Tuesday, September 17, 2019

AINDHAM VEDHAM



\ஐந்தாம் வேதம்   J K SIVAN

''யுதிஷ்ட்ரா  சொல்கிறேன் கேள்...

லக்ஷோப லக்ஷம் மக்கள் இருந்து போரிட்டு  அனைவரும் மறைந்து இப்போது அமைதியாக காணும்  குருக்ஷேத்திர யுத்த பூமியில்  ரத்த ஆறு மட்டும் இன்னும் ஓடுகிறது. பாண்டவர்கள் கிருஷ்ணன் மட்டும்  அம்புபடுக்கையில் இருந்து உபதேசிக்கும்  பீஷ்மர் அருகில் இருக்கி றார்கள். யுதிஷ்டிரனின் சந்தேகங் களை பீஷ்மர் நீக்கிக் கொண்டி ருக்கிறார்:

''பீஷ்ம பிதாமகரே , எங்களைப்  போன்றோர்க்கு உகந்த உண்மையான, எல்லோரும் ஒப்புக்கொள்ளும், பயன்படும் சந்தோஷம் எது என்று சொல்லுங்கள்'' என்றான் யுதிஷ்டிரன்.

''யுதிஷ்டிரா, ஒரு அரசனாக உனக்கு எண்ணற்ற பொறுப்பு உள்ளது. உனது ஆட்சிக்கு தலைமை ஏற்கத்  தக்கவனாக நீ மதிக்கப் படவேண்டும். குடி படைகள் உன்னை பரிபூர்ணமாக வாழ்த்தும்படி,   நீதி தவறாது, நேர்மை பிறழாது, பாரபட்சமின்றி, வீரம் பொருந்திய, படை வலிமை மிக்க, பராக்கிரமனாக  நீ திகழ வேண்டும்.

உனது மந்திரி சபை உனக்கு உறுதுணயாக  இருக்கவேண்டும். மந்திரிகளை சரியானவர்களாக தேர்ந்தெடுத்தல் மிக மிக அவசியம்.

குற்றங்குறை உள்ளவர்களை நீக்க வேண்டும். சந்தேகாஸ்பதமாக நடப்பவர்களிடம் உனது பிரச்னைகளை சொல்லி ஆலோசனை பெறக்கூடாது. நம்பிக்கையானவர்களாக அவர் கள் இருக்க வேண்டும். (பிற்காலத்தில் இதனால்  என்ன தொந்தரவுகள் நாம்  அனுபவிக்கப் போகிறோம் என்று அப்போதே எப்படி பீஷ்மருக்கு தெரிந்தது?  இப்போது நாம் அல்லவோ அம்பு படுக்கையில் இருக்கிறோம்?)

எதிரி நாடு பற்றி, அதன் வலிமை, அதன் பலவீனம், சகலமும் முழுமையாக அறிந்து செயல் பட மந்திரிகள் உதவ வேண்டும். சேனாதிபதிகள் தங்கள் ஆளுமைக்கு, கட்டுப்பட்ட சேனைகளின் நலனை கருதவேண்டும். அவர்கள் தேவைகளை பூர்த்தி செய்கிறார்களா என்று அரசன் அவ்வப்போது விசாரித்து அறிய வேண்டும்.
மேலும் சேனையை பலப்படுத்திக் கொண்டே செல்லவேண்டும். வயதான வர்கள், பலவீனமானவர்கள், காயங்கள், வியாதி கொண்டவர்களை நீக்கி அவர்க ளுக்கு நிம்மதியாக வாழ உதவி செய்ய வேண்டும். சக்தி வாய்ந்தவர்களை அவ்வப்போது பரிக்ஷிக்க வேண்டும்.

வைசியர்கள் நாட்டின் உயிர் நாடி. அவர்களுக்கு தேவையான வசதிகள்,ஆரோக்கியமான சூழ்நிலை தந்து அவர்கள் வியாம்பாரம் பெருக அரசன் காரணமாக இருக்கவேண்டும். அயல் தேச இறக்குமதி ஏற்றுமதிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பண்டம் மாற்றுதல் தக்க வகையில் நடக்க வழி கோல வேண்டும்.

அரசன் நாட்டில் மக்களின் மன நிலை எவ்வாறு இருக்கிறது, தனது செய்கைகள் வரவேற்கப் படுகிறதா , எதிர்க்கப்படு கிறதா என்று தெரிந்து செயல் பட வேண்டும் . அவனிடம் உள்ள பயத்தால் வெளியே சொல்லாமல் தங்களுக் குள்ளேயே அனல் கசியும். மாறுவேடத்தில் அதிகாரிகளை அனுப்பியோ, ஒற்றர்கள் மூலமோ அரசன் மக்கள் மத்தியில் அவர்களை அனுப்பி விஷயம் அறிந்து கொள்ளவேண்டும். எதிர்ப்பதால் கோபம் கொள்ளக் கூடாது. தவறு எங்கே இருக்கிறது என்று ஆராய்ந்து திருத்தவேண்டும்.

பெரிய மீன் சின்ன மீனை தின்கிறது. பெரிய பாம்பு குட்டி பாம்பை விழுங்குகிறது. நகர்வது நகராததை உண்கிறது. இது உலக இயல்பு. அரசன் அதுபோல் தன்னை விட பலம் குறைந்த நாட்டின் அரசன் மேல் யுத்தம் புரிந்து அவனை தனது ஆட்சிக்கு கீழ் கொண்டுவருதல் க்ஷத்ரிய தர்மமாக ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

இதுபோல் நிறைய விஷயங்களை யுதிஷ்டிரன் கேட்டும் கேட்காமலும் பீஷ்மர் அவனுக்கு உபதேசிக்கிறார். மரணப் படுக்கையில் இவ்வள விஷயங்களா ஒருவர் சொல்ல முடியும்? பீஷ்மர் தான் மரணத்தை வேண்டும் நேரத்தில் பெறுபவராயிற்றே. எனவே அவரால் முடிந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...