Saturday, April 2, 2022

SURDAS

 ஸூர்தாஸ் -   நங்கநல்லூர்  J K SIVAN 


என் நாவில் உன் நாமம்.....

நாம்  யாரை  வேண்டுகிறோம். மனிதர்களால் முடியாத  ஒன்றை  செய்யக்கூடியவனை/வளை , தெய்வம் என்று போற்றி  வணங்குகிறோம்.  அப்படி  தீனரக்ஷகன் , ஆபத் பாந்தவன் , அனாதை ரக்ஷகன் யார்  என்று எல்லோருக்கும் தெரியும். அந்த பெயரால் அழைக்கப்படுபவன் கிருஷ்ணன். காக்கும் தெய்வம் அல்லவா?

புராணங்கள் எத்தனை பாடுகிறது அவன்  தயாள செயல்கள், லீலைகள் பற்றி.  ஏழைக்கருள்பவன். தீயவர்களைத் திருத்தி  நல்வழிப்படுத்துபவன்.  திருந்தாதவர்களை அழிப்பவன்,  பாரபக்ஷமின்றி தேவர்கள், மனிதர், விலங்குகள், பறவைகள், நீர்வாழ், நிலம் வாழ் ஜந்துக்கள்  அனைத்தையும்  ரக்ஷிப்பவன் கிருஷ்ணன் என்கிறது.  பவசாகரத்திலிருந்து நம்மை  அக்கரை  சேர்ப்பவன்.
அஜாமிளன், பிங்களா, கருடன், பிரஹலாதன், கஜேந்திரன்,  துருவன், போன்றோர்  கதைகதையாக சொல்வார்களே.    திரௌபதி மான சம்ரக்ஷணம் கதை ஒன்றே  போதாதா?.

வானரங்களை வைத்துக்கொண்டே  சமுந்த்ரத்தில் சேது பந்தனம் செய்து லங்காபுரியில் ராவணேஸ்வரனை வதம்  செய்தவன் அல்லவா.   ஆதிமூலமே, கேசவா,  ஆபத்பாந்தவா,  ஹரி,  என்று ஒரு குரல் எழுப்பினால் போதுமே,  எங்கிருந்தாலும் அது அவன் காதில் விழும். அடுத்த கணமே அவன் வந்து நிற்பான் நம்மை காக்க. 

இந்த கந்தலாடை  கண்ணற்ற பிச்சைக்காரன்  ஸூர்தாஸ், கண்ணா, உன் வாசலில் நிற்கிறேன். உன் கருணையில் எனக்கும் கொஞ்சம் பங்கு கொடேன்.  
ரொம்ப சின்ன, மிக அருமையான  ஸூரதாஸ்  பஜனை பாடல் இது:  ஹிந்தி தெரிந்தவர்கள் ஏன் மற்றவர்களும் கூட இப்போது அர்த்தம் தெரிந்துகொண்டு பாடலாமே.அல்லது கேட்கலாமே. 

दीनन दुःख हरण देव संतन हितकारी ॥टेक॥
दीनन दुःख हरण देव संतन हितकारी ॥टेक॥

अजामील गीध व्याध इनमें कहो कौन साध ।
पंछी को पद पढ़ात गणिका सी तारी ॥१॥

ध्रुव के सिर छत्र देत प्रह्लाद को उबार लेत ।
भगत हेतु बांध्यो सेतु लंकपुरी जारी ॥२॥

तंडुल देत रीझ जात सागपात सों अघात ।
गिनत नहीं जूठे फल खाटे मीठे खारी ॥३॥

गज को जब ग्राह ग्रस्यो दुस्सासन चीर खस्यो ।
सभाबीच कृष्ण कृष्ण द्रौपदी पुकारी ॥४॥

इतने हरि आय गये, वसनन आरूढ़ भये
‘सूरदास’ द्वारे ठाढ़ो, आँधरो भिखारी

Deenan dukh haran dev santan hitkari
ajamil geedh byadh inme kah kaun saadh
panchhi ko pad padhaat ganika si taari
dhruva ke sar chhatra det prahalad ko ubari det
bhakta hetu bandhyo setu lankpuri jaayi
gaj ko jab grah grasyo
duhshashan cheer khasyo
sabha beech krishna krishna draupati pukari
itne hari aaye gaye basnan aaroorh bhaye
surdas dware khado aanadhro bhikhari


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...