Monday, August 19, 2019

GITANJALI



கீதாஞ்சலி                           J.K. SIVAN
ரவீந்திரநாத் தாகூர

     18   கொட்டும் மழையில் கிருஷ்ணா  உனக்காக....

நமது ஞாபக சக்தியை நாம் தான் மெச்சிக்கொள்ளவேண்டும். இன்று காலை என்ன டிபன், என்ன சமைத்தார்கள் வீட்டில் என்பது சமைத்தவர்களுக்கே  ஞாபகம் இல்லை என்றபோது சாப்பிட்டவன் தலையைத் தான்  சொறியவேண்டும். இந்த நிலையில் என்றோ வாழ்ந்த மகான்களை தெரியுமா? ஞாபகம் உண்டா என்றால்? 

தாடிக்காரர்களில் சிலர் மோசமாகவும் உண்டு,  அருமையானவர்களும் உண்டு. பறவைகளில் கிளி காக்கை இல்லையா அது போல். நான் சொல்லும் நல்ல தாடிக்காரர் வசதியானவர். எதையும் அறுக்க, வெட்ட , உடைக்க சொல்லாதவர். அமர காவியங்களை படைத்தவர். உலகம் புகழ்ந்த காவியக் கவியோகி ரவீந்த்ரநாத் தாகூர் (1861-1941). வெள்ளைக்காரன் காலத்தில் நோபல் பரிசு வாங்கியவர். 80 வயதில் அவர் சாதித்தது எத்தனையோ யுகங்களில் நம்மால் முடியாது. குருதேவ் என்று காந்திஜியால் போற்றப்பட்டவர். சிறந்த தத்துவ ஞானி. நமது முண்டாசு கவிஞனுக்கு அவரைப் பிடிக்கும். ரெண்டு பேருமே  கவிஞர்கள், புலவர்கள் இல்லையா?  தாகூர் எழுதிய கீதாஞ்சலி அற்புதமான ஒரு காவியம். ஆஹா அதை ரசித்து இதுவரை 17 பாடல்களை விளக்கினேன்.

இது தவிர அவர் எழுதிய காபூல் காரன், ராய் சரண், சுபா, போஸ்ட்மாஸ்டர், போன்ற மனதைப் பிழியும் கதைகளை உங்களுக்கு ஏற்கனவே தமிழ்க்கதைகளாக சுருக்கி தந்திருக்கிறேன். மீண்டும் அதை படிக்க ஆசியானால் இந்த என் முக நூல் குரூப்பில் (J.K. SIVAN / J K SIVAN'S FRIENDS GROUP/ SREE KRISHNARPANAM SEVA TRUST FB GROUPS) இருப்பவர்கள் தேடி படிக்கலாம். அவசியமா ? பிஞ்சிலே பழுத்தவர் என்று தாகூரை சொல்லலாம். முதல் வங்காள மொழி கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில். தாகூர் குடும்பத்தில் பல கலைஞர்கள் கவிஞர்கள் போல் இருக்கிறது. கோகோந்த்ரநாத், அபனீந்திரநாத், தேவேந்திரநாத், த்விஜேந்திரநாத் தாகூர்கள்.பலே பலே. கீதாஞ்சலியை தாகூரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பதை தான் அலசுகிறோம்.
இன்று தாகூரின் 18வது கீதாஞ்சலி :

18.  Clouds heap upon clouds and it darkens.
 Ah, love, why dost thou let me wait outside at the door all alone?
In the busy moments of the noontide work I am with the crowd,
 but on this dark lonely day it is only for thee that I hope.
If thou showest me not thy face, if thou leavest me wholly aside,
 I know not how I am to pass these long, rainy hours.
I keep gazing on the far-away gloom of the sky,
 and my heart wanders wailing with the restless wind.

மழைகாலம் வந்துவிட்டால்  மேலே கரு மேகங்கள் தான் யானை  திமிங்கிலமாக தெரியும்  சூரியனை போர்வை போர்த்தி மறைத்து இருளை எங்கும் தரும்.   என் அன்பே, கிருஷ்ணா, எத்தனை நேரமாக என்னை கதவுக்கு வெளியே தன்னந்தனியே இந்த இருளில் உனக்காக  காத்து நிற்க வைக்கிறாய்? உண்மையில் இது   இரவல்ல . உச்சி வெயில் வேளை .  நான் கூட்டத்தோடு கூட்டமாக  அவரவர் வேலையில் ஈடுபட்டிருக்க  நான் அதில் ஒருவன் தனிமையாக, உன்னை நம்பி  இங்கே நிற்கிறேன்.  எதிர்பார்த்த மழை வேகமாகவே நிறைய கீழே இறங்கிவிட்டது. குளிர் எடுத்துவிட்டது.  உன் முகத்தை சீக்கிரம் காட்டுகிறாயா?  ஆவலோடு  காத்திருக்கிறேனே?  என்னை  இப்படியே தனியாக விட்டு விடுவாயா?  இந்த  ஜோ மழையில் நான் எங்கே போவேன். யாரை அணுகுவேன். உன்னை தவிர எவரையும் அறியேனே?  என் கண்ணில் படுவதெல்லாம் மங்கலான பரந்த கருமை கலையும் சாம்பல் நிற  ஆகாசம்...... விர்ரென்று  எலும்பை  பிளந்து ஊடுருவும் காற்றில் உஸ்ஸ்ஸ்  என்ற சப்தத்தோடு கலந்து என் இதயம் ஊசலாடுகிறதடா  கிருஷ்ணா......




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...