Monday, August 17, 2020

GITANJALI

 கீதாஞ்சலி     J K   SIVAN  

தாகூர் 


                                            33    வழிபாட்டுக்கு உதவி

 ஏன் ரவீந்திரநாத் தாகூர்  கீதாஞ்சலிக்கு அந்த பெயர் கொடுத்தார்?  கீதையின் தத்துவங்களை அதில் தேடலாமா? கண்ணனையே  அதில்  காணோமே? பொதுவாக மனதின் அலைச்சலை, சஞ்சலத்தை மட்டுமே அற்புதமாக  வெளிப்படுத்துகிறார். இறைவனைத் தேடுகிறாரா?  நிச்சயமாக   ஆம். அதை நாம்  நாம்  ஏதோ ஒன்று நம்மிடம் இருப்பதை   நாம்  அறியாமல் இருப்பதை  ஞாபகப்படுத்துகிறாரா?  ஆம். தாம் தேடுவது போல் நம்மையிலும் தேட வைக்கும்  அவர் எழுத்து ரொம்பவே நம்மை  சிந்திக்க வைக்கிறது. எந்த மொழியினருக்கும், நாட்டவருக்கும், ஆண் பெண் இரு பாலாருக்கும், என்றும்  பொதுவான சிந்தனைத் துளிகள். கீதாஞ்சலியில் மதத்துக்கு இடமே இல்லை.  

பள்ளிப்பருவத்திலேயே  கீதாஞ்சலியை எனக்கு பிடித்தது.  நான் மொழிபெயர்ப்பாளனில்லை. ரசிகன். எனக்கு பிடித்தவகையில் ரசிப்பவன். சிலர்  சாம்பாரில் சட்னியை கலந்து இட்லி தோய்த்து சாப்பிடுபவர்கள். சிலர் மிளகாய்ப்பொடி காரத்தில்  நல்லெண்ணெய் குளத்தில் கலந்து வெள்ளை இன்டலியை முழுதும் சிகப்பாக மாற்றி   கண்ணில்  காரம்   நீராக வழிய சுடச்சுட விழுங்கி காப்பி தேடுவார்கள். என் ருசி கீதாஞ்சலியில் கண்ணனை இணைத்துக் கொள்வது. கீதைக்கு அஞ்சலியென்றால் அதைச்  சொன்னவன் இல்லாமல் எப்படி ரசிப்பேன்?  
 வீடு நன்றாக இருக்கிறது என்றால் வீட்டுக்காரா , நீ அற்புதமாக கட்டியிருக்கிறாய் என்று சொல்லவேண்டாமா? கிருஷ்ணனை உள்ளே கொண்டுவந்து தான் கீதாஞ்சலியை நான்  ரசிப்பவன்.  ஆகவே தான் என் கீதாஞ்சலியில் கிருஷ்ணன் நாயகன்.
இனி  கீதாஞ்சலி 33வது  பாடலை ருசிப்போம்: 
 

33.  When it was day they came into my house and said
We shall only take the smallest room here.'
They said, `We shall help you in the worship of your God and
 humbly accept only our own share in his grace'; and then
 they took their seat in a corner and they sat quiet and meek.
But in the darkness of night I find they break into my sacred shrine,
strong and turbulent, and snatch with unholy greed
the offerings from God's altar.

 நங்கநல்லூர்  போன்ற  புறநகர் பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடிப்பது திடீரென்று அதிகமாகி விட்டது. நன்றாக  கவனிக்கிறார்கள் எந்த வீட்டில் யார் இருக்கிறார்கள். முக்கால்வாசி வீடுகளில் முதியோர் மட்டுமே தனியாக இருக்கும் வீடுகள் லட்டு மாதிரி.

கண்ணெதிரே கதவைத்  திறந்து உள்ளே புகுந்து  சில சாமான்களை சிலர் தூக்கி செல்கிறார்கள் என்று சேதி வரும்போது வயிற்றை புரட்டுகிறது. ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது? என்ன பாதுகாப்பு.  நமக்கு நாமே சிறையிட்டுக்கொண்டு வீட்டில் இருக்க வேண்டியிருக்கிறதே என்று  தோன்றுகிறது.  ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கரோனாவின் பொது திருடு, கொலை கொள்ளை கம்மி என்று சொல்லவேண்டும்.  கரோனா ராக்ஷஸன் மீதி கொள்ளைக்காரர்களை  அனுமதிக்காதவன்.

அது ஒரு பகல் பொழுது. திபுதிபு என்று யாரோ சில என் சிறு வீட்டில். அதை ஒட்டிய என் சிறு  ஆலயத்தில் நுழைந்தார்கள். சுற்றி முற்றி பார்த்துவிட்டு

''ஐயா,  சிறிது நேரம் இங்கே  தங்கிக் கொள்கிறோம்.''  என் பதிலை எதிர்பார்க்காமல் என் வீட்டை சுற்று முற்றும் பார்க்கிறார்கள்.
''அதோ இருக்கிறதே அந்த சிறிய அறையை மட்டும் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம்''
யார்  இவர்கள், எதற்கு இங்கே உரிமை கொண்டாடுகிறார்கள்?  
ஒன்றும் பேசாமல் அவர்களையே  பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

''நாங்கள் உங்களுக்கு நீங்கள் எந்த தெய்வத்தை விரும்புகிறீர்களோ அதனைத் தொழ, வழிபட உதவுகிறோம். ஏதோ அவன் அருளால், இதை எங்கள் பங்காக செய்கிறோம். அவன் அருளால் இதை ஏற்றுக்  கொள்ளுங்கள்'' 

என்ன  சொல்கிறார்கள்  புரியவில்லையே?''

இப்படிச் சொல்லிவிட்டு அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?. சாவகாசமாக  ஒரு மூலையில் சுவற்றில் சாய்ந்துகொண்டு சப்தமில்லாமல்   ராயசமாக அமர்ந்து கொண்டார்கள்.

''சரி''   என்று விட்டுவிட்டேன். ஆனால் என்ன நடந்தது தெரியுமா அப்புறம்?  அது தான் வேடிக்கை. ராத்திரி இருட்டு.  ஓஹோ  இருட்டுவதற்காக  தான்  காத்திருந்தார்களோ.   என் ஆலயத்தை நோக்கி நடந்து  அதன் கதவை  பலத்தோடு திறக்க முயன்றனர்.  புயல் வேகத்தில் உள்ளே நுழைந்து, அந்த பக்தியற்ற நீசர்கள், என் பகவானுக்கு பக்தர்கள் அளித்த எல்லா காணிக்கைகளையும் அபகரித்துச் சென்றுவிட்டார்கள்.

தாகூர்  இதை எழுதும்போது அவருக்கு  அந்நியர்கள் வெளியிலிருந்து வந்து ஆலயத்தைச்  சுரண்ட த்   தேவையில்லை.   அதிகாரபூர்வமாக   நான்  கோவிலைக் கவனித்துக் கொள்கிறேன் பேர்வழி என்று உள்ளிருந்தே வேண்டியதை இருளுக்கு காத்திருக்காமல் பட்டப்பகலிலேயே கபளீகரம் செய்யலாம் பகவானையே பொன்னிலிருந்து  பித்தளைக்கு மாற்றி விடலாம் என்பதெல்லாம் தெரியாது.   அப்போது அக்கிரமம் வளராத காலம் அல்லவா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...