Tuesday, September 3, 2019

HISTORY


                                         கண்களில் குளம்   J K  SIVAN 

நமது நாட்டின்  கலைச்செல்வங்கள் திருடப்பட்டு கடத்தப்பட்டு  வெளிநாடுகளில்  ஏலம் விடப்பட்டு  எங்கெங்கோ காட்சிப்பொருள்களாக இருப்பதன் காரணம் ஏராளமாக  அவற்றிற்கு வெளிநாட்டு பணம் கிடைப்பதால் தான். ஸாந்நித்யத்தை  இழந்து வெறும் சிலையாக தெய்வங்கள் மாற்றப்பட்டு இப்போது சில நாடுகளிலிருந்து மீட்கப்பட்டு வருவதாக செயதி படிக்கிறோம். கொஞ்சம் நிம்மதி தான்.    

சமீபத்தில் சில வருஷங்கள் முன்பு படித்தது  ஞாபகம் இருக்கிறதா?   திருப்பதி ஆலய நிர்வாகி  நம்மவர்  ஒருவரே மைசூர் மஹாராஜா அளித்த பிளாட்டினம் நெக்லஸில் இருந்த  பெரிய வைரத்தை ஜெனீவாவில் சோதிபை  SOTHEBY  ஏலக்கம்பனி  நிறைய கொள்ளை விலைக்கு விற்க உதவினார் என்று அவர் மேல் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது என்று செய்தி ,
இதே போல் பூரி ஜெகந்நாதரின்  ''ரத்ன பந்தர்'' எனும் கஜானா சாவி  காணாமல் எங்கோ பறந்து சென்று விட்டது என்று படித்தேன்.  வேலியே  பயிரை மேயும் காலம். என்ன செய்வது.  நம்மவரிலேயே  முகலாயர்கள் வெள்ளையர்கள் இருக்கும்போது அவர்களை குறை சொல்வது சரியா?

வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன்பு  முகலாயர்கள் ஆண்ட காலத்திலேயே நமது ஆலய சிலைகளுக்கு ஆபத்து உண்டானது. ஆலயங்களுக்கு   எத்தனை எத்தனை  ராஜாக்கள், பிரபுக்கள்,  பக்தர்கள் வாரி வாரி  அளித்த எண்ணற்ற செல்வங்கள்  கணக்கே  இல்லாமல்  சூறையாடப்பட்டன. இதெல்லாம் சரித்திரம் அதிகம் சொல்வதில்லை என்பதால் வெளியே தெரிய வாய்ப்பு இல்லை.

ப்ரூஸ்  என்ற கிழக்கிந்திய கம்பனி வெள்ளையன் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயத்தின் சொத்து செல்வங்களை கண்டு பிரமித்து அவற்றின்  மீது கவனம் செலுத்தினான். வெள்ளையனின் கட்டுப்பாட்டில் திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம், அதன் வருமானம், சொத்து எல்லாம் கொஞ்சம் கணக்கில் கொண்டுவரப்பட்டது. 182்1ல் ப்ரூஸ்  கொண்டுவந்த   42  நித்ய  கைங்கர்ய  அதிகார  சட்டங்கள் அமுலுக்கு  வந்து ஆலயம் கிழக்கிந்த கம்பனி ஆளுமையில் சில வருஷங்கள் இருந்தது.   ப்ரூஸ்  CODE திட்டம் என்று அதற்கு பெயர்.அதற்கு முன்  ஆலயங்கள் சுல்தான்கள்ஆட்சியில் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து அநேகம் அழிந்தன. செல்வங்கள் பறி போயின.  

வெள்ளையர்கள் 1799ல்   நான்காவது ஆங்கிலோ மைசூர் யுத்தத்தில் திப்பு சுல்தானை கொன்றபோது தென்னிந்தியா  கிழக்கிந்திய கம்பனி வசம் வந்தது. இனி திருப்பதி திருமலை அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தபோது அதன் செல்வம் கண்ணை உறுத்தியது. கோவில் சொத்து, வருமானங்கள் யார் யாரோ அபகரித்துக்கொண்டிருந்தது தெரிந்து அவற்றை தம் கைவசம் கொண்டுவந்தான் ப்ரூஸ். 1842-1843ல் விட்ட்டோரியா மஹாராணி கிழக்கிந்திய கம்பனி ஹிந்து ஆலயங்கள்  விஷயத்தில் தலையிடவேண்டாம் நிர்வஜகிக்கவேண்டாம் என்று பிரகடப்படுத்தினாள் . சுருக்கமாக சொல்கிறேன்:

சரித்திரத்தில் சில உண்மைகள்: 
எத்தனையோ ஆண்டுகளாக  பல்லவர்கள், சோழர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர ராயர்கள் என்று பலர் ஊட்டி வளர்த்த  ஹிந்து ஆலயங்களில் திருப்பதி திருமலை  ஸ்ரீனிவாசனின் ஆலயமும் ஒன்று.

1665ல்   தொண்டைமண்டலம்  முஸ்லிம்களால்  கைப்பற்றப்பட்டு  ஆண்டார்கள்.  நாசம் விளைந்தது. வடக்கே  ஒளரங்கசீப் சக்ரவர்த்தி. 
 1710ல் தொண்டைமண்டலம் பகுதி  திருப்பதி திருமலை உட்பட,  தனி ராஜ்யமாக சதத்துல்லா கான் நவாப் வசம் இருந்தது. 1748ல்  ஆற்காட் நவாப் திருப்பதி திருமலை ஆலய வருமானம்  கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒப்படைத்தான். 
1782ல்   ஹைதர் அலி இந்த பகுதியை வென்று ஆண்டான். ஆனால்  திருப்பதி ஆலய நிர்வாகத்தில் குறுக்கிடவில்லை. 
1801ல்   கிழக்கிந்திய கம்பெனி  திருப்பதி  ஆலய நிர்வாகத்தை ஆற்காட் நவாபிடமிருந்து ஏற்றது  
1803ல்    சித்தூர் கலக்டர் ப்ரூஸ்.  முழுநீளமாக  திருப்பதி ஆலய நித்ய கைங்கர்யங்கள், வருமானம், பூஜைகள், நிலம், சொத்து ஆபரணங்கள், வருமானம் விவரங்களை கிழக்கிந்திய கம்பெனி வெள்ளைய அரசாங்கத்துக்கு அளித்தான். இதை ஸ்டாட்டன் விவரம் என்பார்கள்.  Statton’s Report on Tirupat
1821 வரை  திருப்பதி ஆலயம்  கிழக்கிந்திய  கம்பெனி வெள்ளையன் கையில்.
1821  ஜூலை 25  ப்ரூஸ்  சட்டம் அமுலுக்கு வந்தது.  20 வருஷங்கள் வரை. 
ப்ரூஸ் சட்டத்தில் சில சுவாரஸ்ய விவரங்கள்.
திருப்பதி ஆலயத்தில்  6 கால பூஜை  நைவேத்யம் நடக்கிறது. திருப்பதியை சுற்றி இருக்கும் 432 கிராமங்களின் வருமானம் இதற்கு செலவிடப்படுகிறது.   சுல்தான்கள்  ஆற்காட் நவாப்  காலத்தில்  6 கால பூஜை 3 காலமாக குறைக்கப்பட்டது. காலை  மதியம்  இரவு மட்டுமே பூஜை படையல்.      
1842-43ல் விட்ட்டோரியா  கோவில் நிர்வாகத்தில் ஆங்கிலேயர்கள் குறுக்கிடவேண்டாம் என்று ஆணை பிறப்பித்தாள் . ஆலய நிர்வாகம் திருப்பதி ஹதீராம்ஜி மடத்தின் வசம் வந்தது. 

உலக பணக்கார ஆலயங்களின் வருமானங்கள், சொத்து  வெள்ளைக்கார எலிகளுக்கு வாசனை ஊட்டி  திவாலா நிலையிலிருந்த அந்த வெள்ளை அரசாங்கம் அவற்றை உபயோகித்து எண்ணற்ற  நவீன தொழில்களில் முதலீடு செயது வளர்ந்தது. ஆலய  வருமானம் அரசாங்க செலவுக்கு  பயன்படுவது பலநூற்றாண்டுகளுக்கு முன்பே  உதயமானது. இன்று நேற்றல்ல.  அது ஒரு  தொடர்கதை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...