Friday, September 13, 2019

AINDHAM VEDHAM

ஐந்தாம் வேதம்  J K SIVAN

                      ''பரசுராமன் பிறந்தான் ''                           
 
குருக்ஷேத்ரம் போகும் வழியெல்லாம் எங்கும் ரத்த ஆறு இன்னும் ஓடிக்கொண்டே இருந்தது.

 ''யுதிஷ்டிரா,   அதோ தெரிகிறதே அது தான்  பரசுராமன் வெட்டிய  ஐந்து ஏரிகள்.  க்ஷத்ரியர்   களை மாய்த்து அந்த ரத்தத்தில்  யாகம் செய்தவன்  பரசுராமன்.  இருபத்தோறு  முறை பரசுராமன் க்ஷத்ரியர்களை தேடி அலைந்து கொன்று தன் சபதத்தை நிறைவேற்றினான். க்ஷத்ரியர்களை பூண்டோடு அழிக்க அவன் எடுத்த முயற்சி அது'' என்றான் கிருஷ்ணன்.

பிறகு க்ஷத்ரிய வம்சம் எப்படி மீண்டும் தலை தூக்கியது?  ஏன் பரசுராமன் க்ஷத்ரியர்கள் மீது அவ்வளவு கோபம் கொண்டான்? என்று யுதிஷ்டிரன் கேட்க, கிருஷ்ணன் சுருக்கமாக  பரசுராமன் கதையை சொல்வதை தான்  நாம் இப்போது கேட்கிறோம்.

'ஜது என்கிற அரசனுக்கு ரஜஸ் என்று ஒரு பிள்ளை. அவனுக்கு வலகஸ்வன் என்று ஒரு மகன். அவன் மகன் குசிகன். குசிகன் பிள்ளையில்லாததால் பிள்ளை வரம் வேண்டி தவம் செய்தான். தவத்தை மெச்சி  இந்திரனே,  கதி என்கிற மகனாக அவனுக்கு பிறக்கிறான். கதி என்பவனுக்கு ஒரு பெண். சத்யவதி.  அவளை  ரிசிகன்  என்கிற பிருகு வம்சத்தை சேர்ந்த  ரிஷி  மணக்கிறான்.  ரிஷி ரிசிகன் யாகம் வளர்த்து அதிலிருந்த ஹவிஸ் என்கிற  ஹோம பிரசாதத்தை தனது மனைவி சத்யவதிக்கு ஒரு பாகமும் அவள்  தாய்க்கு  ஒரு பாகமும் தந்து ''இதனால்  உன் தந்தை வம்சம் வளர ஒரு பிள்ளை பிறப்பான். மஹா சக்தி வாய்ந்தவனாக எவராலும் வெல்ல முடியாதவனாக  இருப்பான். க்ஷத்திரிய வம்சத்தையே அழிப்பவனாக வளர்வான் '' என்கிறான் ரிசிகன்.

'' உனக்கு நான் தந்தேனே அந்த  ஹவிஸ் மூலமாக உனக்கு அறிவிற் சிறந்த  ஒரு மகன், ஞானியாக , ரிஷியாக, வளர்ந்து தவ ஸ்ரேஷ்டனாக இருப்பான்'' என்று வாழ்த்தி  ரிஷி ரிசிகன் காட்டுக்கு செல்கிறான்.

 கதி என்ற ராஜாவும்  மனைவி யோடு தீர்த்த யாத்திரை சென்று காட்டி  பெண்ணையும்  மாப்பிள்ளை ரிஷி  ரிசிகனையும்  சந்திக்கிறார்கள்.  மிகவும் சந்தோஷத்தோடு  ''அம்மா, இந்தா,  இந்த ஹோம பிரசாதத்தை நீ உண்டால் உனக்கு மிகச் சக்தி வாய்ந்த ராஜகுமாரன் பிறப்பான் என்று என் கணவர் கொடுத்தார்'' என்று சொல்லி ஹவிஸை அளிக்கிறாள். ஆனால்  சத்யவதி தவறுதலாக தனக்கு கொடுத்ததை அம்மாவுக்கு கொடுத்துவிட்டு, அம்மாவுக்கு கொடுத்ததை தானும் உண்கிறாள் .  எனவே சத்யவதிக்கு மிக சக்திவாய்ந்த புஜபல பராக்கிரம பிள்ளையும் கதிக்கு  ஒரு  ராஜ ரிஷியாக பிள்ளைகள் பிறந்து வளர்கிறார்கள்.

'உன் பிள்ளை மிகக் கொடியவனாக, இரக்கமற்ற, இதயமற்றவனாக இருப்பான் என்று ரிஷி ரிசிகன் தனது மனைவியிடம்  சொல்லி,  ஆனால்  உன் சகோதரனாக உன் தாய்க்கு பிறப்பவன் ஒரு ஞானியாக சாது ரிஷியாக இருப்பான். தவறு செய்து  விட்டாய், என்ன செய்வது'' என்கிறார் ரிஷி ரிசிகன்.  சத்யவதி அழுகிறாள். எப்படியாவது நான் செய்த தவறை திருத்தி எனக்கு அருள் புரியவேண்டும் என்று காலில் விழுந்து கதற, ரிசிகன் ''  சத்ய வார்த்தையை மாற்ற முடியாதே, உன் தந்தைக்கு இனி வேதத்தில் சிறந்த ஞானம் கொண்ட  பிராமண ரிஷிகளாக  பிறந்து  வம்சம் தொடரும்'' என்கிறார் ரிசிகன் . 

''சுவாமி எனக்கு எப்படியாவது அமைதியான சாத்வீக குணம் கொண்ட ஒரு மகனை அருள  வேண்டும்'' என்று அழுகிறாள் சத்யவதி. அவ்வாறே ஆகுக என்று அருள் பெற்று, சத்யவதிக்கு ஜமதக்னி பிறந்தார்.   கதி என்கிற ராஜாவுக்கு விஸ்வாமித்ரன் பிறந்தான். கௌசிகன் வம்ச ராஜாவாக இருந்து விஸ்வாமித்ரன் பிராமண குணங்களை கொண்டிருந்தான். ஜமதக்னிக்கு  சக்தி வாய்ந்த க்ஷத்ரிய குணம் கொண்ட  ஒரு பிராமண பிள்ளை பிறந்தான்.வில்வித்தை, வாள் போன்ற ஆயுத பயிற்சிகளில் நிபுணனாக  பரசுராமன் வளர்ந்தான்.

ஆயிரம் கரங்கள் கொண்ட கார்த்தவீரியன் சக்தி வாய்ந்தவனாக அக்னியின் உதவியுடன்  பூமியை அழித்தான். அவனது அக்ரமத்தால் சாபம் பெறுகிறான். 'பரசுராமன் என்கிற பிருகு வம்ச ரிஷிகுமாரனால் நீ அழிவாய் '' என்று.  

கார்த்தவீர்யார்ஜுனனின் பிள்ளைகள்  ஜமதக்னியின்  ஆஸ்ரமத்தில் புகுந்து ஹோம பசுக்களை கடத்தி செல்கிறார்கள். பரசுராமன் கார்த்தவீர்யார்ஜுனனின்  ஆயிரம் கைகளை துண்டித்து பசுக்கள் கன்றுகளை மீட்கிறான். கார்த்தவீரியன் புத்திரர்கள் பழிவாங்க ஜமதக்னி ஆஸ்ரமம் வந்து ஒளிந்து கொண்டு, பரசுராமன் இல்லாத நேரத்தில் ஜமதக்னிரிஷியின்  தலையை வெட்டிக்  கொன்றார்கள்.  தந்தையின்  யாகத்திற்கு தர்ப்பை சேகரிக்க சென்ற பரசுராமன் திரும்பிவந்து தந்தை கொல்லப்பட்டதை அறிந்து   ''க்ஷத்ரியர்களை இனி பூண்டோடு அழிப்பேன்'' என்று சபதம் செயகிறான்.  சொன்னதை செய்வதில் முதலில் கார்த்தவீர்யார்ஜுனன் வம்சத்தை முழுதுமாக அழிக்கிறான். ஆயிரக்கணக்கான ஹைஹயர்களை கொ ல்கிறான்.  பிறகு வனம் செல்கிறான். மீண்டும் ஒருமுறை க்ஷத்ரியர்களை அழிக்கிறான். இது போல் 21 முறை விட்டு விட்டு  க்ஷத்ரியர்களை தேடிக் கொல்கிறான். அவனிடமிருந்து தப்பிய க்ஷத்ரியர்கள் பிறகு பெருகினார்கள். ரிஷி காஸ்யபர் பூமிக்கு அதிபதியாக பதவி ஏற்று, பரசுராமனை சூர்பரகா எனும் தென் கடல் கரை  பிரதேசத்துக்கு அனுப்புகிறார். எஞ்சிய க்ஷத்ரியர்கள் இதனால் காப்பாற்றப் படுகிறார்கள்.பூமி பரசுராமனின் சீற்றம் கண்டு அஞ்சுகிறது. அதை தனது மடியில் வைத்து தேற்றுகிறார் காஸ்யபர் .பூமி  இதனால் ஊர்வி என்று பெயர் பெறுகிறது.



''மகரிஷி,  நான் சில ஹைஹய வம்ச  க்ஷத்ரியர்களை மறைவாக காப்பாற்றி வைத்துள்ளேன். அவர்கள் வளர்ந்து என்னை பாதுகாக்கட்டும். பரசுராமன்  பூமியைக் காக்கும் அரசகுல க்ஷத்ரியர்களை அநேகமாக முழுதுமே அழித்து விட்டான். எஞ்சிய ஒரு சிலரை உங்கள் பாதுகாப்பில் விடுகிறேன்'' என்கிறாள் பூமிதேவி.  காஸ்யபர் அந்த  க்ஷத்ரியர்களை ஒன்று திரட்டி  பல ராஜ்யங்களுக்கு அரசர்களாக்கினார் '' என்று சொன்னார் கிருஷ்ணன்.

WHOEVER INTERESTED IN HAVING THE BOOK ''AINDHAM VEDHAM'' IN TWO VOLUMES CONTACT ME ON WHATSAPP WITH YOUR NAME AND ADDRESS FOR SENDING DETAILS. 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...