Tuesday, December 8, 2020


 


ஆதி சங்கரர்              J K   SIVAN 


 
                  ॥ பகவான்மானஸ பூஜா ॥


இன்று விடிகாலை நான்கு மணிக்கு  ஆதி சங்கரரின் பகவான் மானஸ பூஜா  என்ற அற்புத  ஸ்தோத்ரம் படித்தேன். ஆதி சங்கரர் அத்வைதி , ஷண்மத ஸ்தாபகர். சாக்ஷாத் பரமேஸ்வரன் அவதாரம் என்பார்கள். ஆனால்  அவர் குடும் பமே  குருவாயூர் கிருஷ்ண பக்தர்கள்.  இன்றும்  காலடியில்   சங்கர அவதார க்ஷேத்ரத் தில் அவர் வணங்கிய கிருஷ்ணன் கோவில் கொண்டி ருக்கிறான்.  ஆதிசங்கரர் க்ரிஷ்ணாஷ்டகம் கோவிந்தாஷ்டகம் எல்லாம் எழுதியவர், பகவத் கீதா பாஷ்ய கர்த்தா . விஷ்ணுவின்  முதல் பக்தன் சிவன் என்பார்கள் அது ரொம்ப சரி சங்கரர் விஷயத்தில். ஆதிசங்கரருக்கு  கிருஷ்ணன் மனதில் தோன்றினான் .  மனசார அபிஷேகித்து,  அலங்கரித்து,  அர்ச்சனை செய்து, ஸ்தோத்ரம் பஜிக்கிறார்.  அது நமக்கும் கிட்டி இருப்பது நாம் செய்த பூர்வ ஜென்ம பலன். 

हृदंभोजे कृष्णस्सजलजलदश्यामलतनुः
सरोजाक्षः स्रग्वी मकुटकटकाद्याभरणवान् ।
शरद्राकानाथप्रतिमवदनः श्रीमुरलिकां
वहन् ध्येयो गोपीगणपरिवृतः कुङ्कुमचितः ॥ १ ॥  

ஹ்ருத³ம்போ⁴ஜே க்ருஷ்ண꞉ ஸஜலஜலத³ஶ்யாமலதனு꞉
ஸரோஜாக்ஷ꞉ ஸ்ரக்³வீ முகுடகடகாத்³யாப⁴ரணவான் |
ஶரத்³ராகானாத²ப்ரதிமவத³ன꞉ ஶ்ரீமுரளிகாம்
வஹந்த்⁴யேயோ கோ³பீக³ணபரிவ்ருத꞉ குங்குமசித꞉ || 1 ||

கண்ணை திறந்தாலும் கிருஷ்ணன், கண்ணை மூடினாலும் கிருஷ்ணன். ஆஹா என்ன அற்புதமான ரூபம் கொண்டவன். சூல் கொண்ட கருமேகம் போன்ற நிறத்தன் . தாமரைக் 
கண்ன்.  வனமாலைகள் சூடுபவன், மயிற்பீலி க்ரீடன், கங்கணதாரி , கார்கால நிலவு போன்றவன். கையில்  ஜீவநாதம் தரும்  புல்லாங்குழல் தரித்தவன்.  அவனது  தெய்வீக இசையில் மயங்கி தனைமறந்து நிற்கும்  கோபியர் புடை சூழ காட்சி அளிப்பவன். கருநிற நெற்றியில்  செக்கச்செவேலென ரத்தநிற குங்கும திலகம்.  சந்தனம்  இருக்கவே இருக்கிறது.

पयांभोधेर्द्वीपात् ममहृदयमायाहि भगवन्
मणिव्रातभ्राजत् कनकवरपीठं भजहरे ।
सुचिह्नौ ते पादौ यदुकुलज नेनेज्मि सुजलैः
गृहाणेदं दूर्वादलजलवदर्घ्यं मुररिपो ॥ २ ॥  

பயோ(அ)ம்போ⁴தே⁴ர்த்³வீபான்மம ஹ்ருத³யமாயாஹி ப⁴க³வன்
மணிவ்ராதப்⁴ராஜத்கனகவரபீட²ம் நரஹரே |
ஸுசிஹ்னௌ தே பாதௌ³ யது³குலஜ நேனேஜ்மி ஸுஜலை꞉
க்³ருஹாணேத³ம் தூ³ர்வாப²லஜலவத³ர்க்⁴யம் முரரிபோ || 2 ||

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா, வா , என் மனதில் குடியேறு . உனக்காகவே என் மனதில்  மிகப்பெரிய தங்க ஸிம்ஹாஸனம், நவரத்ன  கற்கள் பளபளவென்று  ஜ்வலிக்க, இட்டு வைத்து காத்திருக்கிறேன். இதோ பார்த்தாயா புனித  கங்கை  யமுனா ஜலம் , உனக்கு பாத அபிஷேகம் செய்ய வேண்டும். வா உன் பாத தீர்த்தம் அருந்தவேண்டும்.  முரன் போன்ற பலம்மிக்க  ராக்ஷஸர்களை வதம் செய்த முராரி, வா, உனக்கு  பல புண்ய தீர்த்த அபிஷேகம் செய்ய வேண்டும். எல்லாவற்றையும்  விட  துருவ புல்  முனையில் முத்தாக கோர்த்து நிற்கும்  பனிநீர் சொத்து களால் அபிஷேகம் பண்ணுகிறேன்.

 त्वमाचामोपेन्द्र त्रिदशसरिदंभोऽतिशिशिरं
भजस्वेमं पञ्चामृतरचितमाप्लावमघहन् ।
द्युनद्याः कालिन्द्या अपि कनककुंभस्थमिदं
जलं तेन स्नानं कुरु कुरु कुरुष्वाचमनकम् ॥ ३ ॥  

த்வமாசாமோபேந்த்³ர த்ரித³ஶஸரித³ம்போ⁴(அ)திஶிஶிரம்
ப⁴ஜஸ்வேமம் பஞ்சாம்ருதரசிதமாப்லாவ்யமக⁴ஹன் |
த்³யுனத்³யா꞉ காளிந்த்³யா அபி கனககும்ப⁴ஸ்தி²தமித³ம்
ஜலம் தேன ஸ்னானம் குரு குரு குருஷ்வா(அ)சமனகம் || 3 ||

சகல பாபங்களையும் போக்குபவனே, இதோ நீ பருக வென்று குளிர்ந்த கங்காஜலம்,  உனக்கு அபிஷேகம் செய்யவென்றே  நிறைய  உயர் ரக  பழங்களை பறித்து  பஞ்சாமிர்தம் தயார். தங்க குடங்களில் உனக்கு பிடித்த யமுனா நீர்.   நன்றாக குளி . முகத்தில் பார் எத்தனை மண்.  நன்றாக முகத்தை தேய்த்து  தேய்த்து குளி . 
உனக்கு  கங்கையின் குளிர்ந்த பனிநீர், யமுனையின் தெளிந்த இனிய நீர் எவ்வளவு குடங்களில் பார்த்தாயா?

तटिद्वर्णे वस्त्रे भज विजयकान्ताधिहरण
प्रलम्बारिभ्रातः मृदुलमुपवीतं कुरु गले ।
ललाटे पाटीरं मृगमदयुतं धारय हरे
गृहाणेदं माल्यं शतदलतुलस्यादिरचितम् ॥ ४ ॥  

தடித்³வர்ணே வஸ்த்ரே ப⁴ஜ விஜயகாந்தாதி⁴ஹரண
ப்ரலம்பா³ரிப்⁴ராதர்ம்ருது³லமுபவீதம் குரு க³ளே |
லலாடே பாடீரம் ம்ருக³மத³யுதம் தா⁴ரய ஹரே
க்³ருஹாணேத³ம் மால்யம் ஶதத³ளதுலஸ்யா விரசிதம் || 4 ||

கண்ணைக்கும்  உலர்ந்த வஸ்திரங்கள் பார்த்தாயா?  உனக்காக  நான்  நன்றாக துவைத்து உணர்த்தியது. மின்னலைப் போல் கண்ணைப்பறிக்கிறதே. புது யக்னோபவீதம். பூணல்,  போட்டுக்கொள். நீ அதை தரித்துக் கொண்டால்  எங்கும்  சர்வ பயமும் உணர்ச்சி களும்  அடங்குகிறது. பலராமா , அண்ணா,  நீயும் தான் நெற்றிக்கு இட்டுக்கொள் . சந்தனமும் ஜவ்வாதும் கமகமக்கிறது. உங்களுக்கென்றே  துளசி தளங்கள், தாமரை மொட்டுக்கள்  சேர்த்து அடர்த்தியாக மாலை கட்டி வைத்திருக்கிறேனே .
to be continued  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...