Friday, July 26, 2019

SKST SAPTHAHAM


நங்கநல்லூரில் ஒரு சிறப்பு ஸ்ரீ கிருஷ்ண சப்தாஹம்   (ஏழுநாள் விழா)-   j k sivan 























 மதுராந்தகம் நங்கநல்லூரிலிருந்து கிட்டத்தட்ட  100 கி.மீ. தூரம்.  திரும்பி போக      அதே 100 கி.மீ. ஒவொருநாளும்  சிரமத்தை பாராமல் இந்த முதியவர் குறித்த நேரத்துக்கு முன்பாகவே  வந்து விடுவார். பஸ், ரயில், நடை, ஆடோ என்று பல வித பயணங்கள் இதில் உண்டு. எப்படியும் வர மூன்று மணிநேரம் திரும்ப மூன்று மணிநேரம்.  எதற்கு? என்னத்தை  எதிர்பார்த்து?  வெளியே  தண்ணீர் கூட குடிப்பதில்லை. ஆச்சார சீலர். ஆறுமணி நேரம் பயணம் மட்டுமா.  ஒன்றரை  மணி நேரம் இடைவிடாத, ஒரு   வினாடிகூட  தொய்வு இல்லாத அறிவு சார்ந்த , ஹாஸ்யம் கலந்த, பிரவசனம். 22.7.2019 முதல், நங்கநல்லூரில்  இந்த ஆன்மீக சுனாமியின் அற்புத ''ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்''கரை புரண்டு ஓடுகிறது.   ஓருநாள் உபயோகித்த சொல் மறுநாள் கேட்க முடியாதபடி அவ்வளவு வாக் சாதுர்யம். ராம்நகர் முதல் மெயின் ரோடு  நம்பர் 20  இல்லத்தில் ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் ஆதரவில் இந்த பாகவத சப்தாஹம்  இன்று 5ம் நாள்.  மாலை  சரியாக  6 மணிக்கு துவங்கவுள்ளது. இன்றைய தலைப்பு  ''கட்டுண்ட மாயன், பிருந்தாவன கிருஷ்ணன்'' என்றிருந்தாலும் இதில் கண்ணதாசன், TMS ஆழ்வார்கள், BYRON, SHAKESPEARE, காளிதாசன், கம்பன், வள்ளுவர், வாலி, கி.வா.ஜ .  திருமூலர் அனைவரும் பங்கேற்பார்கள்.  அறுசுவை அல்ல  ஆயிரம் சுவைகள் உண்டு ஸ்ரீ மதுராந்தகம், திருமால் கவிச் செல்வர், கைங்கர்ய சீமான் உ.வே.  ரகுவீரா பட்டாசார்யார் உபன்யாசத்தில். இசை மழையும் அவ்வப்போது நடுநடுவே பொழிவார்.

நாளை 6ம் நாள்:  மாலை 5மணிக்கே  துவக்கம். :''காளிங்க நர்த்தனம், குசேல சரித்திரம்'' 

நிறைவாக  ஞாயிறு மாலை நிகழ்வுகள்:   
இடம்:  ரஞ்சனி ஹால், 15வது தெரு, நங்கநல்லூர்.

மாலை  3.00- 400  வரை :   குழந்தைகள் பெரியவர்கள் அனைவருக்கும்  - - வண்ணம் தீட்டும் போட்டி, வண்ணங்கள் ,பென்சில்,பேனா, PAD, கொண்டுவரவேண்டும்.  நாங்கள் கொடுக்கும்  படத்திற்கு வண்ணம் தீட்டவேண்டும்.

மாலை 4.00-500 வரை:  வினாடி வினா - எல்லோரும் கலந்துகொள்ளலாம். இதிஹாச, பெயர்கள் இடங்கள் பற்றிய வினாடிவினா. கேள்வித்தாளில்  50க்கு குறையாத ஒரு வார்த்தை விடை மற்ற மூன்று தவறான விடைகளோடு கலந்திருக்கும். சரியான விடையை டிக் TICK செய்யவேண்டும்.  (PAD   பேனா பென்சில் கொண்டுவரவேண்டும்)
மாலை 5.00-6.00 வரை:  கிருஷ்ண பஜன்/பக்தி கீதங்கள் 
மாலை 6.00- 7.30 வரை:   7வது நாள் நிறைவு சப்தாஹம் :''ருக்மணி கல்யாணம்' நடத்துபவர்  ஸ்ரீ ரகுவீர பட்டாச்சாரியார்.
மாலை  7.30-7.45 வரை    ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் வழங்கும் ''ஸ்ரீ க்ரிஷ்ணசேவா அவார்டு  2019''  ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யருக்கு வழங்க முன்வந்திருப்பவர்கள்  பெங்களூரை சேர்ந்த  ''ஸ்ரீ சுந்தரம் மீனாட்சி'' குடும்பத்தினர்

இரவு  8 மணிக்கு அனைவருக்கும்  ஸ்ரீ  கிருஷ்ண பிரசாதம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...