Thursday, December 10, 2020

MY ANCESTORS

 

என் முன்னோர்கள்    J K   SIVAN 


                                                   4.  நாங்கள்   எண்ணாயிரவர்    


பிராமணர்களில்  ''ஸ்மார்த்த''  வகுப்பில்  அதாவது  ஐயர்களில்,  நான்கு பிரிவு உண்டு.   அஷ்டஸஹஸ்ரம் , பிரஹச்சர்ணம் , வடமாள் , வாத்திமாள்.   இதில்  வடமாள், பிரஹச்சர்ணம் பிரிவினரைக்காட்டிலும் அஷ்டசஹஸ்ரம் பிரிவினர் ஜனத்தொகை நம்பரில்  குறைவு.   இந்த  பிரிவு    சுமார்  1000 ஆண்டுகளுக்கு  முன் ஏற்பட்டது.    கி.பி. 10 ம் நூற்றாண்டின் இறுதியில், பல்லவர்கள் ஆட்சியின்  போது  பல்லவநாட்டை  சேர்ந்த  

திண்டிவனம் - விழுப்புரம்   நடுவே  பருத்திக்கொல்லை என்ற  ஒரு கிராமத்தில் வாழ்ந்த ஸ்மார்த்த  பிராமணர்கள்  பல்லவர்களால் கட்டாய மத மாற்றம் மூலம் சமணர்களாக மாற்றப்பட்டனர். பல்லவ ராஜாக்கள் தீவிர சமணமதத்தை சார்ந்தவர்கள் அப்போது.   பல்லவர்களை சோழர்கள் வென்று  இந்த  பகுதிகள் சோழ சாம்ராஜ்யத்தில்  அங்கமாகியது.   அதாவது  1060 - 1070 ம் ஆண்டுகளின் போது  ராமானுஜர் வாழ்ந்த காலத்தில்  அவர்    ஸ்ரீரங்கத்திலிருந்து திருமலை-திருப்பதிக்கு யாத்திரை செல்லும் வழியில் பருத்திக்கொல்லை கிராமத்தில் தங்கினார். அப்பகுதி மக்கள்  எட்டாயிரம் பேர் ஸ்ரீமத் ராமாநுஜரிடம் , தாங்கள் கட்டாய மத மாற்றத்தால் சமணர்களாகி   துன்பப்படுவதை தெரிவிக்கிறார்கள்.   ராமானுஜர் அவர்களை  முன்பு போல்  ஸ்மார்த்த பிராமணர்களாக [எண்ணாயிரம்] அஷ்டசஹஸ்ரம் என்ற புதிய பிரிவாக
வாழ  அனுக்ரகம் செய்தார்  என்று படித்தேன்.  அவர்கள் வாழ்ந்த   பருத்திக்கொல்லை கிராமம்  ''எண்ணாயிரம்" என்று பெயர் பெற்றது.   அங்கு    ஒரு   அழகிய  நரசிம்மர் ஆலயம் உருவானது.   இன்றும்  இருக்கிறது. 

“பிராமணர்களுக்குள் அஷ்ட ஸகஸ்ர மென்பது ஒரு பிரிவு; அதற்கு எண்ணாயிரம் என்று அர்த்தம்.  தமிழ் தாத்தா  எங்கள் அஷ்ட ஸஹஸ்ரம்  பிரிவைச் சேர்ந்தவர். தூரத்து உறவினர் எனக்கு.  அவர்  சொல்வதைக் கேளுங்கள்: 

''அந்தணர்களுக்குள் எண்ணாயிரம் பேர்கள் ஒரு தொகுதியாக வடநாட்டிலிருந்து வந்த காலத்தில் அவர்கள்   ‘எண்ணாயிரத்தார்’ என்னும் பெயரால் அறியப்பட்டனர்.  பிறகு அவர்கள் பல இடங்களிற்
பரவி எண்ணாயிரம் எண்பதினாயிரமாக, எட்டு  லக்ஷமாக கூடப் பெருகிய காலத்திலும் அஷ்ட
ஸஹஸ்ரமென்ற  பெயர் நிலைத்து விட்டது.  தமிழ் நாட்டிற் பல இடங்களில் இருந்து வருகின்றனர்.  இப்போது உலகெங்கும் உள்ளனர். 

அஷ்ட ஸஹஸ்ரத்திலும்  மூன்று பிரிவுகள் உண்டு. அத்தியூர், அருவாட்பாடி, நந்திவாடி என்னும் ஊர்களின் பெயரால் அப் பிரிவுகள் வழங்கப்பெறும்.  நந்திவாடி யென்பது இன்னவூரென்று இப்போது தெரியவில்லை.
அவ்வூரிலிருந்த பிரிவினர் இக்காலத்தில் தேப்பெருமாள் நல்லூர், திருவையாறு,  முதலிய இடங்களில் இருக்கின்றார். அருவாட்பாடி என்பது மாயூரத்திற்கு வடகிழக்கே மூன்று மைல் தூரத்தில் திருக்குறுக்கை யென்னும் ஸ்தலத்துக்குப்  போகும் மார்க்கத்திலும், திருநீடூரென்னும் ஸ்தலத்துக்கு அருகிலும் உள்ளது;
அருவாப்பாடி என்று இப்போது வழங்கி வருகிறது. அருவாளர் என்ற ஒரு கூட்டத்தினருடைய பெயர் பழைய தமிழ் நூல்களிற் காணப்படுகின்றது.அருவாப்பாடி அவர்கள் இருந்த இடமாக இருத்தல் கூடுமென்று
எண்ணுகிறேன். அங்கிருந்த அஷ்ட ஸகஸ்ரத்தினர் கிடைத்த தொழில்களைப் பெற்று ஜீவித்து வந்தார்கள்.

அத்தியூரென்பது தென்னார்க்காடு ஜில்லாவில் உள்ளது. அதில் உள்ளவர்கள் சாஸ்திர ஞானமும் வைதிக ஒழுக்கமும் தெய்வ பக்தியும் உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் அவ்வூரில் ஒற்றுமையாக
வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரைப்பற்றி எங்கள் பிரிவினருக்குள் ஒரு வரலாறு வழங்கி வருகின்றது.

அத்தியூருக்கு வெளியூரிலிருந்து ஓர் அந்தணர் வந்திருந்தார். அவர் ஒரு வீட்டில் ஆகாரம் செய்த பிறகு திண்ணையில் படுத்திருந்தார்; நடு இரவில் எழுந்து வடக்கு முகமாக இருந்து அற்பசங்கைக்குப் போனார். அப்போது ஊர்க் காவலன் அவரைத் திருடனென்று எண்ணிப் பிடித்துக்கொண்டு, “நீ எந்த ஊர்?” 
 என்று 
கேட்டான்.
, “இந்த ஊர்தான்” 
 “நீ இந்த ஊர்க்காரனல்ல; நிச்சயமாகத் தெரியும். இந்த ஊர்க்காரனாக இருந்தால் இந்த மாதிரி செய்ய
மாட்டாய்”  
“அப்படி நான் என்ன காரியம் செய்துவிட்டேன்?” என்றார்.
“இந்த ஊரில் ‘இரா வடக்கு’ இல்லையே! இந்த ஊர்க்காரர்கள் இப்படி அநாசாரமாக நடக்க மாட்டார்களே!” என்றான்  காவல்காரன்..
இரவில் வடக்கு திசை நோக்கி அற்ப சங்கையைத் தீர்த்துக் கொள்வது அநாசாரமாகும். ஆசாரம் நிரம்பிய அத்தியூரில் ‘இரா வடக்கு’ இல்லையாதலால் அவர் வேற்றூராரென்று காவலன் அறிந்து கொண்டான்.  இந்த
வரலாறு அவ்வூராரினது ஆசார சீலத்தை விளக்குகிறதல்லவா?

அத்தியூர்ப் பிரிவினராகிய அஷ்ட ஸஹஸ்ரத்தார் தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி முதலிய இடங்களில் குடியேறித் தங்களுக்கு ஏற்ற தொழில்களைப் பெற்று வாழ்ந்து வரலாயினர்.ளராகவும் இருந்து வருகின்றனர்.
தமிழ்த்தாத்தா  உ. வே  சாமிநாதய்யரைத்தவிர  மற்ற  சில  எல்லோரும் அறிந்த  அஷ்ட ஸஹஸ்ர  பெயர்கள் சொல்கிறேன், ஒன்றுக்குள் ஒன்று நாங்கள் உறவினர்கள்.   வேளாண்மை விஞ்ஞானி  M .S. ஸ்வாமி நாதன் கர்நாடக சங்கீத வாக் கேயக்காரர்  ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர்,  சங்கீத வித்வான்  G NB ,  வீணை  S  பாலசந்தர், சினிமா டைரக்டர் K . பாலசந்தர் (எனக்கு நெருங்கிய உறவு),  சங்கீத வித்வான்  மதுரை மணி ஐயர்  கர்நாடக சங்கீத சாஹித்ய கர்த்தா,  பட்டணம் சுப்ரமணிய ஐயர் ,  அன்னதான சிவன்,  சேஷாத்திரி ஸ்வாமிகள் வம்சம்  என்று அடுக்கிக்கொண்டே  போகலாம்... 

என்  தாய்  வழி பாட்டனார்,  பிரம்மஸ்ரீ  வசிஷ்ட பாரதியார்,  ஒரு  கம்பராமாயண  ப்ரவ்சன  கர்த்தா. ஸ்ரீ  ராம பக்தர்.   சிறந்த  தமிழறிஞர்.  அறிஞர்கள்  பலரால்  புகழப்பட்டு  வாழ்ந்தவர்.   அவரைப்பற்றி  முன்னரே  எழுதியிருக்கிறேன்.  

அவர் முன்னோர்கள், முன் முன் முன்னோர்கள் எல்லோருமே ராம  பக்தர்கள், தமிழ் அறிஞர்கள்,  பக்திமான்கள். அவர்களில் சிலரைப்  பற்றி  நான்  சொல்லும்போது  நீங்களும்  அக்காலத்தை பற்றிய விவரங்கள் உங்களுக்கு  முற்றிலும்  புதிதாக  இருக்கும்  சுவாரஸ்யமாக அனுபவிப்பீர்கள்  என்ற நம்பிக்கை இருக்கிறது.

 அப்போது ஆங்கிலேயர்கள்  நமது நாட்டில்  காலடி  எடுத்து வைத்த  நேரம்.  நாடு முழுதுமாக   முகலாய  அரசர்கள்  ஆண்டுவந்தனர்.  தனித்  தனி  பிரதேசங்களாக  நாடே  பிரிந்து கிடந்தது.  அங்கங்கு  அந்தந்த  ராஜாக்கள், அதிகாரிகள்  வைத்தது  தான்  சட்டம்  நியாயம்.  வாழ்க்கை  எவ்வளவு அநித்தியமாக கஷ்டமாக  இருந்திருக்கும்  என்று  யோசனையோடு நிறுத்திக் கொள்வோம்.    தெற்கே,  சில நாயக்க  மன்னர்கள், மராத்திய  ராஜாக்கள்  கொஞ்சம்  மனதில்  ஈரமோடு, பக்தியோடு,  ஆதரித்த காலம். இடையிடையே  முகலாய சுல்தான்களின்  ஆதிக்கம்  தலை தூக்கியபோது  கடவுள்களையே  காப்பாற்ற  வேண்டியிருந்தது.  கர்நாடக  வடுக  நாயக்கர்கள்  திருச்சி,  மதுரை  தஞ்சை, பிரதேசத்தை  ஆண்டபோது  வடக்கே  முழுதுமாக  முகலாயர்களின்  ஆதிக்கம்  தலைவிரித்தாடியது.   அங்கிருந்த மக்கள் பட்ட  கஷ்டம்  நமக்கு  தெரியவில்லை  என்பதை  அதிர்ஷ்டமாக  எடுத்துக்கொள்வோம். அந்த துன்பங்களை  விவரித்தால்  இதைப் படித்தபின்  பலர்  தூக்கம் இழக்க நேரிடும். துக்கம் தொண்டை அடைக்கும்.

தஞ்சாவூர் எங்கள்  முன்னோர்களின் பூர்விகம்  அங்கு  மராட்டிய ராஜாக்கள் ஆண்டனர்.

 கம்பர்  ராமாயணத்தில்  ஒரு  இடத்தில்  ''இருபிறப்பாளர், எண்ணாயிரர், மணி க்கலசமேந்தி, அருமறைவருக்கமோதி...'''  என்கிறார்.. 

(அயோத்தியில்  தசரத  மகாராஜவோடு  இந்த எண்ணாயிர  வகுப்பு அந்தணர்,  வேதங்களோதி, மன்ன னோடிருந்தனர் ...ராமன்  கல்யாணத்திற்காக  அனைவரும்  மிதிலைக்கு  சென்றபோது  இவர்களும் கூடவே  சென்று  ராமன்  சீதா  தம்பதிகளை   ஆசிர்வதித்தனர் என்று  வருகிறது)  

கால  வேறுபாட்டில்  எங்கெங்கோ  அலைந்து  கலைந்து  பிழைப்பைத்  தேடி  சிதறி விட்டனர். அவரில் சிலரே தென்னிந்தியாவில்   நந்திவாடி, அருவாப்படி,  அத்தியூர்  பகுதிகளில் பெரும்பாலராக தாங்கினார்.   நான்  மேலே  சொன்ன ஊர்களில்  குடியேறினர்.   இது வரை  என் முன்னோர்களின் பூர்வீகம் பற்றி சொன்னேன். இனி ஐந்து தலைமுறைக்கு முன்  வாழ்ந்த  எள்ளு கொள்ளுப்பாட்டனார்கள்  எனது கட்டுரையில் இடம் பெற்று வமிசம் வளரப்போகிறது....




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...