தில் விவரிக்க இயலாத அபூர்வ கண்கள். அவன் வைத்திருக்கும் வம்ஸி என்ற புல்லாங்குழல் அவனுக்கேற்றவாறே புகழ் வாய்ந்ததாக இருக்கிறதே. எப்படி தான் அதிலிருந்து நெஞ்சை அள்ளும் கொஞ்சும் இசையமுதம் ஊற்றாக பெருகுகிறதோ? அதை எப்படி எந்த வார்த்தையால் எழுதுவேன். அந்த இன்ப நாதம் ஒரு துளியாவது என் நாவில் விழுந்தால் கொஞ்சம் விவரித்து சொல்ல முயற்சிப்பேன். அல்லது எழுத முயல்வேன்.

निखिल भुवन लक्ष्मी नित्य लील आस्पदाभ्याम्
कमल विपिन वीथी गर्व सर्वन्+कषाभ्याम्
प्रणमत् अभय दान प्रौढि गाढ उद्दताभ्याम्
किम् अपि वहतु (मम) चेतः कृष्ण पाद अम्बुजाभ्याम् 1.12

nikhila bhuvana lakṣmī nitya līla āspadābhyām
kamala vipina vīthī garva sarvan+kaṣābhyām
praṇamat abhaya dāna prauḍhi gāḍha uddatābhyām
kim api vahatu (mama) cetaḥ kṛṣṇa pāda ambujābhyām

ஹே மரகத சியாமா, கிருஷ்ணா, பொன்னொளி வீசி பூமியை பிரகாசிக்கச்செய்யும் உனது அந்த சிறிய தாமரைப் பாதங்களின் அழகை எப்படி எடுத்துச் சொல்வேன். மூவுலக தெய்வங்களும் போற்றும் அந்த திவ்ய தாமரைப் பொற் பாதங்களை நான் எப்படி வர்ணிப்பேன். ஒருவேளை எனது நெஞ்சு என்கிற ஓடை அவனது திருப்பாத அழகின் எண்ணங்களை பக்திக்காற்றில் தன்மேல் மிதக்கவிட்டுன்கொண்டு எங்குமே ஓடட்டும்.


प्रणय परिणताभ्याम् प्राभव आलम्बनाभ्याम् (श्रीभर आलम्बनाभ्यम्)
प्रतिपद ललिताभ्याम् प्रति अहम् नूतनाभ्याम् प्रति मुहुर् अधिकाभ्याम्
प्रस्नुवत् (प्रस्फुरत्) लोचनाभ्याम् प्रभवतु(प्रवहतु) हृदये नः प्राण नाथः किशोरः

praNayapariNatAbhyAmprAbhav.a.alambanAbhyAm
pratipadalalitAbhyAm pratyaham nUtanAbhyAm |
pratimuhuradhikAbhyAm prasnuvallochanAbhyAm
prabhavatu hR^idaye naH prANanAthaH kishoraH || 1-13
(mAlinI)

கிருஷ்ணா, உனது கண்கள் ஒரு சாம்ராஜ்யத்தை ஆளும் அரசன் போல் பார்ப்பவர்களை,அன்புடன், கருணையோடு வழிநடத்துகிறதே. ஒவ்வொரு கணமும் அதன் காருண்யம் பெருகிக்கொண்டே போகிறதே. எங்கள் இதயம் உன் பார்வையில் பயனுற்று எங்கள் வாழ்க்கையை இன்பகரமான மாற்றட்டும்.

माधुर्य वारिधि मद अन्ध(मद अम्बु) तरंग भंगी
शृंगार संकुलित शीत किशोर वेषम्
आमन्द हास ललित आनन चन्द्र बिम्बम्
आनन्द संप्लवम् अनुप्लवताम् मनः मे 1.14

mādhurya vāridhi mada andha (mada ambu) taraṁga
bhaṁgī śṛṁgāra saṁkulita śīta kiśora veṣam
āmanda hāsa lalita ānana candra bimbam
ānanda saṁplavam anuplavatām manaḥ me

கிருஷ்ணா, நீ சிறுபையனா. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி ரொம்ப பெரியதாக இருக்கிறதே. உன் வதனமே சந்திர பிம்பமோ! அதிலிருந்து தான் அமிர்தம் உற்பத்தியாகிறதோ! உனது கடைக்கண் பார்வை உலகையே கட்டி ஆள்கிறதே. அந்த கருணைக்கடலில் என் இதயமும் ஆனந்தமாக மிதக்கட்டும். இந்த மாபெரும் பரிசுத்த அமிர்த கடலில் எங்கேயாவது பாபம் என்கிற மண் அதை கறை படுத்தமுடியுமா?


अव्याज मंजुल मुख अंबुज मुग्ध भावैः आस्वाद्यमान
निज वेणु विनोद नादम् आक्रीडताम् अरुण पाद सरो रुहाभ्याम्
आर्द्रे मदीय हृदये भुवन आर्द्रम् ओजः 1.15

avyAjama~NjulamukhAmbujamugdhabhAvai
rAsvAdyamAnanijaveNuvinodanAdam|
AkrIDatAmaruNapAdasaroruhAbhyA-
mArdre madIyahR^idaye bhuvanArdramojaH || 1-15

கிருஷ்ணா, நீ தனிமையில் எங்கோ ஒரு இன்பகரமான சூழ்நிலையில் பிருந்தாவனத்தில் குழல் ஊதுகிறாய். இது ஒரு நிகழ்வு. ஆனால் அதன் பிரதிபலிப்பு?? உன்னுடைய அரை மூடி அரை திறந்த கண்களின் குளுமை தான் மட்டும் அல்லாமல் உன் வேய்ங்குழலில் பிறக்கும் அமுத கானத்தேனோடு கலந்த தெள்ளமுதாய் நெஞ்சை உருகிஓடச்செய்கிறதே. ஆஹா இந்த பிரபஞ்சமே நனைகிறதே!


தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...