Saturday, August 1, 2020

OUR DUTY




நமது கடமை  J K SIVAN
நமது பாரத  தேசம்  உலகில் எங்கும் இல்லாத  புண்ய பூமி.    என்ன இல்லை இந்த வளநாட்டில்,, எதற்கு ஏந்தவேண்டும்  கையை வெளி நாட்டில் --   பாடினால் மட்டும் போதாது.
வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை  இதற்கி டையே  எத்தனை புண்ய நதிகள். அவற்றின் தலைவி கங்கை ஓடும் கரையில் உள்ளது காசி. ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்நாளில் ஒரு தரமாவது சென்று முழுகி எழுந்து காசி விஸ்வநாதனை நமஸ்கரிக்க வேண்டும்... காசியை விட உசந்த க்ஷேத்ரம் இல்லை.    காசி தான் ஷேத்ர ராஜா.  கங்கையின் துல்லியத்தை கெடுப்பது  துரோகம்.  இப்போது அதை சுத்தம் செய்ய வென்றே ஒரு இலாகா வேலை செய்கி றது.  வடக்கே காசி, தெற்கே ராமேஸ் வரம்  இரண்டிற்கும்   நடையாக நடந்த வர்கள், நடப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

''பாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்காவலரும் ஏடவிழ்க்கும் காசியே – தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம் - என்கிறார்  குமர குருபரர்   காசிக்கலம்பகத்தில்.  


 இதில் ஏடவிழ்க்கும்   என்பது   இதழ் விரியும் பூக்களையும்,  ஓலைச்சுவடிகளை அவிழ்க்கும்  புலவர்களையும்  குறிக்கிறது.    காசிக்கு  வடக் கிலிருந்து  ''வருணா''  நதி நதியும், தெற்கி லிருந்து “அசி” நதியும் கங்கையில் கலக்கிறது.  அதனால் தான் காசிக்கு  “வாரணாசி” என்றும் பேர்.   காசிக்கு செல்லாத  மஹான்கள்,  ரிஷிகள், ஞானிகள், யோகிகள் கிடையாது. 
காசி   காஞ்சி இருநகரங்களும் நமது ஆன்மீக வளர்ச்சி பேருதவி செய்தவை , செய்பவை.  
நாம்  காசி யாத்திரை என்றால் பஞ்சகச்சம், கையில் தடி, விசிறி, கீதை புத்தகம் (வைத்துக் கொள்ள மட்டும்) என்று கல்யாணத்தன்று   மைத்துனன்  குடைபிடிக்க சில நிமிஷங்கள் கல்யாண மண்டபத்தில் வீடியோவில் வருவதாக வைத்து கொண்டிருக்கிறோம். 
ஹிந்துக்களின்  ஆன்மீக வளர்ச்சியை ,பண் பாட்டை,  பக்தியை   சீர் குலைக்க  நம்மில் சிலரை  சில நாத்திக வாதிகள் பயன்படுத்து கிறார்கள்.  சாதாரணமானவர் சொன்னால் யாரும் லக்ஷியம் செய்ய மாட்டார்கள்.

  நமக்கு   துரோகம் செய்பவர்களை  பொறுக்கி எடுத்து   நம்மை ஆளவைத்து  அரசை,   பதவி யை  கொடுத்து,  அதர்ம வழிகளில்   சம்பாதிக்க வழிவிட்டு,  அவர்கள் நமது  பண்பாட்டுக்கு விரோதமாக  செயல்படும்  போது   குறை கூறுவது கங்கையில் குளித்தாலும் தீராத பாபம்.  தாய்க்கு செய்யும் த்ரோகத்தை விட  இது   மோசமானது.   

இத்தகையவர்கள்   நம் உடலில் நாமே வளர்த்துக்   கொள்ளும் கான்சர்  எனும் புற்று நோயைவிட கொடூரமானவர்கள் .

வெள்ளையன்  இந்த நாட்டை விட்டு போகுமுன்  நம்மை பிரிக்கும் சூழ்ச்சிகளை செய்துவிட்டே போனான். தமிழகத்தின் எல்லை தாண்டினால் தமிழனுக்கு மதிப்பில்லை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு,  மொழிவாரி மாநிலங்கள் எல்லாமே  நமது   உள்,  வெளி  வளர்ச்சிக்கு எதிராக அமைந்துவிட்டன.   நமது பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும்  துண்டு பட்டு விட்டன.    பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன. ரெண்டு மூன்று தலைமுறைக்கு  நமது பெருமைக்குரிய  விஷயங்கள் ஒன்றுமே தெரியவில்லை.. 

நமது சகோதர சகோதரிகளை,  குழந்தைகளை, அடுத்த தலைமுறையை, நல்ல வழியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நடத்திச் செல்லும்  முக்கிய பொறுப்பு நமக்கு இப்போது வந்து விட்டது.  இதற்கு பெரிதும் உதவ வேண்டிய  ஊடகங்கள்,   பத்திரிகைகளை  ஏனோ   காண முடியவில்லை. 

நமக்கு தலையாய கடமை, தேசப்பற்றும்,  நாம் அனைவரும் முதலில் இந்தியர் என்ற எண்ணம் ம் தான்.    சமூகப் பொறுப்புணர்ச்சியுள்ள  ஊடகங்கள், பத்திரிகைகளை  மட்டுமே நாம் மனதில் உறுதியுடன் ஆதரிக்க வேண்டும்.   இதை பின்பற்றினால் மற்றவை  மாற்ற மடையும்.  நமக்கு நன்மை செய்யாததை  புறக்க ணிக்கவேண்டும்..மக்கள் ஆதரவு இல்லாமல்  எதுவும் வளறாதே . 

டிவி    யூட்யூப்  பேப்பர்  எல்லாம் அருவருப்பு நிறைந்த சங்கதிகளை தான் காட்டுகிறது, சொல்கிறது.  நாளுக்கு நாள்  நிலைமை மோசமாக ஆகி வருகிறதே.  நமது கலாசாரத் திற்கு எதிராக   செயல்படும் இவை நமக்கு தேவையா ?  பழைய காலத்தில் இவை இல்லையே. 

கங்கை பிணத்தை   வீசி  எறிவதற்கு அல்ல.   ஊடகங்கள் சொல்வது போல்  காசிக்கு செல்வது மரணம் அடைய அல்ல. அது சுடுகாடு அல்ல.   புண்ய நதிகளில் இறந்தவன் சாம்பலை தெளிப்பது அவன் செய்த பாபங்கள் விலகி அவன் நற்கதியை அடைய என்ற நம்பிக்கை யால் என்று புரியவேண்டும்.  அது நமது பண்பாடு.  காசி சிறந்த புண்ய க்ஷேத்ரம் என்பதால் அங்கே அதிகம் இது.   இறந்தவர் களுக்கு  பித்ரு   காரியங்கள்  செய்வதை யோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ பெருமையாக நினைக்காமல்  எதிர்மறை எண்ணத்தோடு துஷ்  ப்ரச்சாரம் செய்வது தவறு. அநீதி. அநியாயம்.

மேலே பறக்கும்  கழுகுக்கு  கீழே காசி விஸ்வநாதர்  ஆலயம் பிடிக்குமா,  அல்லது  எங்கோ அழுக்கிக் கிடக்கும்  நாய்  பூனை, எலி உடல் பிடிக்குமா? 
அது போல் நமது எதிர்மறை ஊடகங்கள், பத்திரிகைகள் செயல்பட விடக்கூடாது.  அதை நடத்தும் வசதி படைத்த  கலாசார விரோத மனத்தினர்  ஊடகங்களை  தவறான முறையில்   பயன் படுத்தி எளியமக்களிடமே  காசு வாங்கி அவர்கள் மனதில் அருவருப்பை  விதைக்கி றார்கள்.   பிரசித்தி பெற்ற  ஆலயங்களில் நடக்கும் நல்ல விஷயங்களை காட்ட லாமே .கங்கையில் நடக்கும்  கங்கா மாதா  பூஜை வழிபாடுகளை அடிக்கடி  காட்டலாம். காசி நகரத்தின்  சிறந்த கல்விச்சாலைகளை  பற்றி சொல்லலாம்.  பாரதத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதை  காட்சிகளாக காட்டலாம் எழுதலாம்.

நம் தமிழக  நாட்டுக்கோட்டை செட்டியார் கள்,  நகரத்தார்களால்  பக்தியோடு, தார்மீக மனத்தோடு  அருமையாக நிர்வாகம் செய்யும்  ஆலய  தரிசன  ஸ்தாபனங்களை  பற்றி  நிறைய சொல்லலாம்.   பிற மதத்தால் காசி அல்லலுற்ற துன்பங்களை காட்ட ஏன் வெட்கம். சரித்திரம் தானே அது.  காசி  விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள். பார்த்தாலே கண்ணில் ரத்தம் வருமே.  அதை காட்சிகளாக காட்ட வில்லை விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நிற்பதே  அங்கே  ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி. இதை சொல்லவில்லை. நந்தி  மசூதியை பார்த்து நிற்காதே . அங்கே கோவில் சந்நிதி ஏதோ இருந்திருக்கிறது.  எப்படி காணாமல் போய்  மசூதி நிற்கிறது ?   உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத் தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மை யைச் சொல்லலாமே.  இது மத  நல்லிணக்கம் தானே.  
கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்கள்  கிறுத்துவர்களாக  மாறி வருகிறார்கள் என்று சொருகி சேதி.  இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி  அவசியம். அவர்களை மதம் மாற்றிவிட்டால்??  ஆஹா என்ன அற்புதமான திட்டம். 

அன்பர்களே, ஒரு நல்ல விஷயம் அனைவ ரையும் சென்றடைய வேண்டும் நமக்கு முன்னோர்கள் வெறும் தாய்ப்பால், புட்டிப்பால் கொடுத்து வளர்க்கவில்லை, அதனுள் தெய்வீ கம், ஆன்மிகம், பக்தி இவற்றையும் சேர்த்து தான் வளர்த்தார்கள், நமது கடமையும் அவ்வாறே தொடரவேண்டும் அதற்கு உங்களாலான  ஒத்துழைப்பை கொடுத்து  குழந்தைகளுக்கு ஒவ்வொரு வீட்டிலும் நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, இந்த கொரோனா விடுமுறை சமயத்தை  நன்றாக பயன்படுத்தி  குழந்தைகளை, அடுத்த தலைமுறையை  நமது, நம்பிக்கை,   கலாச் சாரம் பண்பாடு ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக நன்றாக உணரும்படி கற்றுக் கொடுங்கள்,   முதலில் நீங்கள் சரியாக அறிந்துகொள்ளுங்கள். குழந்தைகளுக்கு தப்பாக கற்றுக்கொடுக்கக்கூடாது.  நல்ல தையே நினைப்போம் செய்வோம்.   நம்மாலான சேவையை நமது தாய் நாட்டிற்கு அதன் பெருமை முன்புபோல்  தழைத்தோங்க  உதவி புரிவது ஆகும்.  ஒரு  லட்சிய சேவையாக  இதை பலனெதிர் நோக்காது  புரிவோம்.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...