Thursday, August 29, 2019

vikramathithan stories



விக்ரமாதித்தன் வேதாளம் கதைகள் J K SIVAN

புறாக்களின் திருமணம்
விக்ரமாதித்தன் பெண்ணாக வேஷமிட்டு ராஜகுமாரி சம்பகவல்லியின் தோழியாக அவள் அந்தப்புரத்தில் இருக்கிறான். அவள் மனம் திறந்து ஒருநாள் எதற்காக அவள் ஆண்களை வெறுக்கிறாள் என்ற காரணத்தை சொல்கிறாள். அது அவள் பூர்வ ஜென்மம் சம்பந்தப்பட்டது.

''நான் சொல்வதைக் கேள் தோழி, அழகு வனம் என்று ஒரு காடு இருந்தது. அந்த காட்டிற்குள் ஒரு காளி கோவில்.சுற்றிலும் அடர்ந்த மூங்கில் காடு. அந்த புதரில் ரெண்டு புறாக்கள் வசித்தன. ஒன்று சால்யவான், இன்னொன்று சல்லரி. பாவம் வெகுநாள் அந்த புறா தம்பதிகளுக்கு வாரிசு பிறக்கவில்லை. கடவுள் கிருபையால் ஒருநாள் சல்லரி ரெண்டு முட்டை இட்டது. முட்டையை கூட்டில் விட்டுவிட்டு ரெண்டு புறாக்களும் இறை தேட சென்றபோது மூங்கில் காட்டில் தீ பற்றிக்கொண்டது. பாவம் ரெண்டு முட்டைகளும் கருகி வெந்து சாம்பலாயின. திரும்பி வந்த புறாக்கள் நடந்ததை அறிந்து வாடின. அழுதன.

''இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம். நாமும் இந்த தீயில் விழுந்து மடிவோம் என்றது சல்லரி. ரெண்டும் ஒன்றாக தீயில் விழும் சமயம் சால்யவான் தப்பி ஓடிவிட்டது. சல்லரி தீயில் வெந்து செத்தது.

'தோழி, நான் தான் சல்லரி. எனக்கு ஆண்கள் மேல் கோபம் வெறுப்பு வருவது நியாயம் தானே ?'' என்றாள் ராஜகுமாரி.
இந்த கதையை விக்ரமாதித்தனின் மந்திரி பட்டியும் ஒரு பல்லி உருவில் தன்னை மாற்றிக்கொண்டு சுவரோரத்தில் ஒளிந்துகொண்டு கேட்டான்.

ஏற்கனவே திட்டமிட்டபடி பட்டி ஆயிரம் பொற்காசுகளுடன், விக்ரமாதித்தியின் தந்தையாக வேஷமிட்டு அரசனிடம் வருகிறான். என் பெண்ணை மீட்டுக்கொண்டு போகிறேன். இந்தாருங்கள் உங்களிடம் வாங்கிய பணம் என்று காசுகளை தருகிறான். அவனுக்கு இப்போது ஏன் சம்பகவல்லி ஆண்களை வெறுத்தாள் என்று தெரிந்துவிட்டதே. அவள் தந்தை ராஜாவுக்கு அது தெரியாமல் கவலையில் அல்லவோ வாடினான்.
சம்பகவல்லிக்கு தனது தோழி விக்ரமாதித்தியை பிரிய மனமில்லை. என்ன செய்வது?.

அடுத்த ஒரு சிலநாளில் பட்டி ஒரு மந்திரவாதியாக அந்த ஊருக்கு வருகிறான். ராஜாவின் முன்னால் அரசவையில் சில மாயா ஜால வித்தைகள் செயதுக்காட்டுகிறான்ல். எப்படி? வேதாளம் தான் கைவசம் இருக்கிறதே.அதன் உதவியால் கண்கட்டு வித்தைகள் செய்கிறான். ராஜாவுக்கு அளவுகடந்த சந்தோஷம். மந்திரவாதி பட்டிக்கு பரிசுகள் வாரி வழங்குகிறான். அப்போது மந்திரவாதியாக நடிக்கும் பட்டி என்ன சொல்கிறான் தெரியுமா?

''மஹாராஜா இதுவரை நான் காட்டிய வித்தைகள் ரொம்ப சிறு பிள்ளைத்தனமானவை. சாதாரணமானது. என் குரு அநேக பெரிய பெரிய வித்தைகள் தெரிந்தவர். அவர் காட்டில் இருக்கிறார். இங்கே வரமாட்டார். அவருக்கு பெண்களை பார்க்கவே பிடிக்காது.

ராஜா விடுவானா? சரி உங்கள் குருவை அழைத்துவாருங்கள். நான் பெண்களே யாரும் வராதபடி நாலாபக்கமும் திரை போட்டு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு பண்ணுகிறேன் என்று ஒரு பெண்ணும் கண்ணில் படாதபடி ஒரு ''ஆண்களுக்கு மட்டும்'' பிரத்யேகமான மந்திர மாயாஜால காட்சிக்கு ஏற்பாடு செய்தான்.

சம்பகவல்லிக்கு எப்படியாவது அந்த நிகழ்ச்சியை பார்க்க ஆவல். திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டு பார்த்தாள் .விக்ரமாதித்தன் குருவாக வேஷம் தரித்துக் கொண்டு வந்தான். வேதாளத்தின் உதவியோடு பல வித்தைகள் புரிந்து எல்லா ஆண்களையும் மகிழ்வித்தான். ராஜாவுக்கு தலை வெடித்துவிடும் போல் ஆகி விட்டது. மெதுவாக விக்ரமாதித்தன் அருகே வந்தான். கையைக் கட்டிக்கொண்டு

''மாயாஜால குருவே, எதற்கு நீங்கள் பெண்களையே கண்ணால் பார்க்கமாட்டீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?''என்று கேட்டான்.

''மஹாராஜா, நான் இதை யாரிடமும் சொன்னதில்லை. உங்களைக் கண்டால் எனக்கு பிடித்து விட்டது. எனவே காரணம் சொல்கிறேன். கேளுங்கள்:

''அழகுவனம்'' என்று காடு. அங்கே ஒரு காளி கோவில் அதைச் சுற்றி மூங்கில் காடு. அதில் ரெண்டு புறாக்கள் வசித்தன. ஆண் புறாவின் பெயர் சால்யவான். பெண்ணின் பெயர் சல்லரி. வெகுகாலம் அவற்றிற்கு குழந்தை செல்வம் இல்லை. இறைவன் அருளால் சல்லரி ரெண்டு முட்டை இட்டது. ரெண்டு புறாக்களும் இரைதேட பறந்து போயிருக்கும்போது மூங்கில் காட்டில் நெருப்பு பற்றிக்கொண்டு காடு அழிந்தது. மரத்தின் மேல் கூட்டில் இருந்த புறாமுட்டைகளும் எரிந்தன. திரும்பிவந்து பார்த்த சால்யவான் சல்லரி இரண்டு புறாக்களும் அழுதன. நமக்கு இனி எதற்கு வாழ்க்கை என்று இரண்டுமே நெருப்பில் விழுந்து எரிந்து போவோம் என்று நெருப்பில் குதித்து சாக துணிந்தன. சால்யவான் நெருப்பில் விழுந்தது சல்லரி தப்பி ஓடியது. நான் தான் அந்த ஆண் புறா சால்யவான். எப்படி எனக்கு பெண்களைக் கண்டால் பிடிக்கும் நீங்களே சொல்லுங்கள்? என்றான் விக்ரமாதித்தன் மந்திரவாதி குரு வேஷத்தில்.

அவன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்த சம்பகவல்லி திரை மறைவில் இருந்து ஓடிவந்தாள். ''இல்லை இல்லை. தப்பு. சல்லரி தான் நெருப்பில் விழுந்தது. சால்யவான் உயிர் தப்பி ஓடிவிட்டது '' என்று கத்தினாள்.

''இல்லவே இல்லை, சால்யவான் தான் நெருப்பில் விழுந்து மாண்டது'' என்று விக்ரமாதித்தன் உரக்க கத்தினான். ரெண்டுபேரும் இப்படி மாற்றி மாற்றி காத்த, ராஜாவும் மந்திரிகளும் மற்றவர்களும் ஒருவேளை ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் ரெண்டு புறாக்களும் நெருப்பில் விழுந்து மாண்டிருக்கலாம். இந்த ரெண்டு பேர் தான் அந்த புறாக்கள் முன் ஜென்மத்தில். ஆகவே இந்த இருவரையும் இந்த பிறவியிலாவது ஒன்று சேர்த்து வைக்கவேண்டும் என்று அவர்களுக்கு செயதுவைப்பது என்று என்று முடிவெடுத்தனர்.

கல்யாணம் ஜோராக இனிது நடந்து முடிவடைந்தது. ஆறு மாதம் ஆனது. விக்ரமாதித்தன் மீண்டும் நாடாறு மாதம் ஆள்வதற்கு உஜ்ஜையினி திரும்ப கிளம்பியபோது தான் அந்த ஊர் ராஜாவுக்கு '' ஆஹா நமது பெண்ணை மகா வீரன் விக்ரமாதித்த மஹாராஜா அல்லவோ மணந்து கொண்டான்'' என்று மகிழ்ந்தான். ஊராரும் இது தெரிந்து அதிசயித்தனர். வாழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...