Tuesday, April 5, 2022

KALABAIRAVASHTAKAM

 ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K  SIVAN

காலபைரவாஷ்டகம் 4

64 பைரவர்கள்                  

பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவர்.   செட்டிநாடுகளில்  வைரவர் என்று சொல்வதுண்டு.  பைரவரின் வாகனம் நாய்.  தமிழ்நாட்டில் நாய்களுக்கு பைரவர் என்ற பொதுப் பெயர்  இன்றும் வழங்குகிறது.  பைரவரை சொர்ணாகர்ஷண பைரவர், யோக பைரவர், ஆதி பைரவர், கால பைரவர், உக்ர பைரவர் என்று  பல பெயர்களில்  வணங்குகிறோம். 

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன்  சர்ப்பத்தை, நாகத்தை,  பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர். கால பைரவர் சனீஸ்வரனின் குரு. பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவக்கிரஹங்கள் , காலம்  அனைத்தையும்  கட்டுப்படுத்துபவர்.   பஞ்சகுண சிவமூர்த்திகளில் பைரவர் வக்ர மூர்த்தி என்றும் பெயர் கொண்டவர்.   64  பொறுப்புகளில்  பைரவர் அறியப்படுகிறார் அவரது பெயர்களை மட்டும் குறிப்பிடுகிறேன். பட்டியலில்  ஒவ்வொரு பைரவரைப் பற்றியும் சொன்னாலோ, எழுத ஆரம்பித்தாலோ, தனியாக  ஒரு புத்தகம் போட்டுவிடலாம். ரெடிமேட் தலைகாணி தயாராகிவிடும்.  ஹிந்துக்களில்  மொத்தத்தில் வடக்கேயும்  தெற்கேயும் பைரவ பக்தர்கள் அதிகம்.  ப்ரத்யக்ஷ தெய்வம் என்று போற்றப்படுபவர்  பைரவர்.  பயம் போக்கிடுபவர்.
இனி 64 பெயர்கள். 

நீலகண்ட பைரவர்
விசாலாக்ஷ பைரவர்
மார்த்தாண்ட பைரவர்
முண்டனப்பிரபு பைரவர்
ஸ்வஸ்சந்த பைரவர்
அதிசந்துஷ்ட பைரவர்
கேர பைரவர்
ஸம்ஹார பைரவர்
விஸ்வரூப பைரவர்
நானாரூப பைரவர்
பரம பைரவர்
தண்டகர்ண பைரவர்
ஸ்தாபாத்ர பைரவர்
சீரீட பைரவர்
உன்மத்த பைரவர்
மேகநாத பைரவர்
மனோவேக பைரவர்
க்ஷேத்ர பாலக பைரவர்
விருபாக்ஷ பைரவர்
கராள பைரவர்
நிர்பய பைரவர்
ஆகர்ஷண பைரவர்
ப்ரேக்ஷத பைரவர்
லோகபால பைரவர்
கதாதர பைரவர்
வஞ்ரஹஸ்த பைரவர்
மகாகால பைரவர்
பிரகண்ட பைரவர்
ப்ரளய பைரவர்
அந்தக பைரவர்
பூமிகர்ப்ப பைரவர்
பீஷ்ண பைரவர்
ஸம்ஹார பைரவர்
குலபால பைரவர்
ருண்டமாலா பைரவர்
ரத்தாங்க பைரவர்
பிங்களேஷ்ண பைரவர்
அப்ரரூப பைரவர்
தாரபாலன பைரவர்
ப்ரஜா பாலன பைரவர்
குல பைரவர்
மந்திர நாயக பைரவர்
ருத்ர பைரவர்
பிதாமஹ பைரவர்
விஷ்ணு பைரவர்
வடுகநாத பைரவர்
கபால பைரவர்
பூதவேதாள பைரவர்
த்ரிநேத்ர பைரவர்
திரிபுராந்தக பைரவர்
வரத பைரவர்
பர்வத வாகன பைரவர்
சசிவாகன பைரவர்
கபால பூஷண பைரவர்
ஸர்வவேத பைரவர்
ஈசான பைரவர்
ஸர்வபூத பைரவர்
ஸர்வபூத பைரவர்
கோரநாத பைரவர்
பயங்க பைரவர்
புத்திமுக்தி பயப்த பைரவர்
காலாக்னி பைரவர்
மகாரௌத்ர பைரவர்
தக்ஷிணா பிஸ்திதி பைரவர்

ஸ்வர்ண கால பைரவர் , திருவண்ணாமலையில் தரிசனம் தருகிறார். செல்வத்திற்கு அதிபதியான பைரவர் என்பதால் சொர்ண ஆகர்ஷண பைரவர்.  இடது கையில் கபாலம் காணோம். ஆனால் அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் (தங்கம்) தருபவர் என்பதால் கபாலத்தை, அட்சய பாத்திர மாக வைத்திருப்பதாக சொல்வது வழக்கம். இவரை வணங்கினால் வீட்டில் செல்வம் பெருகும். இரண்டு நாய் வாகனங்கள்.

தஞ்சைமாவட்டம்,திருவிடைமருதூர் வட்டம் கதிராமங்கலம் அருகில் காவேரி வடக்கு நோக்கி ஓடி வடகாவேரி என அதற்கு பெயர். காவேரிக்கு மேற்கு கரையில் வினாயகர்.காசிவிஸ்வநாதர் கோவில்கள் உண்டு. இந்த ரெண்டு கோவில்கள் நடுவே மிக பழமையான இரட்டை கால பைரவர் கோவில் ஒன்று இருக்கிறது. . தற்போது தேய்பிறை அஷ்டமி திதியில் சிறப்பு பூஜைகள். இங்கு வழிபட்டால்  திருமண தடை நீங்கி வரைவில்திருமணம் நடை பெறும் என்பது ஐதீகம்.

காசியில் காவல் தெய்வம், ரக்ஷிக்கும் தெய்வம் காலபைரவர். முதலில் கால பைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகுதான் காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் ஆரம்பமாகும். காசி யாத்திரை செல்பவர்கள் கங்கையில் நீராடி வழிபட்டு இறுதியாக காலபைரவரையும் வழிபட்டால்தான் காசி யாத்திரை செய்ததன் முழுப் பலனும் கிட்டும்.

"அமர்தகர்" (அகங்காரத்தை அழிப்பவர்) , "பாப க்ஷணர்"(பாபங்களை போக்குபவர்) என்று கூட பைரவருக்கு பெயர் உண்டு. .

தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை ஆகியவை பைரவருக்கு அணிவிக்கும் புஷ்பங்கள். வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூ போடுவதில்லை. மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சார்த்தலாம்.

இன்னும் பைரவர் பற்றி நிறையவே  வரும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...