Tuesday, April 5, 2022

ADHI SANKARAR

 

ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN 
ஸ்ரீ வைத்யநாத அஷ்டகம் 

அருமருந்தீஸர் 

ஆதி சங்கரர் நமக்கு பொக்கிஷமாக அளித்த எத்தனையோ சக்தி வாய்ந்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று. ரொம்ப சின்னது. எட்டு ஸ்லோகம் கொண்ட அஷ்டகம்.

श्री वैद्यनाथाष्टकम् श्रीराम सौमित्रि जटायुवॆद-षडाननादित्य कुजार्चिताय ।
 श्री नीलकण्ठाय दयामयाय श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ १ ॥


Sree rama soumithri jatayu veda, Shadanadithya kujarchithya,
Sree neelakandaya daya mayaya, Sree vaidyanathaya namasivaya.


ஸ்ரீராமஸௌமித்ரி ஜடாயுவேத ஷடானனாதித்ய குஜார்ச்சிதாய
ஸ்ரீநீலகண்டாய தயாமயாய ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய  1

பரமேஸ்வரன் ஸம்ஹார  மூர்த்தி மட்டும் அல்ல.  தயை நிறைந்த மனதை உடைய,  கேட்ட வரங்களை அவை எதுவாக இருந்தாலும் வாரி வழங்கும் கருணாமூர்த்தி மட்டுமல்ல.  நமக்கு நோயுற்ற காலத்தில் பெற்ற  தாயினும் சாலப் பரிந்து குணமாக்கி அருளும் வைத்யநாதன்.  ஹிந்துக்கள் வணங்கும் தெய்வங்களில் பரமேஸ்வரன் ஒருவனைத்தான்  வைத்யா, வைத்யநாதன், வைத்யஈஸ்வரன் என்கிறோம்.  அருமருந்தெனும்  தனி மருந்து அவன்.    நமக்கு மட்டுமல்ல, தேவாதி தேவர்களுக்கும் அவன் வைத்ய  ஈஸ்வரன். ஸ்ரீராமன், லட்சுமணன், ஜடாயு, நான்கு வேதங்கள்,  ஷண்முகன்,  சூரியன் மற்றும் தனது ரோகத்தைப் போக்கிக்கொள்ள விரும்பிய அங்காரகன் போன்றவர்களால் பூஜிக்கப்பட்டவன்.   எவரும் நெருங்க  அஞ்சிய  ஆலஹால  விஷத்தை தானே முன்வந்து விழுங்கி, தனது  சிவந்த கண்டத்தில் தரித்தவரும், நீலகண்டன் என்று பெயர் பெற்ற  தயா சாகரனான,   ஸ்ரீ  வைத்யநாதன் எனும் பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

 गंगाप्रवाहॆन्दु-जटाधराय त्रिलॊचनाय स्मरकालहन्त्रॆ ।
समस्त दॆवैरपि पूजिताय श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ २ ॥

Ganga pravahendu jada dharaya, Trilochanaya smara kala hanthre,
Samstha devairapi poojithaya, Sree vaidyanathata namasivaya.

கங்காப்ரவாஹேந்து ஜடாதராய  த்ரிலோசனாய ஸ்மரகாலஹந்த்ரே
ஸமஸ்த தேவைரபி பூஜிதாய ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய 2

பகீரதன் தவம் செய்து ஆகாச கங்கையை பூமிக்கு வரவழைத்து விட்டான். அவளது வேகத்தை யார்  பூமியில்  தாங்க முடியும். பரமேஸ்வரன் ஒருவன் தான் எல்லாவற்றிற்கும் முடிவு அளிப்பவன் அல்லவா? விரித்த செஞ்சடையோடு  ஹோ வென்று  பூமியையே  மூழ்கடிக்கும் வலிமையோடு இறங்கிய கங்கையை தனது சிரத்தில் தாங்கி கொண்ட  ஹ்ருஷீகேசன் அல்லவா சிவன்?  குளிர்ந்த  கங்கை மட்டுமா? குளிர்ந்த சந்திரனையும் முடிமேல் தாங்கிய சந்திர சூடான், சந்திரசேகரன் அல்லவா சிவன்? குளிருக்கு ஈடாக  அக்னியையே நெற்றிக்கண்ணாக கொண்டவன்,  தன் தவத்திற்கு இடையூறாக வந்த  காமனை நெற்றிக்கண்ணால் எரித்தவன்,  மார்க்கண்டேயனுக்காக  காலனைக்  காலால் உதைத்து வதம் செய்த காலசம்ஹார மூர்த்தி, சகல லோக தேவர்களாலும் பூஜிக்கப்படும்  ஸ்ரீ  வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

भक्तप्रियाय त्रिपुरान्तकाय  पिनाकिनॆ दुष्टहराय नित्यम् ।
प्रत्यक्षलीलाय मनुष्यलॊकॆ श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ३ ॥

Bhaktha priyaya, tripuranthakaya , Pinakine dushta haraya nithyam,
Prathyaksha leelaya manushya loke, Sree vaidyanathaya namasivaya.

பக்தப்ரியாய த்ரிபுராந்தகாய பினாகினே துஷ்டஹராய நித்யம்
ப்ரத்யக்ஷலீலாய மனுஷ்யலோகே ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய 3

பக்தர்களிடம்  பிரியம் கொண்டவன்,   த்ரிபுராந்தகனை  ஸம்ஹாரம் செய்தவன்,  சக்திவாய்ந்த  , பினாக பாணி,  த்ரிசூலன்,  துஷ்டர்களை இரக்கமின்றி ஸம்ஹாரம் செய்கிறவன்,  மண்ணுலகில் தோன்றி பக்தர்கள் மனம் மகிழ  திருவிளையாடல்களை புரிந்தவனாகிய  ஸ்ரீ  வைத்யநாதன்  என்ற பரமசிவனை நமஸ்கரிக்கிறேன்.

प्रभूतवातादि समस्त रॊग- प्रणाशकर्त्रॆ मुनिवन्दिताय ।
प्रभाकरॆन्द्वग्निविलॊचनाय श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ४ ॥

Prabhootha vadadhi samastha roga, Pranasa karthre muni vandhthithaya,
Prabhakarennd wagni vilochanaya, Sri vaidyanathaya nama sivaya.

ப்ரபூதவாதாதி ஸமஸ்தரோக ப்ரணாஸகர்த்ரே முனிவந்திதாய
ப்ரபாகரேந்த்வக்நிவிலோசனாய ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய  4

பாதம் முதல் கேசம் வரை உடலில் எங்கே எந்த ஒரு நோய் வந்தாலும் அதை உடனே  அளிப்பவரும் நம்மை குணப்படுத்துபவருமான பரமேஸ்வரா,  விண்ணும் மண்ணும் சகல புவனங்களிலும் உள்ள  தேவரும் இதரரும்  ஆராதித்து  வணங்கும்  தெய்வமே,   சூரியன் சந்திரன்  அக்னி ஆகியோரை முக்கண்களாக கொண்ட  கருணாநிதியே , ஸ்ரீ வைத்யநாதன் என்று சகலராலும் போற்றப்படும் பரமசிவா, உன்னை  நமஸ்கரிக்கிறேன்.


वाक्श्रॊत्रनॆत्राङ्घ्रिविहीनजन्तॊः  वाक्श्रॊत्रनॆत्राङ्घ्रिमुखप्रदाय ।
कुष्ठादिसर्वॊन्नतरॊगहन्त्रॆ श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ५ ॥

Vakchrothra nethrangiri viheena jantho, Vakchrothra nethrangiri sukha pradaya,
Kushtadhi sarvonnatha roga hanthre, Sri Vaidyanathaya nama sivaya.

வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி விஹீனஜந்தோ: வாக்ஸ்ரோத்ர நேத்ராங்க்ரி முகப்ரதாய
குஷ்டாதி ஸர்வோன்னதரோ கஹந்த்ரே  5

பேச இயலாத  ஊமையாக இருந்தாலும்,  காதி கேளாத செவிடாக இருந்தாலும்,  கண் பார்வையற்ற வராக இருந்தாலும்,  கை கால்  ஊனம் கொண்ட  அங்கஹீனராக இருந்தாலும்,   அவரவர்க்கு இழந்த சக்தியை திரும்பப் பெற வரமளிக்கும் சர்வேஸ்வரா,  குஷ்டம் போன்ற  பெரிய வியாதிகளிலிருந்து நிவாரணம் அளித்து சுகமளிக்கும் சிவனே,  ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமேஸ்வரா  உன்னை  நமஸ்கரிக்கின்றேன்.

वॆदान्तवॆद्याय जगन्मयाय यॊगीश्वरध्यॆयपदांबुजाय ।
त्रिमूर्तिरूपाय सहस्रनाम्नॆ श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ६ ॥

Vedantha vedhyaya jagan mayaya, Yogiswara dhyeya Padambujaya,
Trimurthy roopaya sahasra namne, Sri vaidyanathaya nama sivaya.

வேதாந்த வேத்யாய ஜகன்மயாய யோகீஸ்வரத்யேய பதாம்புஜாய
த்ரிமூர்த்திரூபாய ஸஹஸ்ரநாம்னே ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய 6

மறைகள் ஓதும்  மந்திரமூர்த்தி,  வேதங்களால் அறியப்படுபவனே, காணும் யாவுமாக காட்சி அளிப்பவனே,  எங்கு நோக்கினும்  அறியப்படுபவனே,  யோகிகள், ஞானிகள், முனிவர்கள் சதா தியானம் செய்து மகிழும்  பரம்பொருளே,  த்ரிமூர்த்திகளில் மற்ற இருவராக  ப்ரம்மா -விஷ்ணு வடிவாகவும் விளங்குபவனே,   ஸஹஸ்ரநாமங்களால்  போற்றப்படுபவனே,  ஸ்ரீ வைத்யநாதன் எனும் பரமசிவா, உன்னை நமஸ்கரிக்கின்றேன்.

स्वतीर्थ मृत् भस्मभृदंगभाजां पिशाचदुःखार्तिभयापहाय ।
आत्म स्वरूपाय शरीरभाजां श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ७ ॥

Swatheertha mrudbasma brudanga bajam, Pisacha dukha arthi bhayapahaya,
Athma swaroopaya sareera bajaam, Sri Vaidyanaathaya namasivaya.

ஸ்வதீர்த்தம்ருத் பஸ்மப்ருதங்கபாஜாம் பிஸாசது:க்கார்த்திபயாபஹாய
ஆத்மஸ்வரூபாய ஸரீரபாஜாம் ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய 7

எங்கள் வீட்டில் யாருக்கு  எந்த வியாதி வந்தாலும்  உடனே  குளித்து வணங்கி, ஈர மஞ்சள் துணியில்  வெள்ளிக்காசு முடிந்து வைத்தீஸ்வரனுக்கு காணிக்கையாக , டாக்டர் பீஸ், முடிந்து வைத்து அடுத்த முறை வைத்தீஸ்வரன் கோவில் ஸ்தலத்துக்கு செல்லும்போது உண்டியலில் போடுவது வழக்கம். 

வைத்தீஸ்வரா,  உன்  ஆலய  தீர்த்தத்தில் குளிப்பதால் பாபங்கள் வியாதிகள் அனைத்தும் விலகுவதாக சம்ப்ரதாயம்.  வைத்தீஸ்வரன் கோயிலில் கொடுக்கப்படும் மருந்து உருண்டை களாலும்,   வைத்தீஸ்வரன்  விபூதியினாலும்,  ஆலய த்தில் உள்ள  வேப்பமரத்தின் அடியிலுள்ள மண்ணினாலும்,  குளத்து மண்ணினாலும்,  தேகத்தில்  புகுந்து  இடையூறு செய்யும்   பிசாசு, போன்ற துர் தேவதைகள் உபத்திரவம்,    தேஹத்தை  பாதிக்கும்  ரோகம் போன்றவை, , மனதில் கவலை, பயம், எல்லாவற்றையும்  விலக்குபவனே எல்லா தேஹத்தினுள்ளும், அந்தராத்மாவாய் இருப்பவருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவா,  உன்னை  நமஸ்கரிக்கின்றேன்.

श्री नीलकण्ठाय वृषध्वजाय स्रग्गन्धभस्माद्यपिशॊभिताय ।
सुपुत्र दारादि सुभाग्यदाय श्री वैद्यनाथाय नमः शिवाय ॥ ८ ॥

Sree neelakandaya vrushaba dwajaya, Sara gandha  basmadhya abhi shobithaya,
Suputhradarathi subagyathaya, Sri vaidyanathaya nama sivaya.

ஸ்ரீநீலகண்டாய வ்ருஷபத்வஜாய  ஸரக்கந்த பஸ்மாத்யபிஸோபிதாய
ஸுபுத்ரதாராதி ஸுபாக்யதாய ஸ்ரீவைத்யநாதாய நம: ஸிவாய 8

பாற்கடலில் தோன்றிய  கொடிய  ஹாலஹால விஷத்தை  விழுங்கி  தொண்டையில் நிறுத்திக் கொண்டதால் ,  நீலமான கண்டத்தை உடையவர்  என்று அர்த்தம் தரும் நீலகண்டன் என்ற பெயரை உடையவனே,  ரிஷபத்தை வாகனமாகக் கொண்டவா,  மாலை, சந்தனம், விபூதி ஆகியவற்றால் பிரகாசிக்கின்றவரும், நல்ல மனைவி, நல்ல குழந்தைகள் என்ற நல்ல பாக்கியங்களைக் கொடுக்கின்ற வருமான ஸ்ரீ வைத்யநாதன் என்ற பரமசிவனை நமஸ்கரிக்கின்றேன்.

वालाम्बिकेश वैद्येश भवरोगहरेति च।
जपेन्नामत्रयं नित्यं महारोगनिवारणम्॥९॥ 

Valambikesa vaidyesa bava roga haredicha,
Japen nama thrayam nithyam maha roga nivaranam.

வாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச
ஜபேந் நாமத்ரயந் நித்யம் மஹாரோக நிவாரணம்…9

பெண்களுக்கு  வாலாம்பாள் என்று பெயர் சூட்டுவது இப்போது  காணோம். வாலாம்பிகேசன் என்று ஆதி சங்கரர் இந்த  ஸ்லோகத்தில் சொல்வது அக்காலத்தில் அம்பாளின் பெயர்  வழக்கத்தில் இருந்தது. பாலாம்பாள் என்றும், தையல்நாயகி என்றும் பெயர்கள் அனைவரும் அறிந்தது.   இந்த ஸ்லோகம் பலஸ்ருதி , அதாவது  மேலே சொன்ன எட்டு அஷ்டக ஸ்லோகங்களையும் மனப்பூர்வமாக  ஜபித்தால் சர்வ வியாதி நிவாரணம் என்று  ஆதி சங்கரர்  அனுபவ பூர்வமாக  காரண்டீ அளிக்கிறார்.
அங்காரகன் அவஸ்தைப் பட்ட குஷ்ட நோயை குணப்படுத்திய வைத்யஈஸ்வரன் ஆலயம் தமிழகத்தில் உள்ளது.  அது அங்காரக க்ஷேத்ரம் என்று நவகிரஹ ஆலயங்களில் செவ்வாயை வழிபடும் ஆலயம்.   இந்த ஸ்லோகங்களை பார்த்தனம் செயது  வாலாம்பிகைக்கு நாதனானவரும், வைத்தியர்களிலேயே மிகவும் சிறந்தவரும், ஜனன, மரணமென்ற ரோகத்தைப் போக்குகின்றவரும் ஆகிய வைத்யநாதரின் திருநாமம் சொல்லி நமஸ்கரித்து  அவர்  திருவருள் பெறுவோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...