Saturday, August 29, 2020

G VAIDYANATHAN

நான் பெற்ற  செல்வம்  5.   J K SIVAN     

                                                  கோயம்பத்தூர் மீசை மாமா 

 என்னுடைய  ஒரு அருமையான  நண்பர்  கோயம்பத்தூர் மீசைக்காரர்.  மிலிட்டரி ஆசாமி. வீட்டில் நுழைந்ததுமே  வைத்தியநாதனை விட  அவரது  துப்பாக்கி முதலில்  வரவேற்கும். கோயம்பத்தோரில் அவரது இல்லம்  த்யானப்ரஸ்தத்தில் இருக்கிறது.  ஒரு குட்டி ஸ்வர்கமாக காட்சி தந்தது. நன்றாக குடும்பம் போல் பழகும் மக்கள். பெருமபாலும்  முதியோர்கள்.  நல்ல சமையல், ருசி அறிந்து சமைத்துப்போடும் கை தேர்ந்த சமையல் காரர்கள். அமைதியான  மரங்கள் செடிகள் சூழ்ந்த விசாலமான இடம்.  ஜிலு ஜிலு  காற்றில்  டீசல் புகை, வாகன சத்தமே  இல்லாத  சூழ்நிலையில்  நடக்க ரொம்ப சௌகர்யம். அங்கே கேட்க முடிந்தது  பட்சிகளின் நாதம் ஒன்றே.  

வைத்யநாதன் எனக்கு ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி ஆரம்பித்ததிலிருந்து  பரிச்சயமானவர். எவ்வளவோ நன்கொடைகள் கொடுத்து  கிருஷ்ணனை வளர்த்திருக்கிறார். ஏராளமாக புத்தகங்களை எங்கள் சார்பாக அநேகருக்கு விநியோகம் செய்திருக்கிறார்.  சென்னை  வந்தால் தவறாமல் நங்கநல்லூர் வந்து சிரித்துப் பேசி மகிழ்ச்சி தருபவர்.

ஒருமுறை நான்  கோயம்பத்தூர் சென்றபோது அவர் மும்பையில் அவர் பெண் வீட்டுக்கு சென்றுவிட்டார். இருந்தபோதிலும் எனக்கு ஒரு இரவு  தங்க வசதி செய்து கொடுத்தார். இரவு உணவு அற்புதமாக இருந்தது.   அவர் நண்பருக்கு நன்றி சொல்லிவிட்டு புறப்பட்டோம். 

இன்று  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா  நிறுவனம் இந்த அளவுக்கு  உயர்ந்து  ஆன்மீக சேவை செய்ய அடிக்கல்லாக நின்று தோள்  கொடுத்து உயர்த்தியவர்களில் முக்கியமானவர்   ஸ்ரீ  G. வைத்தி யநாதன்.  அவருடைய  உற்சாகமான  பங்கேற்பு  எங்கள் விழாக்களில் அநேக முறை நிகழ்ந்திருக்கிறது.  ஐந்தாம் வேதம் புத்தக  வெளியீட்டின்போது அவரை சில வார்த்தைகள் பேசச் சொல்லி கௌரவித்தது எங்களுக்கு கிடைத்த ஒரு அரிய  சந்தர்ப்பம்.  

ஒரு வார்த்தை.   

ஸ்ரீ  ஜி.வி. குணத்தைப் போலவே  அவரது குரலும் இனிமையானது.  அவர் பாடிக்காட்டிய  சில  பஜனை ஸ்தோத்ர பாடல்கள் இன்னும் மனதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

 தினமும்  சூரியன் உதிப்பது தாமதமானாலும்  வாட்ஸாப்பில்  ஜீவியின்  செயதிகள் வருவது நிற்காது. ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் எல்லாவற்றிலும் எங்கிருந்தெல்லாமோ பிடித்து மிகவும் உபயோகமான, மீண்டும் சொல்கிறேன், மிகவும் உபயோகமான விஷயங்களை பரிமாறுகிறவர். 

 இவரது  நட்பை பெற  அருளியவன் கிருஷ்ணன், அதை மேலும் வலுவாக தொடர வைக்கவும்  அந்த கிருஷ்ணன் அருளவேண்டும் என்று மனதார கிருஷ்ணனையே வேண்டுகிறேன்.  

அவரைக்காண   இந்த லிங்க் கிளிக் செய்யவும்.  






 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...