Saturday, August 15, 2020

RAJA DESINGU

 தேசிங்கு ராஜா J K SIVAN

செஞ்சிக்கு ராஜா தேசிங்கு. எவ்வளவோ நாட்டுப்புற பாடல்களும், கதைகளும் அவனைப்பற்றி. ஒன்றும் எழுத்தில் காணோம். செஞ்சி சென்னைக்கு 160 கி.மீ. தூரம். விழுப்புரம் அருகே. திருச்சி மார்க்கம் தெருவில் போகும்போதே கோட்டை தெரியும். பல முறை கண்டு வியந்த கோட்டை. ஒளரங்கசீப் காலத்தில் மராத்தியர்கள் சிவாஜி தலைமையில் முகலாய சாம்ராஜ்ஜியத்துக்கு செஞ்சியை பிடித்தார்கள். சிவாஜி இறந்தவுடன் அவர் மகன் சாம்பாஜி கொல்லப்பட்டான். 2வது மகன் ராஜாராம் தொடர்ந்து போரிட்டு வெல்ல முடியாமல் செஞ்சிக்கு ஓடிவந்தான். மரத்தியர்களை வென்று பீஜப்பூர் சுல்தான் வசம் செஞ்சி வந்தது. சுல்தான் செஞ்சியை முற்றுகை இட்டான். மஹமூத் கான் படைத்தலைவன். அதில் குதிரைப்படை தலைவர் ராஜபுத்திர வீரர் சொரூப்சிங் செஞ்சிக் கோட்டையை வென்று அதன் ராஜாவானார். ஒளரங்கசீப் இறந்து அவன் மகன் ஷாஆலம் தில்லி சுல்தான் ஆன போது சொரூப் சிங் மகன் 18 வயது தேஜ் சிங் வீர இளைஞன். ஷாஆலம் வசம் ஒரு புதிய முரட்டு குதிரை பெயர் பாராஜாரி. அதை அடக்கும் போட்டியில் 18 வயது தேஜ் சிங் வென்று அந்த குதிரையே அவனுக்கு பரிசு. இதோடு இன்னொரு ராஜபுத்திர தளபதி தனது மகள் ராணி பாயை தேஜ் சிங்குக்கு கல்யாணம் செய்து வைத்தார். சொரூப் சிங் மகன் தேஜ் சிங்கை செஞ்சி ராஜாவாக்கினார். செஞ்சி அருகில் 3 கிலோமீட்டர் தூரம் வரை சிங்கவரம் கிராமம். அங்கே உள்ள ரங்கநாதஸ்வாமி ஆலயம் புராதனமானது. ஒரே கல்லில் செதுக்கிய 24 அடி நீள ரங்கநாதன் தான் தேஜ் சிங் வழிபடும் தெய்வம். இனி தேஜ்சிங்கை தேசிங்கு என்போம். தேசிங்கு ராஜா செஞ்சிக்கோட்டை அரண்மனையிலிருந்தே ரங்கநாதன் கோயிலுக்கு சுரங்கப்பாதை உண்டு. அடிக்கடி அங்கே போகவேண்டும் தேசிங்குராஜாவுக்கு. இஷ்ட தெய்வமாச்சே. சிறிது காலத்தில் செஞ்சி ஆர்காட்டு நவாப் வசம் வந்தபோது கப்பம் கட்ட வேண்டும் என்று தேசிங்கு ராஜாவை தொந்தரவு செய்தான். முடியாது என்று தேசிங்கு போர் தொடுத்தான். ரங்கநாதனைக் கேட்காமல் எதுவும் செய்யமாட்டான் தேசிங்கு. ''ரங்கா, நான் நவாபுடன் போர் புரியட்டுமா?'' ''இன்று வேண்டாம், நாளைக்கு போ'' ''என்ன இப்படி சொல்கிறாய். எதிரி படைகள் கோட்டைவாசல் வரை வந்து விட்டதே?'' பதில் சொல்லாமல் ரங்கன் தலையை திருப்பிக்கொண்டான். அதனால் தான் ஆலயத்தில் ரங்கநாதன் முகம் திரும்பி இருக்கிறது.. ரங்கன் வார்த்தையை மீறி தேசிங்கு போருக்கு சென்றான். ஆற்காட் நவாபின் ஆள் சுபாங்கிதுரை என்பவன் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டதில் தேசிங்கு இறந்தான். அவன் மனைவி ராணிபாய் தீ மூட்டி அதில் உயிரை விட்டாள், நீலாம்பூண்டி கிராமத்தில் தேசிங்கு ராஜனின் சமாதியும் படைத்தளபதி முகம்மதுகானின் சமாதியும் இருக்கின்றன கூடவே அவனது உயிருக்குக்குயிராய் நேசித்த குதிரை பாராஜாரி என்கிற நீலவேணி குதிரையின் சமாதி.. நவாபின் பிரதிநிதி சதகுல்லாகான் தேசிங்கு ராஜா அவன் மனைவி ராணிபாய் நினைவாக ஒரு சமாதி கட்டினான். ராணிபாய் பெயரால் ராணிப்பேட்டை இன்றும் இருக்கிறது. செஞ்சியில் இயர்கையாக இருக்கும் மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகு இன்றும் கம்பீரம். சோழர் காலத்தில் செஞ்சி தான் சிங்கபுரி, செஞ்சிக் கோட்டை அமைப்பு 3 மலைகளையும் சுற்றி இணைத்த சுவரோடு இருக்கிறது. 7 சதுர கி.மீ. பரப்பு. 800 அடி உயரத்தில் கோட்டை. கோட்டையை சுற்றி 80 அடி அகலமுள்ள அகழி. எட்டு மாடி உள்ள கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில் எல்லாம் உள்ளே இருக்கிறது. இக் கோட்டைக்கு பாது காப்பு தான் மலைகள், கிருஷ்ணகிரி, சக்கிலிதுர்க், ராஜகிரி வெள்ளையன் கைவசம் வந்தபின் மாறுதல் ஒன்றும் இல்லை. தேசிங்குவுக்கு உயிர் தோழன் மொஹபத் கான். ரங்கன் பக்தன். அவனுக்காக போராடி உயிர் விட்டவன். தேசிங்கு ராஜா ஒவ்வொரு வீட்டிலும் நாட்டுப்பாடலாக பாடப்பட்டான். சிறிய வயதில் நிறைய கேட்டிருக்கிறேன். நாட்டுப்பாடல்களில் தேஜ் சிங்கு தேசிங்கு ஆன மாதிரி மொஹம்மத் கான் மௌத்து காரன் ஆகிவிட்டான். ஒரு சில வரிகள்: ''இந்த விசை நவாப்பு கையினாலே
நான் செத்துப் போனால் துலுக்கர் வந்துனது கோவிலெல் லாம் சூரையிடுவார்கள்'' இன்றைக்குஞ் சாவு நாளைக்குஞ் சாவு இருக்குது தலைக்கு மேலே ஒன்றுக்கும் நீயஞ்ச வேண்டாம் உறுதி கொள்ளுமையா
செஞ்சிக் கோட்டைச் சிப்பாயையா இராஜா தேசிங்கு கத்தி பிடித்த சிப்பாய் மகனும் இராஜா தேசிங்கு அவன், கண்ணையுருட்டிப் பார்த்தானானால் சிப்பாய் தேசிங்கு கால் பலங்களும் கைப்பலங்களும் சிதறியோடுமே டாறு டாறாய் தீர்த்துப் போடுவான் இராஜாதேசிங்கு
சண்டை கெலித்து வந்தேனானால் தாலி கட்டுகிறேன் போரைக் கெலித்து வந்தேனானால் புகழ்ந்து கட்டுகிறேன் மாண்டு மடிந்து போவேனானால் மனது கலங்காதே அல்லாரே அல்லாரே என்று கீழே விழுந்தானாம் அரிகோவிந்தா என்று சொல்லிக் கீழே விழுந்தானாம் என்னுடன் வளர்ந்த பிராண சினேகிதன் மோவுத்துக்காரன் போனான் எந்தன் பலமும் பாதி போச்சுது மோவுத்துக்காரனோடே



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...