Tuesday, August 11, 2020

THIRUPANAZHWAR

 நான்  என்ன  திருப்பாணாழ்வாரா?  J K SIVAN  


சுத்தமான பக்திக்கு இலக்கணம் வேண்டாம். ஜாதி ,மதம், இனம், குலம் ,பணம்,  பதவி, படிப்பு, இவை  எதுவுமே இரண்டாம் பக்ஷம். முதல் மார்க் பக்திக்கு மட்டுமே.   இதற்குப் போய்  காரணம் எதுவும் தேட வேண்டியதே இல்லை. அடி மனதில் இருந்து பொங்கி வரும் உணர்ச் சிக்கு விளக்கம் கிடையாது. மனதில் எங்கோ ஒரு மூலையில்,   இல்லை, இல்லை, மனம் பூரா பொங்கி வழிந்து இதயத்தில் அந்த தெய்வத்தை நிலையாக நிறுத்தி ஸ்வானு பவத்தில் (தானாக) ஆழ்வது.   அதற்கு இணை எதுவுமே இல்லை. அது எல்லா குறைகளையும் நிறைவு செய்துவிடும்.

முதல் முதலாக ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் சந்நிதி யில் நிற்கிறார் திருப்பாணாழ்வார். வாழ்க்கை யில்  கிட்டமுடியதா, கிட்டாத, ஒரு ஆனந்த அனுபவம்.  கனவிலும் இது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு இல்லை. சொல்லொணா இன்பம் மனதில் பொங்கி வழிய,  கண்கள் ஆனந்த பாஷ்பத்தை ஆறாகப்  பெருக வைக்கிறது. பார்க்கும் எதுவும் அரங்கனாகவும், கண்ணில் பட்ட இடம் எல்லா மே வைகுண்டமாகவும் தெரிகிறது.  இத்தனை காலம் கோவிலுக்கு ரொம்ப தூரத்திலே மட்டுமே நிற்க தகுதியுள்ள என்னை, கோவிலுக்குள் அனுமதித்து, மேலும் தன் அருகிலேயே நின்று கண்ணார சேவிக்க அருள் செய்த அரங்கா. நான் காண்பது  கனவா நினைவா? நிஜமா?  பொய்யா?  --      உருகுகி றார் பாணர்.

அக்கணம்   அவர்  மனத்தில் உருவான பக்தி, பொங்கி எழுந்து பாசுரமாக எளிய தமிழில் தெள்ளிய நீரோடை யாக தங்கு தடையின்றி வெளியே      ''அமலனாதி பிரானாக''    ஓடி வருகிறது. பக்தி ப்ரவாஹம் அரங்கன் சந்நிதியிலிருந்து உருவாகி மெதுவாக நாதமுனிகளை அடைந்து அங்கிருந்து நிதானமாக நாலாயிர
திவ்யப் பிரபந்தத்தில் இடம் பெற்று ஆரம்பத்தில் சிறிதாக கங்கோத்ரியில் தோன்றி பெரும் கடலென கிழக்கு நோக்கி ஓடி கடலில் கலக்கும் கங்கையைப்  போல,...

பத்தே பத்து பாசுரங்கள் பாடினாலும்,   அது  பல கோடி ஸ்ரீ வைஷ்ணவர்களில் நாவில் தங்கி அவர்கள் மனதை நிரப்புகிறதே . தங்கு தடையில்லாமல் மனதில் குடி கொள்கிறதே.  ஆகவே தான்,  நான் இந்த பாணரை  ''பத்தே பாசுர பலே ஆழ்வார்'' என்று மகிழ்ச்சியோடு அழைத்தேன்.

திருமாலின் கமல பாதத்திலிருந்து துவங்கி திருப்பாணாழ்வார் மற்ற அங்கங்களின் அழகையும் அனுபவிக்கிறார். விவரிக்கிறார். எல்லாவற்றையும் விட எனக்கு பிடித்த  பத்தா வது பாசுரம் மிக மிக அருமையான மனதை கவரும் பக்தி ரசம் பொங்கி வழியும் தமிழ்ப் பா.

10."கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே."

‘’அடே, வெண்ணெய் திருடா, '' மக்கன் சோர் '' (வடக்கே  வெண்ணெய் திருடன்) , உன் கடை வாயில் இருக்கும் வெண்ணெய்,  உன்னைக்  காட்டிக் கொடுத்துவிட்டதே, இப்போது நினைத் தாலும் சிரிப்பு வருகிறதே.

''கிருஷ்ணா  உண்மையைச் சொல் ,வெண்ணை
யை  நீயா திருடினாய்? --   யசோதை கண்கள் சிவக்க கோபமாக கேட்கிறாள்.
 ''வெண்ணையா, தெரியாதே அம்மா , நான் பார்க்கவே இல்லையே''

என்று உன் தலையை  ஆட்டி நீ பொய் சொல்லி நம்பும்படி நடித்தாலும், உன் இதழ் ஓரம், உன் கரிய கன்னத்தில்,  வெள்ளை நிறத்தில்,  சிறு சிறு வெண்ணைத் துளிகள்,  உன் திருட்டைக் காட்டிக் கொடுத்த பேரழகை யசோதை மட்டுமா கண்டாள்.

 ‘’ஆஹா, தேவாதி தேவா, என் அமுதமே, நீல மேக ஸ்யாமளா, கண் மூடி நின்றாலும் நெஞ்சில் உன் திரு அழகு என்னை அடிமை கொண்டதே. உன் அழகைப் பருகிய என் கண்கள் இனி வேறெதையுமே காணப் போவதில்லை, முடியாதே, என் கண்ணை உன்னிடமிருந்து  நான்  அகற்றினால் தானே   மற்றதெல்லாம் பார்க்க முடியும்? 

'' கண்ணா நீயே என் கண்ணாகி, கண்ணனா கிய'' பின் வேறென்ன இருக்கிறது காண?'' '
'உனைக் காணாத கண்ணும் கண்ணல்ல..... என்று ஒரு சினிமா பாட்டு இந்த பாணரை, ஆழ்வாரை, நினைவூட்டுகிறது.

இந்தக் கடைசி பாசுரம் பாடிய திருப்பா ணாழ்வார்   மறுபடியும்  லோகசாரங்கரின்  தோள் மீது ஏறி ஸ்ரீ ரங்கம் திரும்பவில்லை. அதற்கு தான் அவசிய மில்லையே, அங்கேயே அப்போதே அரங்கனோடு ஒருங்கிணைந்து இரண்டறக் கலந்தபின் நம் நெஞ்சிலே அல்லவோ ஆழ்வார் அமலனாதி ''பிரானாகி'' விட்டார்.

திருக்கோளூர் பெண்பிள்ளை எனும் மோர்  தயிர் விற்கும் ஒரு சாதாரண பெண்மணி  திருப்பாணாழ்வார் சரித்திரம் நன்றாக தெரிந்தவள். .

''திருப்பாணாழ்வாரைப்  போல் பண்ணிசைத்து,
 பெருமாளின் புகழ் பாடி, அவனருளைப் பெற்று, பெருமாளுடன் கலந்தேனா?  நான் எவ்விதத்தில் உயர்ந்தவள், எனக்கு எந்தவிதத்தில் இந்த திருக்கோளூரில் தங்கி வாழ தகுதி, சொல்லுங் கள் ஸ்ரீ ராமானுஜரே'' என்று அல்லவோ அவரைக் கேட்டவள்.
   

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...