Friday, August 7, 2020

GITANJALI

 


கீதாஞ்சலி  29       J K   SIVAN  

தாகூர் 

             
   29.   ''எனக்கு,   நான்''   வேண்டாம்

 29  He whom I enclose with my name is weeping in this dungeon.
I am ever busy building this wall all around;
and as this wall goes up into the sky day by day
I lose sight of my true being in its dark shadow.
I take pride in this great wall, and I plaster it with dust and sand
lest a least hole should be left in this name;
and for all the care I take I lose sight of my true being.

தாகூர் எதையும் நேரடியாக சொல்லாத ரகசிய மனிதர்.  உள்ளுக்குள்ளே   எண்ண எரிமலைகள்  ஹிமாலய அமைதி,  ஆகாய  தாராளம் எல்லாம் கலந்த அதிசய கவிஞன், சிந்தனை சிற்பி. 

என் பெயர் தாங்கிய ஒரு ஜீவனை,  அல்லது  கிருஷ்ணா   நீயே தான்  நானா,  ரெண்டும் ஒன்று தானே,  இந்த ஜீவனுக்குள் அந்த ஆத்மா, அந்தராத்மா,   வெளிச்சம் பார்க்காத  இருட்டறையில் பார்க்கலாம்.  மனச்சிறை.  சாதாரணமாக  சப்தமில்லாமல்  அல்ல. எந்நேரமும்  விம்மி விம்மி அழுதுகொண்டே அல்லவோ  இருக்கிறது என் ஜீவன். பின்னே என்ன?  அதை சுற்றி நாலா பக்கமும்  சுவர் எழுப்பியாகிவிட்டது.  கொஞ்சம்  கொஞ்சமாக  சுவர் உயர்ந்துகொண்டே வருகிறது.  விண்ணைத் தொடும் போல் இருக்கிறது.  அடடா  நான் எழுப்பிய சுவரப்பர்த்து பெருமையுடனும் பிரமிப்புடனும் நிற்கிறேன்.

என்  ஜீவன் அதற்குள்   ஆன்மா,  இதைச்  சுற்றி சுவர்  மேலே  மேலே  உயரமாக  எழும்ப   அந்த  சுவர்களின்  வளர்ச்சியை , உயரத்தை  அண்ணாந்து பார்த்து மலைத்து போகிறேன்.   அதன் நிழலில் நான், ..,,, நான் தான் உள்ளே, நான் தான் வெளியே..

சுவற்றை   நன்றாக புழுதி மண் எல்லாம் கலந்து  சிமெண்ட்  போட்டது  போல்  கெட்டியாக  பூசி விட்டாயிற்று.    ஒரு துவாரம் கூட  அந்த   என்னை சுற்றியுள்ள  ''ஜீவ சமாதியில்''    விடவில்லை.  ஆமாம்  ''என்னை ''பற்றிய  எதுவும் இனி இல்லை...எந்த விஷயமும்  வெளியே  கசியக்கூடாது  என்பது தான் என் எண்ணம்.    அதன் இருண்ட  நிழலுக்குள்   ''நான்,  எனது''   என்ற என் அடையாளமே மறைந்து போகட்டுமே. வெளியே தெரியவேண்டாமே. 

 நான் எதற்காக இவ்வளவு அக்கறையோடு இப்படி எல்லாம் செயகிறேன் தெரியுமா. '' நான்,  எனது '' என்பவை எல்லாம் என் கண்ணுக்குக் கூட தெரியவேண்டாம்.''   அப்படியென்றால்  யார்  அதற்குப்பதில் தெரிய  வேண்டும்???  நீ தான்   கிருஷ்ணா   நீ தான்''.  நீதானே  உண்மையில் நான். தனியாக  ''நான்'' தொலைந்து போகட்டும் என்று தானே இவ்வளவு முயற்சி. என்னை நான் வருத்திக் கொள்ளாமல்  ''அது''  தொலைய வழியே இல்லை. 

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...