Wednesday, December 23, 2020

MY ANCESTORS

 



என் முன்னோர்கள்   J  K   SIVAN 


                        13.     இந்த  ஜாதகன் ஒரு யோகீஸ்வரன்.

நான் இந்த ''எங்கள் முன்னோர் '' தொடரை  ஆரம்பித்ததிலிருந்து எண்ணற்ற அன்பர்கள், முக்கியமாக  அஷ்ட ஸஹஸ்ர வகுப்பினர்  பல பெயர்களை அறிமுகம் செயகிறார்கள். அஷ்டஸஹஸ்ரம் குழுவில் ஒருவருக்கு ஒருவர் எப்படியாவது  உறவினராக இருப்பது உறுதி.   

அஷ்ட ஸஹஸ்ரம் அய்யர்கள்  சைவர்கள். சைவ  உணவே  உட்கொள்வார்கள். சாப்பிட்டபிறகு  வெற்றிலை, பாக்கு  சுண்ணாம்பு தடவி தாம்பூலம்  அணியும்  பழக்கம்.  நெற்றியில்  பட்டையாக  விபுதி, கழுத்தில்   ஒற்றை  ருத்ராக்ஷம்,  சிலர்  ருத்ராக்ஷ மாலை  அணிவார்கள்.  புகையிலை  பொடி போடும் வழக்கமும்  உண்டு. குலத்தை  பற்றி ப்ரவரம்  என்று   ரிஷிகளின்  கோத்ரம் சொல்வார்கள்.  அனேகமாக.  ஆத்ரேயா, கவுண்டின்ய, ஸ்ரீவத்ச, பாரத்வாஜ, ஹரித கோத்ரம்  அநேகருக்கு.     சூத்ரத்தை பொருத்தவரை,  பெரும்பாலும்  அஸ்வலாயன, ஆபஸ்தம்ப, போதாயன  சூத்ரம்  நிறைய பேருக்கு  பொதுவானது.

 ஒவ்வொரு பிரிவினரும்  தத்தம்  பிரிவிலேயே  திருமணத்திற்கு   பிள்ளை, பெண் கொடுக்கல் வாங்கல் செய்து வந்தது  இப்போது  மாறி விட்டது. அப்போதெல்லாம்   மாமனாரை  மருமகள்  நேரில் பார்த்து பேச மாட்டாள்.  மாமியார்  மருமகனை நேரில்  முகம் பார்த்து பேசமாட்டாள்.  அப்பாவுக்குப்பிறகு  மூத்த மகன் தான்  குடும்பத்தலைவன்.  எல்லா பிள்ளைகளுக்கு  மட்டும்  சொத்தில்  சரி பங்கு.  பெண்களுக்கு  கிடையாது.  இந்த  சட்டம்  எல்லாம்  இப்போது  செல்லாது.  பெண்கள்  அடுப்பங்கரையோடு  சரி.  குடும்ப விஷயங்களில்  அபிப்ராயம்  சொல்லமாட்டார்கள்.  விசேஷ  காலங்களில்  விரதம்  அனுஷ்டிப்பார்கள். இதெல்லாம் இப்போது  மாறிவிட்டது.  காற்றில் எல்லாம் பறந்து விட்டது ஒருவிதத்தில் நல்லது. '' எல்லாம்''  பறந்துவிட்டது என்று உணரும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.   இதெல்லாம் பழசு விடக்கூடாதோ அதை கெட்டியாக பிடித்து வைத்துக் கொள்ளவேண்டும். உறவு முறைகள்.  பழைய பழக்கங்கள் சில என்றும் நல்லவை. சுத்தம், சுகாதாரம் அவசியம்.  

 சில அஷ்ட ஸஹஸ்ர நண்பர்கள்  முயற்சிகள்  செய்து  இந்த  வகுப்பினரின்  வம்சாவளி  போன்ற  விவரம்  திரட்டுகின்றனர்  என்று  அறிகிறேன்  அவர்கள் இந்த  ருசிகர  விவரங்களை  அளித்தால்  நாம்  எல்லாம்  மகிழ்வோமே.  இத்தனை காலம் தெரியாத  உறவுகள் புலப்படலாம். புது உறவுகள்  அன்பையும் இன்பத்தையும் மனதுக்கு அளிக்கட்டுமே .

 என்  பங்குக்கு   எனக்குத்  தெரிந்த நான்  அறிந்த,  தேடி சேகரித்த  சிலரைப்பற்றி நானும் முயன்றவரை இக்கட்டுரைகளில் தருகிறேன்.  இதைப் படிக்கும்  அஷ்ட சஹஸ்ர காரர்கள்  அந்த வம்சத்தில் வந்தவர்கள் தங்களை இன்னாரென்று அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.  மற்றவர்களும் 
 தாமறிந்தவர்கள்  பற்றிய விவரங்கள் தகவல்கள்  தரட்டுமே.  இந்த தேடலில்  சேர்ந்து கொள்ளட்டுமே. உறவு பலப்படட்டுமே.
இனி என்  முன்னோர்  கதைக்குள்  மறுபடி  மூழ்குகிறேன்.


வாழ்க்கை  ஒரு சகடம். சக்கரம் என்பார்கள்.  யாருக்கும் காத்திருக்காத  ஒரு பிரேக் இல்லாத  வண்டி அது. பின்னோக்கி செல்லாமல் முன்னோக்கி மட்டுமே  செல்லக்கூடியது. பக்கவாட்டில்  திரும்பாது. நாம் தாம் திரும்பி உட்கார்ந்து கொள்ளவேண்டும்.

ராமஸ்வாமி பாரதி தனது ராமாயண பிரசங்கத்தை  தந்தை பரசுராம பாரதியின் அனுகிரஹத்தோடு  மறுநாள் அன்று ஆரம்பித்தார்.    ராமநாடக கீர்த்தனை புத்தகத்தை  பூஜையில் வைத்து  ராமாயண பாராயணம் செய்தார்.   பானகம், நீர்மோர் சுண்டல் பழங்கள்   நைவேத்தியம் பண்ணிவிட்டு  எல்லோருக்கும்  பிரசாதமாக அளித்தார். பிறகு தனது முதல் ராம சரித்ர  பிரசங்கத்தை ஆரம்பித்தார். எங்கோ ஒரு பெரிய  மண்டபத்திலோ,  ஆயிரம் பேர் கூடிய விழாவிலோ அல்ல. தனது வீட்டு திண்ணையில், சோழகர் கொடுத்த  பெரிய  திண்ணை பள்ளிக்கூடத்தில் தான்.

வாழ்க்கை  சந்தோஷமாக  ஓடிய  காலம். ராமஸ்வாமி பாரதிக்கு   ஒரு  மகன் பிறந்தான்  பிச்சு  பாரதி  என்கிற  பட்டாபிராமன்.   குழந்தையின்  ஜாதகத்தைப் பார்த்த ஜோசியர்கள்  இவன் ஒரு யோகீஸ்வரன். பிற் காலத்தில் குருவாக போற்றப்படுவான் என்கிறார்கள்.  அது  உண்மையாகியது.    சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்  பிச்சு பாரதி மிகவும்  வேண்டப்பட்டவராக கருதப்பட்டு  ராஜாவுக்கும் அவர் குடும்பத்திற்கும்  ஒருவிதத்தில்  குருவாக  இருந்தார். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...