Friday, September 20, 2019

BATHRAGIRI



பத்ரகிரியார் புலம்பல் J K SIVAN

இதெல்லாம் எக்காலம்?
சில விஷயங்கள் கொஞ்சம் ஓவராக இருக்கிறதோ என்று தோன்றுகிறது. வடக்கே உஜ்ஜயினி ராஜாவான பர்த்ருஹரி, விக்கிரமாதித்தனின் அண்ணா. மனைவி செய்த துரோகத்தால் மனமுடைந்து சந்நியாசி யாகி ஊர் சுற்றுகிறான். அவன் எழுதிய நீதி சதகம், வைராக்ய சதகம் எல்லாம் அவ்வப்போது எழுதி வருகிறேன். ரொம்ப ருசியான விஷயங்கள்.

பர்த்ருஹரி தெற்கே திருவிடைமருதூரில் வந்து பட்டினத்தார் சிஷ்யனானான், தமிழில் பத்திரகிரியார் என்று வேதாந்தத்தை புலம்பலாக எழுதினான் என்று சொல்வது எவ்வளவு நிஜம் என்று தெரியவில்லை. இருந்தாலும் வடக்கே வாழ்ந்த பர்த்ருஹரி எழுதிய வைராக்ய சதகம் தெற்கே பத்ரகிரி புலம்பல் ரெண்டுமே உயர்ந்த வகையான நூல்கள்.
ரெண்டு ரெண்டு வார்த்தையில் பத்ரகிரி புலம்பலை பற்றி முன்பே நிறைய எழுதி இருக்கிறேன். இன்று கொஞ்சம்.

அர்த்தம் சொல்லப் போவதில்லை. மேலெழுந்தவாரியாக படித்து புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள். உயர்ந்த குண்டலினி தத்துவத்தை எழுதப் புகுந்தால் என் பக்கமே யாரும் வரமாட்டார்கள். அவரவர் தெரிந்து கொள்ளட்டும் என்று விடுவது தான் புத்திசாலித்தனம். மனப்பக்குவம் ஸ்விக்கி,SWIGGY ஸோமோடோ ZOMATO பார்ஸலில் கிடைக்காது. நிஜமாகவே கொஞ்சம் மனதை கசக்கிக்கொள்ளவேண்டும்.அதற்கு தனிமை தேடவேண்டும்.

''வாயோடு கண்மூடி மயக்கமுற்று நில்லாமல் தாயோடு கண்மூடி தழுவி நிற்பது எக்காலம்? காசினியெலாம் நடந்து கால் ஓய்ந்து போகாமல் வாசிதனில் ஏறிவருவது இனி எக்காலம்?
ஒலிபடரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பிச் சுழுமுனையின் தாள்திறந்து தூண்டுவதும் எக்காலம்? இடைபிங் கலைநடுவே இயங்கும் சுழுமுனையில் தடை அறவே நின்று சலித்தருப்பது எக்காலம்? மூலநெருப்பைவிட்டு மூட்டு நிலா மண்டபத்தில் பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம்? ஆக வெளிக்குள்ளே அடங்காப் புரவி செல்ல ஏக வெளியில் இருப்பது இனி எக்காலம்? பஞ்சரித்துப் பேசும்பல்கலைக்கு எட்டாப் பொருளில் சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம்? மலமும் சலமும்அற்று மாயை அற்று மானம் அற்று நலமும் குலமும் அற்று நான் இருப்பது எக்காலம்? ஓடாமல் ஓடி உலகை வலம் வந்து சுற்றித் தேடாமல் என்னிடமாய்த் தெரிசிப்பது எக்காலம்? அஞ்ஞானம் விட்டே, அருள் ஞானத்து எல்லைதொட்டு மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவது எக்காலம்? வெல்லும்மட்டும் பார்த்து, வெகுளியெலாம் விட்டு அகன்று சொல்லுமட்டும் சிந்தை செலுத்துவது எக்காலம்?
மேலாம் பதம்தேடி மெய்ப்பொருளை உள்இருத்தி நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம்? எண்ணாத தூரம் எல்லாம் எண்ணி எண்ணிப் பாராமல் கண்ணாடிக்குள் ஒளிபோல கண்டறிவது எக்காலம் ?
இந்த பதின் மூன்று புலம்பலையும் அர்த்தம் சரியாக புரிந்துகொண்டால் நீங்கள் தான் சார் பத்ரகிரியார்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...