Thursday, August 27, 2020

RAHU KALAM

 


                                                   ராகு காலம்  J K  SIVAN  

 நல்லது  நாலு பக்கத்திலிருந்தும் வரட்டுமே .   ராகு காலம்  என்றால்   நல்ல காரியம்  ஒன்றும் செய்யக்கூடாது  என்று  மட்டும்  பலமாக  நம்பும்  நம்மில் பலருக்கோ  சிலருக்கோ  அது பற்றிய  மற்றொரு தெரிந்த விஷயம்  சூரியனை   அப்பப்போ ராகு  விழுங்கி மீண்டும் 
வெளியே  விட்டு  விடுவது.  க்ரஹணம் என்பதே  சூடான  இட்லியை  லபக் என்று விழுங்கமுடியாமல்  வெளியே  தள்வது  மாதிரி.  ஆனால் சயன்ஸ் புஸ்தகம்  சூரியனுக்கும்  பூமிக்கும்  இடையே  சந்திரன் குறுக்கிடும்போது விளையும்  நிழல்  தான்  க்ரஹணம்  என்று வருஷா வருஷம்  பள்ளிக்கூடத்தில் சொல்லிக்  கொடுக்கிறது.  என்ன தான் சயன்ஸ் இதை  நிறைய சொன்னாலும் இந்த  ராகு பாம்பு சூரியனை யும்  சந்திரனையும்  விழுங்கும் கதையை  மாற்ற தலை கீழாக  நின்றாலும் முடியாது. 


 ஒரு   சில  சுவாரஸ்ய விஷயங்கள் இது சம்பந்தமாக தெரிந்து கொள்வோம்.  காலம் காலமாக  இருக்கும் நமது முன்னோர்களின் 
 நம்பிக்கையின்  அடிப்படையை  நடுவில் தோன்றிய  விஞ்ஞானம்  மாற்ற முடியவில்லை.  

விஞ்ஞானத்தை பொறுத்தவரை  ராகுவும்  கேதுவும்  கிரஹங்களாக காண்பிக்கப்படவில்லை.  இவர்களை சூரியனின்  கதிர்களின் வண்ணக் கற்றைகளாக பாவிக்கப்பட்டுள்ளது.  வானவில்லின்  7  வர்ணங்கள்   தெரியுமல்லவா  (vibgyor).  அதை அப்படியே  திருப்பிபோடுங்கள்.  என்ன வருகிறது?  roygbiv -- அதாவது  சிகப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை,நீலம்  ஊதா போன்றவை. வயலட்  என்ற கடைசி வர்ணக்கற்றைகள்  போலவே   அதே பேரில்  கொஞ்சம்  மாறி  மற்றொரு கற்றை உள்ளது. அதற்கு  அல்ட்ராவயலட்  கதிர்கள்  என்று  பெயர்.  

அவற்றை  நாம்  இந்த  ஏழு வர்ணங்களைப்போல  நமது கண்களால்  காண  முடியாது.     இதெல்லாமே  சூரியனின் கதிர்கள்  உண்டாக்குபவை தான்.  

ஒரு  ஞாயிற்றுக்கிழமையை எடுத்துக்கொண்டு  அதன் பகல் நேரத்தை  8 பாகமாக்குவோம்.  அந்த  பகல்  பன்னிரண்டு மணி நேரங்களை  சமமாக  தலா   தொண்ணுறு நிமிஷம், ஒண்ணரை  மணி நேரம் என்று   எட்டு  பாகமாக  பகிர்ந்துவிட்டோம். இந்த  வரிசைக்  கிரமமாகத்தான்  சூரியனின்  கதிர்களின்  வண்ணங்கள்  நம் மீது விழும்.

ஏழு தெரிந்த  வர்ணங்களோடு  இந்த  எட்டாவது   ரகசிய ஆசாமி  அல்ட்ராவயலட் கதிர்கள் நமக்குத் தெரியாமலே  நம்மை ஆக்ரமிப்பான்.  கொரோனா மாதிரி.   இவனுக்கு  நம் முன்னோர்  கொடுத்த  பெயர்  தான்  ராகு.  அவன்  உக்ர மாக   நம்மை அணுகும் நேரத்தில்  நாம்  அவனை  நெருங்காமல்  நம்மை  பாதுகாத்துக்கொள்ளும்  நேரம் தான்  ராகு காலம்.

ஒவ்வொரு  நாளும்  பகல் பொழுது  எட்டு  மணியில்   எப்போதெல்லாம்  இந்த  கெடுதல் செய்யும்ராகு எனும்   அல்ட்ராவயலட் கதிர்களின் வீச்சு, அதன்  தாக்கம்  இருக்கும்  என்று  நமது  முன்னோர்கள்  அறிந்து  புரிந்து  அந்த  நேரத்தில்  வெளியே எங்கும் செல்லாமல்  சூரியன் கதிர்கள் மேலே  படாமல் ஒதுங்கி இருந்த  பட்டியல்  இணைத்திருக்கிறேன்.  அவை  ராகுகால நேரங்கள்.   சந்திரனையோ  சூரியனையோ விழுங்கும்  ராகு கேதுவை  நம்பாவிட்டாலும்  உங்கள்  உடம்பை  நம்பினால் அதைப் பாதுகாக்கும்  அக்கறை இருந்தால் இதை  மனதில் கொண்டு  உங்களை எட்டாவது கதிரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளலாம். ஒரு காரியத்தை  வலியுறுத்தி  சொன்னால்,  கொஞ்சம்  பயம்  காட்டினால்  தான்  நாம்  நம்புகிறோம்.  அதற்காகவே  இந்த  நேரம்  அசுபம்,  கெட்ட  நேரம்  என்றெல்லாம்  சொல்லி  நம்மை  கட்டிப்போட்ட து  நம் நல்வாழ்வுக்கு  வழிகாட்டிய  அந்த  மஹா  புத்திசாலி  முன்னோர்க்கு  நமது  நமஸ்காரங்கள்.   ராத்திரி மரத்தடியில் படுக்காதே பேய் பிடிக்கும் என்று பயமுறுத்தி,  இரவில் மரங்கள் கரியமில வாயுவை வெளியிடுவதை நாம் ஸ்வாசிக்காமல் நமது முன்னோர்கள் எவ்வளவு சாமர்த்தியமாக  பயமுறுத்தி நல்லது செய்த்திருக்கிறார்கள். இது போல் நிறைய சொல்லி இருக்கிறார்கள். 
ராகுகாலம் எப்போது வரும் என்று ஞாபகம் வைத்துக்கொள்ள  ஆங்கிலத்தில்   ஒரு வாக்கியம்:  மனப்பாடம் செயது கொள்ளுங்கள்: "Mother Saw Father Wearing The Turban Suddenly"
Mother = Monday (7.30-9.00)
Saw = Saturday (9.00-10.30)
Father = Friday (10.30-12.00)
Wearing = Wednesday (12.00-13.30)
The = Thursday (13.30-15.00)
Turban = Tuesday (15.00-16.30)
Suddenly = Sunday (16.30-18.00)

தமிழில் "திருநாள் சந்தடியில் வெய்யிலில் புரண்டு விளையாட செல்வது ஞாயமா? "

திருநாள் - திங்கட்கிழமை - Monday - 0730 hrs to 0900 hrs
சந்தடியில் - சனிக்கிழமை - Saturday - 0900 hrs to 1030 hrs
வெய்யிலில் - வெள்ளிக்கிழமை - Friday - 1030 hrs to 1200 hrs
புரண்டு - புதன்கிழமை - Wednesday - 1200 hrs to 1330 hrs
விளையாட - வியாழக்கிழமை - Thursday - 1330 hrs to 1500 hrs
செல்வது - செவ்வாய்க்கிழமை - Tuesday - 1500 hrs to 1630 hrs
ஞாயமா - ஞாயிற்றுக்கிழமை - Sunday - 1630 hrs to 1800 hrs

இப்போது கொரோனா தீவிரத்தால்  முழுநேரமும் வீட்டிலே சூரியன் கண்ணில் படாமல்  இருக்கிறோம். சாதாரணமாக முன்பெல்லாம்   இதை  ரெஸ்ட்  நேரமாக  கருதி  வீட்டில்  ஆபிசில்  தான்  நிறைய  வேறே வேலை  இருக்குமே  அதை செய்யலாமே. வெளியே  எதற்கு சுற்ற வேண்டும். அத்யாவசியமாக  வெளியே  சென்றாக வேண்டும்  என்றால் ராகு கால   துர்காஷ்டகம் அல்லது  துர்கா  சப்த ஸ்லோகி  சொல்லி விட்டு செல்லலாமே.  அதனால்  தான்  ராகுகாலத்தில்  சர்வ  சக்தி வாய்ந்த  துர்கைக்கு  ராகு கால  பூஜை  செய்கிறோம்.

மொத்தத்தில்  அல்ட்ராவயலட் கதிர்களின்  வீச்சில்  அகப்பட்டுக் கொள்ளவேண்டாம்  என்பதே  கருத்து.
இரவில்  ராகுகாலம்  கிடையாதோ?  யார்  இல்லை  என்று சொன்னது.   அந்த நேரம்  வெளியே செல்லாமல்  தூங்குகிறோமே அதனால் அதைப்பற்றி கவலை.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...