Friday, September 27, 2019

J K SIVAN 81

ஆயிரம் பிறை பார்த்தேனா!! -- J K SIVAN



எனக்கு பின்னால் எண்பது வருஷங்களா. நானும் சுந்ததிர இந்தியாவும் ஒன்று தான். எழுபது எண்பது வருஷங்களுக்கு அப்பாலும் அப்படியே தான் இருக்கிறோம். சொல்லிக் கொள்ளும் அளவு சிறப்பு ரொம்ப காணோம்.
மேலே நோக்கி வானத்தில் நிச்சயம் நான் ஆயிரம் பிறைகளைத் தேடியதில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் எல்லோரும் நான் பார்த்தாகி விட்டது என்று சத்தியம் செய்யும்போது ஆமாம் என்று தான் தலை ஆட்டினேன். அதற்காக வாழ்த்தினார்கள்
போகட்டும் எல்லாம் பிறைச் சந்திரனுக்கே என்று விட்டு விட்டேன். அவ்வளவு பிரைச் சந்திரன் பார்க்க கணக்கு பிரகாரம் ஒவ்வொரு வருக்கும் 83 வருஷம் வேண்டும். பௌர்ணமி கட்டுப்பாடில்லாமல் கண்ணில் படும். சில ஆண்டுகளில் ஜாஸ்தி, சிலவற்றில் கொஞ்சம் குறைவு .
80 வயது பூர்த்தி என்பது ஒரு மிகப் பெரிய சாதனை தான். எவ்வளவு வெற்றி தோல்விகள் 80 வருஷங்களில். மஹா பெரியவர்களின் வாழ்க்கை உன்னதமானது. எத்தனை உபதேசங்கள், எத்தனை அதிசயங்கள், எத்தனை பேர் வாழ்க்கை சீற்பட்டிருக்கிறது. என்னைப் போன்றவர்கள் வளர்ச்சி வெறும் உடல் வளர்ச்சியாகிவிட்டதே என்று வெட்கமாக இருக்கிறது. .
யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்திற்கு சனகாதிகள் போயிருந்ததின் காரணம் அங்கே நிச்சயம் கிருஷ்ணன் வருவார் தரிசித்து
வணங்கலாம் என்பதற்கு தான். ஆனால் கிருஷ்ணனோ அங்கு வந்திருந்த பெரியவர் களுக்கு பாத நமஸ்காரம் பண்ணிக் கொண்டி ருந்தார்.
''கிருஷ்ணா நாங்கள் உன்னை நமஸ்கரிக்க வந்தால் நீ வேறு யாரையெல்லாமோ வணங்கிக் கொண்டிருக்கிறாயே என்று கேட்ட அவர்களுக்கு கிருஷ்ணன்.
'' நான் ஆறு பேரை முக்கியமாக நமஸ்கரிக்கிறேன். :
1. .தினசரி அநேகருக்கு உணவு அளிப்பவன்,
2. இளம் வயதியிலே யாக யஞம் பண்ணுபவன்,
3. உலகியலில் சிக்கிக்கொள்ளாதவன்,
4. தியாகிகளாக வாழும் சிறந்த பெண்மணிகள்,
5. ப்ரம்ம ஞானிகள்,
6. ஆயிரம் பிறைக்கண்ட 81 வயதான முதியவர்கள்..
கிருஷ்ணனை வணங்கும் என்னை போன்ற 80+க்கு கிருஷ்ணன் கொடுக்கும் மதிப்பு அடடா.... சிலிர்க்க வைக்கிறது.
நானும் என் மனைவியும் இனி சாதாரணர்கள் இல்லையா. நான் பரமேஸ்வரனாம், அவள் பார்வதியாம் . பேரை வேண்டுமானால் சிவன் என்பதை இனி பரமேஸ்வரன் என்று மாற்றி வைத்துக்கொண்டு சந்தோஷப்பபடலாம்.
எல்லோரையும் கூப்பிடவேண்டும் என்ற ஆசையை மட்டுப்படுத்தி, கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டிய இட ,உணவு, வசதி நிர்பந்தம் வருத்தத்தை அளித்தது என்றாலும் உறவினர்களைத் தவிர எதிர்பார்த்த ரொம்ப நெருங்கிய ஐம்பது அறுபது பேர்கள் எப்படி ஐநூறு + பேராக வளர்ந்தார்கள் என்ற ஆச்சர்யம் இன்னும் அகலவில்லை. அவர்களை சந்திக்கும் பாக்யம் கிடைத்தது
ஆச்சர்யத்துக்கு காரணம். ''சதாபிஷேகத்துக்கு கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை. காதில் விஷயம் பட்டாலே நாம் போய் நமஸ்கரிக்க வேண்டும்'' என்ற நமது பண்பாடு. முகநூலில், வாட்சப்பில், டெலிபோனில், நேரில், இப்பவும் கடிதங்களில், வாழ்த்திய அத்தனை பேருக்கும் ''எந்தரோ மஹானுபவுலோ...அந்தரிகி வந்தனமு'' தான் சொல்ல முடியும்.... ஒரு சிறு கிருஷ்ணன் புத்தகம் அனைவருக்கும் பரிசளித்தேன்...அதை முடிந்தால் இத்தோடு இணைக்கிறேன். CLICK THE FOLLOWING LINK TO READ THE BOOK GIFTED TO YOU:
என்னைப் படத்தில் பார்க்க யாரும் தூக்கமில்லாமல் தவிக்கவில்லை என்றாலும் விடப்போவதில்லை. படங்கள் வந்தால் சிலவற்றை ஆல்பமாக வெளியிடு
கிறேன்..
எனக்கு வந்த பரிசுகளில் ஆச்சர்யமானது மூன்று perfume பாட்டில்கள் வகையறா...! நூறு வயது வாழ்வது எப்படி என்று அறிவுரை.
ஆனால் என்னை மிகவும் மகிழவைத்
தது காஞ்சி காமகோடி மடம், அஹோபில நரசிம்மர் ஆலயம், திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம், , கருமாரி அம்மன் பிரசாதம், நிறைய புண்ய நதிகளின் தீர்த்தங்கள் போன்றவை இந்த சதாபிஷேகத்தில் கிடைத்தது. இதை என் பூர்வ ஜென்ம சத் கர்ம பலன் என்றே கருது
கிறேன்..
இந்த விழாவில் என் கவனம் பெரும்பாலும் எனைவிட வயதானவர்களைப் பிடித்து வணங்கி ஆசிபெறுவதில் இருந்தது. சிலரைத்
தான் கண்டு நமஸ்கரிக்க முடிந்தது. என் அப்பாவின் சதாபிஷேகத்துக்கு வந்தவர்
கள் ஒரு சிலர் அப்போது சிறு பிள்ளை களாக இருந்தவர்கள் இப்போது முதியவர்களாகவும், அப்போது வந்திருந்தவர்களின் சில வாரிசுகள் மட்டுமே கண்ணில் பட்டனர். அது தான் வாழ்க்கை.
என் வாரிசுகள் எப்படி என்னையும் ஒரு பொருட்டாக மதிப்பவர்கள் என்பது அவர்கள் ஓடியாடி இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியத்தில் பிரமித்து புரிந்து கொள்ள வைத்தது. நண்பர்கள் இத்தனையா?,
இத் ''துணை'' யா??? மூக்கில் வைத்த விறல் இன்னும் எடுக்கப்படவில்லை.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...