Friday, August 2, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN
பதிநான்காம் நாள் யுத்தம் தொடர்கிறது

''தொடர்ந்த யுத்தம் மடிந்த உயிர்கள்''

' சஞ்சயா, என்னால் நம்ப முடியவில்லையே
தனி ஒருவனாக, எல்லா மஹரதர்கள், அதிரதர்களும் ஜெயத்ரதனை பாதகாத்தும் அர்ஜுனன் சூரிய அஸ்தமனத்துக்குள் இன்று ஜயத்ரதனை கொன்றானா?? என்று கேட்டான் திருதராஷ்டிரன்.
''அரசே, உன் மகன் துரியோதனனும் மற்றவர்களும் மாய இருளை அஸ்தமனம் என நினைத்து அர்ஜுனன் தோற்றான் என்று இறுமாப்பு அடைந்த வேளையில் ஜயத்ரதன் உயிரை சொன்ன நேரத்துக்குள் அர்ஜுனன் பறித்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கிருஷ்ணனும் அர்ஜுனனும் சங்குகளை ஒலித்தது அவர்கள் வெற்றியை அறிவிக்கவே என்றும் உணர்ந்து வெட்கமடைந்தார்கள். சூரியன் அஸ்தமித்தபிறகும் போர் தொடங்கினார்கள். அர்ஜுனன் ஜயத்ரதனை தொடர்ந்து அநேக கௌரவ சேனை அரசர்களையும் கொன்றான்.
சஞ்சயா, ஜயத்ரதன் மரணத்துக்குப் பின் நடந்த சம்பவங்களைச் சொல் '' என்றான் திருதராஷ்டிரன்.
''அரசே, கிருபருக்கு மிகுந்த கோபம் வந்தது. அர்ஜுனன் மீது அம்பு மாரி பொழிந்தார். அர்ஜுனன் அவரைத் திருப்பி தாக்கி அவர் மயங்கி தேர் தட்டில் விழுந்தார். கர்ணன், அஸ்வத்தாமன் , கிரிதவர்மன் ஆகியோர் அர்ஜுனனை எதிர்க்க வந்தபோது சாத்யகி குறுக்கிட்டு அவர்களை தடுத்து பின் வாங்கச் செய்கிறான்.
'' சஞ்சயா என் பிள்ளைகள் எவ்வாறு உள்ளனர். பீமன் என்ன செயகிறான் பார்த்து சொல்?''
''அரசே, என்ன சொல்வேன் நான். இதுவரை உங்கள் பிள்ளைகள் 31 பேர் பீமனால் கொல்லப் பட்டார்கள்..கடைசியாக மடிந்தவன் துர்முகன்.
''அர்ஜுனா, என்னை கர்ணன் தகாத வார்த்தைகளை சொல்லி கோபமூட்டுகிறான். நானே அவனைக் கொன்றுவிடட்டுமா சொல்? என்றான் பீமன்.
''அண்ணா, என்னை மன்னித்துவிடு. நான் அரசவையில் அன்று செய்த சபதம் நிறைவேற வேண்டாமா. கொஞ்சம் பொறு நானே அவனைக் கொல்கிறேன்.
''கர்ணா, நீ பீமனிடமிருந்து உயிர் தப்பினாய். என்னால் தான் உனக்கு முடிவு. என் மகன் அபிமன்யுவை நான் இல்லாதபோது ஆறு அதிரதர்கள் சேர்ந்துகொண்டு நிராயுதபாணியாக நின்ற அந்த சிறுவனை கொன்றாய் அல்லவா. உன் கண் முன்னே இப்போது உன் மகனைக் கொல்லப் போகிறேன். காப்பாற்ற முடிந்தால் காப்பாற்று அவனை'' என்றான் அர்ஜுனன்
''கிருஷ்ணா, உன்னால் தான் நான் ஜயத்ரதனை கொன்றேன். நீ இருக்கும் இடத்தில் வெற்றி இன்றி வேறு எது??
கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனிடம் தங்கள் வெற்றியைப் பற்றி சேதி சொன்னார்கள். இருவரையும் ஆனந்தக்கண்ணீரோடு யுதிஷ்டிரன் ஆலிங்கனம் செய்தான்
''கிருஷ்ணா, ஆதி அந்தம் இல்லா அருட் பெருந் தெய்வம் நீ. சர்வ காரணன். வேத சாரன். தேவாதிதேவன் என்று வார்த்தை சொல்ல வராமல் நன்றியை அ
றிவித்தான் யுதிஷ்டிரன்.
''சஞ்சயா, என் மகன் துரியோதனன் என்ன செயகிறான் சொல்?'' என்ற திருதராஷ்டிரனுக்கு சஞ்சயன் ''அரசே துரியோதனன் உடல் நடுங்கி திகைத்தான். அர்ஜுனன் பராக்ரமத்தின் முன் துரோணரோ, கர்ணனோ, அஸ்வத்தாமனோ எவரும் ஈடல்ல என்று கலங்கி நின்றான். தனது சேனை பெரும்பகுதி அழிந்தது அதிர்ச்சி தந்தது. கிருஷ்ணன் வந்து என்னோடு சமாதானம் பேசிய போதும் நான் கர்ணன் பலத்தை நம்பி யுத்தத்துக்கு துணிந்தேன். கிருஷ்ணனைத் துரும்பாக மதித்தேன். இந்திரனால் அர்ஜுனனை வெல்லமுடியாது என்று உணர்கிறேன். தனியொருவனாக அவன் எல்லோரையும் வென்று ஜயத்ரதனை அழித்தது நம்ப முடியாத செயல் அல்லவா? பீஷ்மரை எவரும் வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் இருந்தேன். பீஷ்மர் இதோ தோல்வியுற்று அம்புப் படுக்கையில் உயிரை விட காத்திருக்கிறார்'' . என் எட்டு அக்ஷ்வுணி சேனையை அர்ஜுனன் ஒருவனே அழித்தானே. நான் கோழை தான். என்னை நம்பி எண்ணற்ற அரசர்கள் உயிரிழக்க காரணமானேன். நூறு அஸ்வமேத யாகம் பண்ணினாலும் எனக்கு இனி திருப்தி உண்டாகாது. நான் சக்தியற்றவன். துரியோதனன் மனதில் இவ்வாறு எண்ணம் ஓடியது.
'துரோணாச்சாரியாரே , அர்ஜுனன் மேல் உங்களுக்கு தனி பாசம் என்பதால் எனக்கு துரோகம் செய்த்துவிட்டீர்கள். உங்களை மலைபோல் நம்பினேன். ஏமாந்தேன்'' என்று ஆச்சர்யரிடம் முறையிட்டான். அவர் மனம் ஒடிந்தார்.
''துரியோதனா பலமுறை நான் சொல்லியும் நீ நம்பவில்லை. அர்ஜுனனையும் கிருஷ்ணனையும் எவரும் வெல்ல முடியாதப்பா. பீஷ்மரும் இதையே சொன்னார் உன் செவியில் ஏறவில்லையே. சபையில் சகுனி உருட்டியது உலோக காய்கள் அல்ல. உன் பக்கம் இருந்த அனைவரின் உயிரையும் தான்.
அன்றே சபையில் பாண்டவர்கள் சபதம் செய்தவர்கள். அது நடக்கும் வேண்டாம் என்று விதுரனும் சொன்னான். நீ கேட்கவில்லை. கர்ணனை நம்பினாய். எங்களை அவமதித்தாய். அனைவர் முன்னே அன்று திரௌபதையின் துகில் உரித்தாய். இன்று உங்கள் எல்லோர் உயிரையும் உரிக்கிறார்கள் பீமார்ஜுனர்கள். சொன்னதை செய்து கொண்டி ருக்கிறார்கள். இது விதியின் கொடுமை. வேறென்ன சொல்ல? . என்னால் ஜயத்ரதனை காப்பாற்ற இயலவில்லை. உன் கையால் என்னை கொன்றுவிடு. உனக்காக எண்ணற்றவர்களைப் போல் நானும் உயிர் விடுகிறேனே '' என்கிறார் துரோணர். கண்களில் கண்ணீர் பெருகியது.
கோபத்தோடு துரியோதனன் கர்ணனிடம் சென்றான். ''கர்ணா, நமது உலகிலேயே மாபெரும் சேனை. கடவுளால் கூட பிளக்க முடியாத சேனை என்று வர்ணித்தாய். கிருஷ்ணன் தேரோட்ட தனியனாக அர்ஜுனன் எளிதாக நமது சேனையைப் பிளந்து நம் அனைவரின் பாதுகாப்பையும் மீறி ஜயத்ரதனை கொன்றான். எட்டு அக்ஷ்வுணி சேனையை அழித்தான். துரோணர் அவன் மீது பாசத்தால் அவனை அனுமதித்தார். எதிர்த்த அவனைக் கொல்லவில்லை .இது என் துரதிர்ஷ்டமே. என்னை விடுங்கள் நான் எங்காவது சென்று உயிர் தப்பிக்கிறேன் என்ற ஜயத்ரதனை போகவிடாமல் அர்ஜுனனுக்கு அனுமதி கொடுத்து அவனைக் கொன்றது துரோணர் செய்த துரோகம். என் சகோதரர்கள் அனேகர் மாண்டார்கள்'' என்று முறையிட்டான் துரியோதனன்.
''அப்படி இல்லை துரியோதனா. துரோணர் பாடுபட்டு உழைத்தார். உயிரைத் திரணமாக மதித்து போரிட்டார். நான் அறிவேன்.அர்ஜுனன் யுத்த பயிற்சியில் அனைவரையும் விட தேர்ச்சி பெற்றவன். சக்தி வாய்ந்த ஆயுதங்களை சேகரித்துக் கொண்டவன். அவனுக்கு கிருஷ்ணன் துணையாக அமைந்தது நமது துரதிர்ஷ்டம். நீ கிருஷ்ணனை கேட்காமல் அவன் சேனையை கேட்டாய். அங்கே தான் விதி விளையாடி விட்டது. துரோணரிடம் ஆயுதங்களோ சிறந்த தேரோட்டியோ இல்லையே. சிறு வயதிலிருந்தே நீ எண்ணற்ற இன்னல்கள் செயதும் உயிர் பிழைத்தவர்கள் பாண்டவர்கள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...