Sunday, September 1, 2019

PILLAIYAR



நல்லது நடக்க பிள்ளையார் சுழி
J K SIVAN
2.9.2018 அன்று விநாயக சதுர்த்தி/பிள்ளையார் சதுர்த்தி என்று நாடெங்கும் ஹிந்துக்கள் கொண்டாடுகிறார்கள். மிகவும் பிரபலமான ஹிந்து பண்டிகை. கணேசன் பிறந்தநாள். ஆவணி மாதம் சுக்ல சதுர்த்தி . வருஷாவருஷம் ஆகஸ்ட் செப்டம்பரில் வருவது. வடக்கே பத்து நாள் கொண்டாடுவார்கள். அனந்த சதுர்தசி வரையில் கோலாகலமான பண்டிகை. சிவபெருமான் பார்வதி மூத்த பிள்ளை கணேசன். யானைத்தலை மனித உடம்பு, அழகிய தொந்தி, நான்கு கரங்கள், கண்ணைக் கவரும் உருவம். ஒருகையில் சூலம். இன்னொன்றில் அங்குசம். ஒன்றில் தாமரை, இன்னொன்றில் ருத்ராக்ஷம் சில படங்களில் அதில் மோதகம் எனும் தேங்காய் பூரண கொழுக்கட்டை. வினைகளை தீர்ப்பவர்,எடுத்த காரியத்தை எதிர்பார்த்த நன்மையுடன் முடித்து வைப்பவர். அவரை நினைத்து ஒரு சுழி ''உ'' மாதிரி போட்டுவிட்டு ஆரம்பிக்கும் அத்தனையும் ஜெயமாக முடியும் என்ற நம்பிக்கை அளிப்பவர்.

தனது பக்தர்கள் தன்னை கார்கில் ராணுவ வீரனாக, மத்தள, நாதஸ்வர விடுவாங்க, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவனாக, கிரிக்கெட் வீரனாக எப்படி சித்தரித்தாலும் மகிழ்பவர், மகிழ்த்துபவர். வேறு எந்த ஹிந்து கடவுளுடனும் இப்படி நெருக்கம் கிடையாது.

புராணத்தில் '' பார்வதி குளிக்கும் போது மஞ்சள் கலவையில் ஒரு கூம்பு வடிவத்தில் படைத்து உயிரூட்டி உருவானவர் பிள்ளையார்.

''பிள்ளையாண்டானே, நான் குளித்து விட்டு வரும் வரை இங்கே நீ வாசலில் காவல் இரு. எவரையும் உள்ளே விடாதே என்று கட்டைளையிட்ட பார்வதியின் வாக்கை மீறாமல் காவல் காத்து நிற்க, அப்போது அங்கே பார்வதியை சந்திக்க வந்த சிவனை தடுக்க, பார்வதியால் பிள்ளையார் தோன்றியதை அறியாத சிவனது கோபத்தால் சிரத்தை இழந்து, பின்னர் பார்வதியின் மூலம் விஷயமறிந்த சிவன் தவறை உணர்ந்து முதலில் தோன்றிய எந்த உயிரின் தலையாவது கொண்டுவா என்று சிவகணங்களுக்கு கட்டளையிட, ஒரு யானை தலை இழந்து அதன் தலை பிள்ளையாரின் தலையாயிற்று'' என்று வரும்.
பிள்ளையார் சிவ கணங்களுக்கு அதிபதி, தலைவனாகி ''கணபதி'' ''கண ஈசன்'' (கணேசன்) ஆகிறார். குறைபாடுகளை விக்னங்களை, தீர்க்கும் விக்னேஸ்வரர் ஆகிறார். எல்லா வீட்டிலும், சிவ ஆலயங்களிலும் முதலில் காவல் தெய்வமாக காண்பவர் பிள்ளையார்.

சரித்திர பக்கங்கள், சாதவாஹன , ராஷ்டிரகூட, சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் இருந்தே விநாயக சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டதை சொல்கிறது. சத்ரபதி சிவாஜி மஹாராஜா மராத்தி தேசத்தில் விநாயக சதுர்த்திக்கு பிரதானம் கொடுத்தான் இன்றும் அங்கே தான் முதன்மையாக பிள்ளையார் போற்றப்படுகிறார். மராத்திய பேஷ்வாக்களுக்கு பிள்ளையார் குலதெய்வம். 1818 முதல் 1892வரை உன்னதமாக கொண்டாடப்பட்டது

1857ல் சிப்பாய் கலகத்தின் போது வெள்ளையன் ஆதிக்கத்தை சிப்பாய்கள் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் தோற்றனர். அதுவே முதல் சுதந்திர போராட்டம். நெருப்பு அணைந்தாலும் புகை பரவிக்கொண்டு தான் வந்தது. லோகமான்ய பாலகங்காதர திலகர் தலைமையில் விநாயக சதுர்த்தி விழா மூலம் போராட்டத்துக்கு ஆட்கள் ஒன்று சேர்ந்தனர். தேசிய விழாவாக மக்களை இணைக்க பிள்ளையார் உதவினார். பத்து நாள் விழாவாக பட்டி தொட்டியிலெல்லாம் பிள்ளையார் இருந்தார். இன்றும் இருக்கிறார். நம் அனைவரையும் ஒன்றிணைக்கிறார்.

கணபதி பப்பா மோரியா, புத்சா வர்ஷி லௌகர்யா '' (பிள்ளையாரே வாழ்க, அடுத்த வருஷம் புதிதாக வா '')

பிரணவஸ்வருபம் என்பது ஓம்காரவடிவம்.
யானைமுகததான். குறையாவும் அகற்றி நம்மை காப்பவன்.
மன நிறைவையும் , இகவாழ்கைக்கு தேவையான பொருளும்
அக நிறைவுக்கு வேண்டிய அருள்நிறைவையும் அளிப்பவன்.
நம்பிக்கையோடு தும்பிக்கையானை பணிந்து சரணடைந்தால்
வேண்டியவை யாவையும் வேண்டாமலேயே வாரி வழங்கும் வள்ளலை வாயார வாழ்த்துவோம்


நாவார பாடுவோம் துதிப்போம், பலனடைவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...