Friday, August 30, 2019

RAPURAM KRISHNA DEVOTEE



தெய்வங்களோடு தொடரும் வாழ்க்கை J K  SIVAN 








 என்று  ஸ்ரீ  கிருஷ்ணார்ப்பணம் சேவா  சங்கம்  தொடர்ந்தேனோ, அன்று முதல் அமோக மான  செல்வந்தன் நான். எங்கிருந்தெல்லாமோ எனக்கு ஸ்ரீ கிருஷ்ண பக்த நண்பர்கள். என்னை பரவசமாக்குகிறான் ஸ்ரீ கிருஷ்ணன்.  மேலும் மேலும் அவனைப் பற்றி நினைக்க வைக்கிறான். எழுத வைக்கிறான். தொடரட்டும்.. தொடர்ந்து கொண்டே  போகட்டும்.........அது ஒன்றே என் ஆசை... நிறைவேறுகின்ற  ஆசை....

அழகு தெய்வம்  ஒன்று உண்டு என்றால் அது கிருஷ்ணன் என்று குழந்தைகள் கூட சொல்லும்.  பக்தர்கள் உள்ளம் கொள்ளை கொள்ளும் மன்னன் அவன். அவனையும்  அவன் சோதரி அம்பாளையும்  சேர்த்து வழிபடும் ஒரு அருமையான வாசக சகோதரி  ராஜா அண்ணாமலை புரத்தில்  அற்புதமாக கிருஷ்ணனை,  ஸ்ரீ லலிதாம்பிகையை ஆசை ஆசையாக  அபிஷேகம்  செயது, அலங்கரித்து அர்ச்சனை செய்து,  மகிழ்ந்து வாழ்பவர். என்னை அவர் இல்லத்துக்கு  ஒரு அகண்ட  லலிதாம்பா பூஜைக்கு அழைத்து  என்னையும்  என் மனைவியையும்  தம்பதி பூஜையில் பங்கேற்க செய்தவர்.  ஆயிற்று மூன்று வருஷங்களாக இந்த நட்பு தொடர்கிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் அலங்கரித்த கிருஷ்ணனும்  அம்பாளும்  என்னிடம் வண்ணப்படங்களாக  வாட்ஸாப்பில்  வந்தடைவது எனது பூர்வ ஜென்ம சத் கர்ம பலன் என்று தான் சொல்வேன்.

''  எனது குரு அம்மையார்  உபதேசித்தபடி அவனை அலங்கரித்து பூஜை செய்ய ஆரம்பித்து  மூன்று  நான்கு ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் எனக்கு அவனை அலங்கரிக்க அலங்கரிக்க நேரம் போவதே தெரியவில்லை. அவனுக்கு போட்டியாக  அம்பாளும் எனக்கு தான் நீ  முதலில் அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம் எல்லாம் செய்யவேண்டும் '' என்று பிடிவாதமாக அவளை முதலில் அலங்கரிக்க செய்கிறாள்.  அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, பூஜை ஸ்லோகம் சொல்லி  நிவேதனம் அளித்து   அந்த பிரசாதத்தை உண்ணும் வரை என் உடல் உள்ளம் ஆவி எல்லாமே அவர்களிடம் தான்  என்கிறார் அந்த  கிருஷ்ண பக்தை.  


''ஒவ்வொருவர்  உலக வாழ்விலும் தம்மை மற்றவர்கள்  தங்கள் விருப்பம் நிறைவேற  ஒரு  கருவியாக  பயன் படுத்திக்கொள்வது  ஆன்மிக உலகிலும் உண்டு.  எனக்கும் அந்த  அனுபவம் உண்டு.   அதை உணரும்போது  மனது சங்கடம் சஞ்சலம் கொள்ளும், அமைதி குறையும்,  இது  எனக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தது வருத்தமடைய செய்தது என்றாலும் கண்ணன் அம்பாள் இருவரும் இதை எல்லாம் லக்ஷியம் செய்யாத திட மனதை அருளியதால்  இப்போதெல்லாம் இவை என்னை நெருங்குவதில்லை. என்னால் ஆன உதவியை, காரியங்களை  பூரண  மன திருப்தியோடு  செய்து தருகிறேன், பலன் எதிர்பாராமல்.  அதைத்  தானே  கீதையில் அவன் போதித்தான்'' என்கிறார்  அந்த  சகோதரி.  மனம் அன்பால் நிறைந்து பண்பட்டுவிட்டது.  

''கண்ணன், அம்பாள் என்னோடு எப்போதும் என் இல்லத்தில் என்னோடு வாழ்வது போன்ற ஒரு ஆனந்தம் மனதை நிரப்புகிறது.  இது தொடர்ந்து என்னை மகிழ்விக்க மனம் வேண்டுகிறது'' என்று  அவர்  சொன்னபோது என் கண்களில் ஆனந்த பாஷ்பம். 

சங்கீதத்தில் இளம் வயதில் நாட்டியத்தில்  ஈடுபாடு கொண்டவர். சங்கீத  நாட்டிய  நிகழ்சசிகள் நடத்தியவர். பொறுப்பான  குடும்பத்  தலைவி. இரு பெண்கள். கணவர் உயர்ந்த உத்யோகத்தில் இருப்பவர் என்ற சிறு உலக வட்டத்தில்  மற்றவர் போல் உழன்றாலும்,  தனித்து ஆன்மீக உலகில் கிருஷ்ணனோடு  சஞ்சரிப்பவர்.

இன்று என்னை அடைந்த, அவரிடமிருந்து வந்த  ஸ்ரீ கிருஷ்ணன்  அம்பாள் அலங்காரங்களை நீங்களும் கண்டு களிக்க வேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...