Wednesday, April 6, 2022

BRAHMA MUHURTHAM

ப்ரம்ம முஹூர்த்தம்  -   நங்கநல்லூர்  J K   SIVAN 

அன்றாட வாழ்க்கையில்,  வீட்டில் விசேஷங்களின் போது , அடிக்கடி கேள்விப்படும் ஒரு வார்த்தை  ''ப்ரம்ம முஹூர்த்தம்''. அப்படி என்றால் என்ன?

 பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரையில் உள்ள காலம் ஆகும். பிரம்ம னுடைய சக்தி தேவியான சரஸ்வதி தேவி விழித்துக்  கொண்டு  செயல்படும் நேரம் பிரம்ம முகூர்த்தம். அதனால் அதற்கு இன்னொரு பெயர்  "சரஸ்வதி யாமம்".  வேதம் இதைத்தான்  பஞ்ச பஞ்ச  '' உஷத் காலம்''  என்கிறது.  அந்த சமயத்தில் தேவர்கள் வான் வெளியில்  சஞ்சரிப்பார்கள்.

"சூரியோதயே சாஸ்தமயே ஸாயினம் விமுஞ்சதி ஸ்ரீரபி ஸக்ரபாணிநம்!" என்கிறது சாஸ்திரம். : சூரியன் உதயமாகும் நேரத்தில் தூங்குபவன், இந்திரனைப் போல் செல்வச் செழிப்பு கொண்டவனாக இருந்தாலும், அவனை விட்டு திருமகள் விலகி விடுவாள்.

எனது அனுபவத்தில்   பல வருஷங்களாக  பிரம்மமுகூர்த்தத்தில் எழுந்து செயற்படும் போது மனம் அமைதியோடு ஒரு நிலைப் படுகின்றது.   கஷ்டமானவை என்று நினைத்து படிகாததெல்லாம் படிக்க முடிகிறது. எளிதில் புரிகிறது.  அற்புதமான  குளிர்ந்த நேரம். மனதில் ஒரு ரம்யம் ஏற்படுகிறது.

அதிகாலையில் சூரிய வெப்பமும் இல்லை சந்திரனுடைய  குளுமையும் கிடையாது. இவை இரண் டுக்கும்  நடுவில்  கிடைப்பது இந்த  பிரம்ம முகூர்த்தம்.

இந்நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு ஜெபிப்பது, தியானம் செய்வது, யோகா செய்வது, கல்வி கற்பது, வேலைகள் செய்வது போன்றவை சிறந்த பயனைத் தருவதோடு ஞாபக சக்தியும் விருத்தியாகும். அது மட்டுமா? அப்போது  செய்கிற  பூஜைகள் முழு பலனை அளிக்கும்.

 பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ர ஸம்ஹிதையில்   ஸ்ருஷ்டி காண்டம் பதினொன்று ---பதிமூன்றாவது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி சொல்லி இருக்கிறது.

ஸ்ரீமத் பாகவதம் 3:20:46 ல் பிரம்மமுகூர்த்தத்தைப் பற்றி எடுத்துரைத்திருக்கிறது. ரிக்வேதத்திலும் முகூர்த்தம் பற்றிய விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

ते तु तज्जगृहू रूपं त्यक्तं यत्परमेष्ठिना ।
मिथुनीभूय गायन्तस्तमेवोषसि कर्मभिः ॥ ४६॥

ப்ரம்மாவின் நிழல் ரூபத்தை  கின்னரர்களும் கிம்புருஷர்களும்  எடுத்துக் கொள்கிறார்கள். விடியற்காலையில்  சூர்யோதயத்துக்கு  ஒன்றரை மணி நேரம்  முன்பாக,  ப்ரம்மமுகூர்த்தம் எனப்படும் அந்த நேரத்தில்,  தெய்வீகமாக  தத்தம் மனைவிகளோடு பாடிக்கொண்டு  வணங்குகிறார்கள்.  விடிகாலையில் இந்த நேரத்தில் செய்யப்படும்  தெய்வ பூஜைகள் பாராயணம், எல்லாம் நல்ல பலனைத் தரும்.


வேதத்தின் ஸ்லோகங்களுக்கான  அர்த்த  வியாக்யானத்தை ப்ராஹ்மணம்  என்கிறோம்.  பிரமாணம் என்றும் தமிழில் சொல்வதுண்டு.   தைத்ரீய   ப்ராஹ்மணத்தில்    மூன்றாம் பாகத்தில் 10:1:1 ,  சதபாத பிராஹ்மனத்தில் X 4-2-18.25-27; 3,20; XII 3,2,5 மற்றும் X 4,4,4 லும்    பிரம்மமுகூர்த்தம் பற்றி  விளக்கி இருக்கிறது.  கர்க  ஸம்ஹிதையில் 4:8:19, 4:18:14, 5:15:2, 8:10:7  ஸ்லோகங்களில்   கூட இது பற்றி அறியலாம்.   இரவும்  பகலும்  சேர்ந்த  24 மணி நேரத்தை அஹோராத்ரம்  என்கிறோம்.
இந்த  24 மணி நேரத்தை  முப்பது சம பங்காக பிரித்தால்  ஒவ்வொரு பங்கும்  48 நிமிஷம் வரும். OVரும் இரண்டு நாழிகைக் காலம்(48 நிமிடம்) ஒரு முகூர்த்தம் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு அவற்றின் பெயர்களையும் சொல்லியுள்ளது.    முஹுர்த்தங்களை  காலை  6 மணியிலிருந்து மறுநாள் காலை  6 மணி வரை  பிரித்திருக்கிறார்கள். அவற்றில் ப்ரம்ம முஹூர்த்தம்  29வதாக காட்டப்பட்டுள்ளது. 

1. ருத்ர முஹுர்த்தம்- 06.00AM – 06.48AM.
2. ஆஹி முஹுர்த்தம்- 06.48am –07.36am.
3. மித்ர முஹுர்த்தம்- 07.36am – 08.24am.
4. பித்ரு முஹுர்த்தம்- 08.24am – 09.12am.
5. வசு முஹுர்த்தம்- 09.12am – 10.00am.
6. வராஹ முஹுர்த்தம்- 10.00am – 10.48am.
7. விச்வேதேவா முஹுர்த்தம்- 10.48am – 11.36am.
8. விதி முஹுர்த்தம்- 11.36am – 12.24pm.
9. சுதாமுகீ முஹுர்த்தம்- 12.24pm – 01.12pm.
10. புருஹூத முஹுர்த்தம்- 01.12pm – 02.00pm.
11. வாஹிநீ முஹுர்த்தம்- 02.00pm – 02.48pm.
12. நக்தனகரா முஹுர்த்தம்- 02.48pm – 03.36pm
13. வருண முஹுர்த்தம்- 03.36pm – 04.24pm.
14. அர்யமன் முஹுர்த்தம்- 04.24pm – 05.12pm.
15. பக முஹுர்த்தம்- 05.12pm – 06.00pm.
16. கிரீச முஹுர்த்தம்- 06.00pm – 06.48pm.
17. அஜபாத முஹுர்த்தம்- 06.48pm – 07.36pm.
18. அஹிர்புத்ன்ய முஹுர்த்தம்- 07.36pm – 08.24pm.
19. புஷ்ய முஹுர்த்தம்- 08.24pm – 09.12pm.
20. அச்விநீ முஹுர்த்தம்- 09.12pm – 10.00pm.
21. யம முஹுர்த்தம்- 10.00pm – 10.48pm.
22. அக்னி முஹுர்த்தம்- 10.48pm – 11.36pm.
23. விதாத்ரு முஹுர்த்தம்- 11.36pm – 12.24am.
24. கண்ட முஹுர்த்தம்- 12.24am – 01.12am.
25. அதிதி முஹுர்த்தம்- 01.12am – 02.00am.
26. ஜீவ/அம்ருத முஹுர்த்தம்- 02.00am – 02.48am.
27. விஷ்ணு முஹுர்த்தம்- 02.48am – 03.36am.
28. த்யுமத்கத்யுதி முஹுர்த்தம்- 03.36am – 04.24am.
29. பிரம்ம முஹுர்த்தம்- 04.24am – 05.12am.
30. சமுத்ரம் முஹுர்த்தம்- 05.12am – 06.00am.

ப்ரம்ம முஹுர்த்தம் எல்லா  சுப காரியங்களுக்கும் உகந்ததாகும்.

 26வது முஹூர்த்தமான ஜீவ/அம்ருத முஹூர்த்தம் மற்றும் 29வது முஹூர்த்தமான ப்ரம்ம முஹூர்த்தம்  ரெண்டுமே   கடவுள்  வழிபாடு மற்றும்  கல்யாண  வைபவங்களுக்கு மிகவும் சிறப்பான முஹூர்த்தங்கள் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...