Friday, August 14, 2020

CAN WE SEE GOD

 

             
   கடவுளைக்  காட்டு   J K  SIVAN 


டில்லி ராஜா அக்பரிடம்  டிவி  கம்பியூட்டர் , பத்திரிக்கை மொபைல் போன் எதுவும்  இல்லாத நிலையில்  அவருக்கு  ஒரே  பொழுது போக்கு  பீர்பால் ஒருத்தன்  தான்.   எப்போதும் அக்பருடனேயே இருப்பான் பீர்பால் . அக்பருக்கு ஒரு சந்தேகம் . 

''பீர்பால்    நீ  அடிக்கடி  சொல்கிறாயே   கடவுள்   எங்குமிருக்கிறார்  என்று. காட்டுகிறாயா எனக்கு?'

''கடவுள் எங்கும் உள்ளார். சந்தேகமே வேண்டாம்''
ஹிரண்யகசிபு  தூணைக்கட்டி  இங்கே நாராயணன் இருக்கிறானா என்றானே அது போல் அக்பர் தனது  விரலில் ஒரு மோதிரத்தை காட்டி  ''இதிலேயும் இருக்கிறாரா கடவுள்?'' என்று கேட்டார்.

'' ஓ  இருக்கிறாரே''
''áப்படி என்றால் எனக்கு காட்டுடா கடவுளை''
''கொஞ்சம்  கால அவகாசம் வேணும் மஹாராஜா''
''ஆறுமாசம் டைம் எடுத்துக்கோ''
இதென்னடா  புது பிரச்னை. இந்த விடாக்கொண்டனுக்கு நல்ல  விடை சொல்லவேண்டுமே  என்று பீர்பால் யோசித்து  நாட்கள்  ஓடியது.   

ஒருநாள்  பீர்பால் வீட்டு வாசலில் ஒரு  இளம் துறவி  பிக்ஷை கேட்டு நின்றான்.   கவலையோடு நின்ற பீர்பாலை பார்த்து  
''ஐயா எப்போவும் சிரிச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கிறவரு ,  என்னவோ  கவலையா இருக்கீங்களே? 

 "ஆமப்பா,  என் மனசு திடமா  நம்பறதை வார்த்தையிலே சொல்ல முடியாம தேடறேன்''
யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆதங்கத்தில் அக்பருடன் நேர்ந்த சம்பாஷணையைச்  சொல்கிறான் பீர்பால்.
''ஐயா  இதுவா உங்களை  தொல்லை பண்ணுது.  இதுக்கு  விடை நொடியிலே  என்னாலேயே சொல்லமுடியுமே. ஆனா நான் எப்படி ராஜாவை பார்க்கிறது?''

''கவலைப்படாதே,  நான் உன்னை கூட்டிக்கிட்டு போறேன்''

அக்பரிடம் இருவரும் சென்றதும்   பீர்பால்  ''மஹாராஜா  நீங்க கேட்ட சந்தேகத்துக்கு இந்த பையன் பதில் சொல்வான்''
அக்பர்  அந்த பிச்சைக்கார துறவிப்பையனை ஏற இறங்க பார்த்தார்.  

''டேய் பையா,  இந்த மோதிரத்தில் கடவுளை காட்டு பார்க்கலாம்''

''காட்டறேன் மஹாராஜா. அதுக்கு முன்னாலே ஒரு டம்பளர் தயிர் வேணும். அது தான் நான் சாப்பிடுவேன் ''
ஒரு ஆள்  தயிர் கொண்டுவந்து கொடுத்தான்.  பையன் அதை நன்றாக கலக்கினான்.

''இந்த தயிர் வேண்டாம். இதில் வெண்ணையே இல்லையே.  நான் சாப்பிடும் தயிரில்  வெண்ணை இருக்கும்.''

''டேய்  நான் சாப்பிடும் தயிர்  ரொம்ப  ஒஸ்தியானது. மிக சுத்தமான என் தேசத்திலேயே உயர்ந்த  ரக  கெட்டியான தயிர்  இதில் வெண்ணெய் இல்லை என்கிறாயே?''

''மஹாராஜா  என்ன இது,  நீங்கள்  ராஜாக்கள் சாப்பிடுவது  வெண்ணெய்  நிறைந்தது என்கிறீர்களே. எங்கே  உங்கள் தயிரில் இருந்தால் அந்த வெண்ணையை எனக்கு காட்டுங்களேன். ''

அடே முட்டாளே, என்ன தைர்யம் இருந்தால் என்  முன்னே வந்து  இப்படி ஒரு  அறிவில்லாத கேள்வி கேட்பாய். தயிரில் வெண்ணையை பார்க்கமுடியுமா. நன்றாக கடைந்தால் தான் தயிரிலிருந்து  வெண்ணை வரும் என்பது கூட  தெரியாதவன் எனக்கு கடவுளை காட்ட வந்தாயா?''

''மஹாராஜா நான் முட்டாள் இல்லை. உங்கள் கேள்விக்கு விடையைத்தான் சொன்னேன்.''

தயிரில் எப்படி வெண்ணையோ, அப்படி கடவுள் எதிலும்  எங்கும் இருக்கிறவன். அவனைப் பார்க்க முடியாது. உணர முடியும். கண்ணை மூடி  நினைத்தால்  வேண்டினால் உள்ளே தெரிவான். ஞானம் கொஞ்சம் வேண்டும். தயிரை கடைந்து வெண்ணெய் தெரிகிறது போல், நமது பஞ்சகோசத்தையும் கடைந்தால் அதில் சிக்குவான்.
கிருஷ்ணன்  நான் வெண்ணையைப் போல என்று காட்டுவதற்கு தான் வெண்ணெய் தின்று காட்டினான்.

அக்பர்  கெட்டிக்காரர். விவேகி. பையன் சொன்னதை புரிந்துகொண்டார்.

''சரிடா பையா, கடவுள் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்  சொல்?''

''நமது  புலன்களுக்கு சக்தி,  மனதுக்கு பார்வை,  புத்திக்கு  எதை விளக்கவேண்டும் என்ற துணிவு, அங்கங்களுக்கு பலம்,  நம்மை  வாழவைப்பதும், மறைய வைப்பதும்  எல்லாமே  அவர் சங்கல்பம். 'இது புரியாமல் மனிதன் ஏதேதோ கற்பனை, கனவுகளில்  எல்லாம்  தான் , தனது, தன்னால், என்ற நினைப்பில் வாழ்கிறான்.  கடவுள் எதிரில் மனிதன் ஒன்றுமே இல்லை. ஆட்டுவிக்கப்படும் வெறும் பொம்மை.

அக்பருக்கு  இப்படி ஒரு  பிச்சைக்கார பையனின்ஞானம்  அதிசயிக்க வைத்தது.  புது அனுபவம் அவருக்கு. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...