Monday, August 24, 2020

CHILDREN

 

 
         இன்றைய குழந்தைகள் நாளைய பெற்றோர்.  J K   SIVAN 

அப்பா அம்மா  சிடுமூஞ்சிகளா  இருந்தால் கேட்கவே வேண்டாம் குழந்தைகள் அவர்களின் நேர் வாரிசு.  சந்தோஷமாக சிரித்துக் கொண்டே இருப்பவன் காரியம் சாதிப்பவன், வெற்றிசாலி. எல்லோராலும் விரும்பப் படுபவன்.

எல்லோருடனும் கலகல வென சிரித்து பேசுபவனுக்கு நட்பு வட்டாரம் பெரியது.   குழந்தைகளை  அவர்கள்  ஒரு காரியம்  செய்தபோது குற்றம் குறை கண்டுபிடிக்காமல்  '' அடேயப்பா பலே டா  பையா,  ரொம்ப  கரெக்டா  நன்றாக செயதிருக்கே. புத்திசாலி.  இன்னும்  இம்ப்ரூவ் பண்ணுடா''  என்று சொல்லி  உற்சாகத்தை  ஊக்கத்தை கொடுத்தால் பையன் அசகாய சூரனாக வளர்வான்''. ஊக்கமும்  உற்சாகமும் மனதுக்கு  ஊட்ட சத்து. சந்தோஷத்தை தரும். அதனால் உடல் உள்ள வளர்ச்சி நன்றாக இருக்கும்.  தன்னம்பிக்கை  வெற்றிப்பாதையில் அவனை கூட்டிச்செல்லும்.  உடல் சந்தோஷத்தில் வியாதி நெருங்காது. ரகசியமாக சொல்கிறேன். நீண்ட ஆயுள் உண்டு.

குழந்தைகளைத்  தானாகவே யோசிக்க விடுங்கள். அவர்கள் உணர்ச்சி வசப்படட்டும் . தவறுகளை  அவர்களே  திருத்திக் கொள்வார்கள். விழுந்து தான்  எழுந்து நிற்கவேண்டும்.

பெற்றோர்கள்  குழந்தைகள்  எதிரே சண்டை இடுவது, திட்டுவது அடிப்பது, புகை பிடிப்பது,  பொய் சொல்லுவதை,  பிறரை ஏமாற்றியதை பெருமையாக சொல்வது,    பிறரைப் புறம் கூறுவது, வீட்டில் நண்பர்களோடு பார்ட்டி என்று  குடிப்பது காசு வைத்து சீட்டாடுவது  போன்ற  பழக்கங்களை விட்டுவிடவேண்டும்.  காந்தம் மாதிரி இதெல்லாம் அவர்கள் மண்டையில்  ஏறிவிடும்.  ஜாக்கிரதை.  கெட்டது  எப்போதுமே  காட்டுத்தீ போல் உடனே பற்றிக்கொள்ளும்.

குழந்தைகளுக்கு மனதில் பக்தியை வளர்க்க வேண்டும். இளமையில் கல் என்றால்  நல்ல விஷயங்களை சின்ன வயதிலேயே  கற்பது.    கருங் கல்லை, செங்கல்லைச்  சுமக்க சொல்லித் தருவதில்லை. 
குழந்தைகளை ஓடியாடி விளையாட அனுமதிக்கவேண்டும். நண்பர்களோடு சேர்ந்து பழக வைக்க வேண்டும்.  புத்தகம் படிக்கும் வழக்கம் வேண்டும்.  மிருகங்கள், பறவைகளை  அன்போடு நேசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். சின்ன சின்ன உதவிகள், தான தர்மங்கள் செய்ய  பழக்க வேண்டும்.   இயற்கையை ரசிக்க வெளியே கூட்டிச் செல்லவேண்டும்.
இது தவிர நான் சொல்லாத  எனக்குத் தெரியாத நல்ல பழக்கங்களை எல்லாம்  தாராளமாக கற்றுக்கொடுங்கள்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...