Sunday, April 24, 2022

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்  J K  SIVAN 



''பாட்டி பேர்  மாறிடுத்து''


காஞ்சிபுரம்  சங்கரமடம்  பிஸியாக  இருந்தது, நிறைய  தலைகள் உள்ளும் வெளியும்  தெரிந்தன என்றால்  மஹா பெரியவா ஊரில் இருக்கிறார் என்று அர்த்தம்.  தாமரை மலரை வண்டுகள் சுற்றாதா? அவர் எங்கு இருக்கிறாரோ அங்கெல்லாம்   பக்தர்கள் கூட்டம்  ஜேஜே  என்று  சாரி சாரியாக  வந்த  வணயம் இருக்கும்.

காஞ்சிபுரம் தாண்டி எங்கோ  ஒரு கிராமத்தை  சேர்ந்த பக்தர் ஒருவர் அந்த கூட்டத்தில் இருந்தார். அவர் இருந்த சின்ன குக் கிராமத்தில்  சிவனுக்கோ பெருமாளுக்கோ  ஒரு கோயிலும் இல்லை.  நல்லவேளை ஒரே ஒரு சின்ன பிள்ளையார் மட்டுமே அங்கே  ஏகபோக சக்ரவர்த்தியாக  குடியிருந்தார்.   பெரியவா  எதிரில் கை கட்டி நின்ற  அந்த பக்தரிடம் திடீரென்று  பேசினார்  மஹா பெரியவா.

''நீ எந்த ஊர்?''

''.............''  தன்னுடைய  ஊர்  பெயரை மெதுவாக சொன்னார்  பக்தர்.

''உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலை, ராம பிள்ளையார் கோயில்  னு தானே  எல்லோரும் சொல்றா ?''
''ஆமாம் சுவாமி!” 

அவருக்கு ஆச்சர்யம். எப்படி பெரியவா தன்னுடைய சின்ன ஊரைப் பற்றி கூட தெரிந்து வைத்திருக்கிறார்.  மஹா பெரியவாளுக்கு தெரியாத ஊரோ  கோயிலோ  எங்கும் கிடையாது என்று அவருக்கு தெரியாதே.
ஒரு சில நிமிஷம் அந்த பக்தரையே உற்று பார்த்த  மஹா பெரியவா 

”உங்க கிராமத்தில் அந்த காலத்தில் துக்கிரிப்  பாட்டி  ன்னு ஒருத்தி  இருந்தாளே  அது தெரியுமா உனக்கு'
 ' அந்த பேர்  மட்டும் கேள்விபட்டதுண்டு பெரியவா''  பய பக்தியுடன் பதில் சொன்னார்  பக்தர். 
“”உங்கள் ஊர் துக்கிரிப்பாட்டி பற்றி நானே உனக்குச் சொல்கிறேன். அந்த காலத்தில் உங்கள் ஊர் பிள்ளையார் கோயிலில் தான் ராம நாமஜெபம் ஒவ்வொரு நாளும்  நடக்கும். அதனால் அக்கோயிலுக்கு “ராம பிள்ளையார் கோயில் ”னு பேரு . 

அருகே இருந்த  எல்லா பக்தர்களுக்கு காதைத் தீட்டிக்கொண்டு கேட்க காத்திருந்தார்கள்.  நிசப்தம். 

”அது சரி! ராமபிள்ளையார் இருக்கட்டும்.  துக்கிரிப்பாட்டி கதைக்கு வருகிறேன்! துக்கிரிப்  பாட்டியின்  ஒன்பது பத்து வயதிலேயே புருஷன்  காலமாயிட்டதாலே ஊரே  அவளை பழித்துப் பேசியது. அவள்  கண்ணிலே பட்டாலே துர்  சகுனம் துரதிர்ஷ்டம்னு  ஒதுக்கி வச்சுது. அடி! துக்கிரி! துக்கிரி! ன்னு  திட்டித் தீர்த்தது.  பாவம்  பாட்டி , சின்ன  வயசிலேயே   விதி எப்படி என் வாழ்க்கையிலே விளையாடறது நான் என்ன பாவம் பண்ணினேன் னு  ஓ ன்னு  அழுதா. வேறே வழி தெரியாம  மன நிம்மதிக்காக ராம நாமாவை  விடாம  சொல்லத் தொடங்கினா. அதுவே  நாம  ஜப  யஞம் ஆயிட்டுது. ஒருத்தரும் உதவிக்கு இல்லை. தான் உண்டு ராம நாம ஜபம் உண்டுன்னு ஏதோ கிடைச்சதை சாப்பிட்டுண்டு உயிர் வாழ்ந்தா. பரிதாபமான இளம் வயது விதவை.   வருஷங்கல்  ஓடித்து. இப்போ அவள் பாட்டி ஆயிட்டா. 

ஏதோ ஒரு சமயம் அந்த ஊர்லே யாரோ ஒரு பெரிய மனுஷன் வீட்டிலே  அவன் பிள்ளைக்கு உடம்பு சரியில்லே.  தீராத வயத்து வலி. துடி துடிச்சான் பையன். என்னென்னவோ வைத்தியம் பண்ணியும் குணமாகலே . 

பாட்டி காதிலே விஷயம் விழுந்தது. விடுவிடுன்னு  தானே அந்த வீட்டுக்கு போனா.  ராமநாமத்தை ஜெபித்து, மடிசஞ்சியிலேர்ந்து விபூதி எடுத்து பையன் நெத்திலே பூசினா.  ''பயப்படாதேங்கோ, கவலை வேண்டாம். ராமன்  குழந்தைக்கு உடம்பு நன்னா பண்ணிடுவான்'' னு சொல்லிட்டு  திரும்பி போய்ட்டா.
என்ன ஆச்சர்யம்! அன்னிக்கே  ரெண்டு மூணு மணி  நேரத்திலே  வயித்துவலி காணாம போயிடுத்து.  படுத்துண்டே இருந்த பையன் எழுந்து நின்னான்.   இந்த விஷயம் பரவின உடனே, ஊர்  அப்புறம் அவளை துக்கிரி பாட்டின்னு சொல்றதில்லே.  அவ பேரு  ''ராம நாம'' பாட்டின்னு ஆயிடுத்து.   ஊரே  ராஜ போகத்திலே அவளை கொண்டாடித்து.  

நான் எதுக்கு இதை சொல்றேன்னா  நீ அந்த ஊர்க் காரன். அந்த பாட்டியைப்போல  நீயும் சதாசர்வ காலமும் ராம நாமத்தை ஜெபிச்சுண்டு வா. ஊறியிலே எல்லோருக்கும் இதை சொல்லி  அவாளையும்   நான்  ஜபம் பண்ணச் சொன்னேன்னு  போய்ச்   சொல்லு.  ஊர்  சுபிக்ஷமா இருக்கும். எல்லாம் நல்லதா நடக்கும்,” 

பிரசாதம் கொடுத்து அந்த பக்தரை அனுப்பினார் மஹா பெரியவா.  அவருக்கு எவ்வளவு பெரிய மனசு பாருங்கள். ஊரே சுபிக்ஷமாக இருக்கணும்.....!!!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...