Tuesday, July 9, 2019

DAUGHTER



                                             ஒரு ரகசியம்        J K SIVAN 



சுப்புலக்ஷ்மி  ராமசேஷன்  கல்யாணம் ஆகி  பல வருஷங்கள் ஆகிவிட்டது. ஒரு சம்பவம் அவர்கள் நினைவுக்கு வந்தது. கல்யாணமாகி அவர்கள் வீட்டுக்கு வந்த முதல் நாள் இருவருக்குள்ளும் ஒரு  ஒப்பந்தம். 

''ஆமாம்  நான் சொல்லிட்டேன். இன்னிக்கு  யார் வந்து தொந்தரவு பண்ணினாலும் கதவை திறக்கறதில்லே. ஒருநாள்  நிம்மதியா இருப்போம்...'' சரி'' என்று தலையை சொரிந்துகொண்டே ஆட்டினான் ராமசேஷு.

சொல்லி அரைமணிநேரம் கூட ஆகவில்லை. ராமேசேஷுவின் அப்பா அம்மா  இருவரும் பிள்ளையை பார்க்க வந்துவிட்டார்கள்.  லொட்டு  லொட்டு கதவு தட்டப்பட்டது.... ஜன்னல் இடுக்கு வழியாக பார்த்த மைதிலி ''உங்கப்பா அம்மா ''  என்றாள் . ராமசேஷுவுக்கு ஒப்பந்தத்தை மீறி கதவை திறக்க ஆசை.   ஆனால்  மைதியிலின் புலிப் பார்வை அவனை செவிடனாக்கியது.  ராமு ராமு என்று சிறிது  உரக்க                                            கூப்பிட்டுவிட்டு அவர்கள் திரும்பி போய்விட்டார்கள். அவர்கள் காலத்தில் மொபைல் போன் இல்லையே..இப்போது மாதிரி பிளாட் இல்லை. அடுத்த வீட்டுக்காரன் கத்துவான்,  ராமசேஷுவின் வீடு   ஒரு பள்ளிக்கூட மைதானம் பக்கத்தில் புளிய மரத்தடியில் தனி வீடு. ஒருபக்கம் நெருஞ்சி முள். வாசலில் பூச்செடிகள்.  ரெண்டு மணிநேரத்தில் மறுபடியும் கதவு  தட்டப்பட்டது.காலிங் பெல் தெரியாது அப்போது.
மீண்டும் ஜன்னல் இடுக்கு. மைதிலி முகத்தில் சந்தோஷம். ''  அட அப்பா அம்மா வந்திருக்காளே''. ராமசேஷுவை கன்சல்ட் பண்ணவோ, ஒப்பந்தத்தை மீறவோ  கவலைப்படவில்லை. கதவை திறந்தாள்.
''வாங்கோ வாங்கோ.''    ராமசேஷு  பற்றிஒரு வார்த்தை. ''நான் தான் இந்த வீட்டு எஜமானன். அப்படி தான் என் மனைவி மைதிலி சொல்ல சொன்னாள் '' டைப்.

++   வருஷங்கள் ஓடிவிட்டது. கோபு பாபு பிறந்தாகி விட்டது. பிறந்தநாளை சுமாராக ஒரு பாயசம், கோவிலில் அர்ச்சனையோடு  கொண்டாடினார்கள். ரெண்டு வருஷம் கழித்து  சரோஜா பிறந்தாள் . அவள்  பிறந்தநாளை அடுத்த வருஷம் வெகு விமரிசை யாக ராமசேஷு கொண்டாடினான். நண்பர்களை அழைத்து விருந்துகூட. 
                                                                       
அன்றிரவு மைதிலிக்கு   (வீட்டில்  சுப்புலக்ஷிமியின் நாமகரணம்)  தெரிந்துகொள்ளாமல் தலை வெடித்துவிடும் போல ஒரு ஆச்சர்யம்.

''ஏன்னா  இன்னிக்கு  அவ்வளவு செலவு பண்ணி  சரோஜா பிறந்தநாள் ஏற்பாடு பண்ணினேள் . நீங்கள் காசு ரொம்ப செலவு பண்ண யோசிப்பவராச்சே.'' 

''ஹிஹிஹி''

''சொல்லுங்கோ மழுப்பாதேங்கோ. இப்படி பாபு  கோபு  பிறந்தநாளை ஏன் கொண்டாடணும்னு தோணலை'' 

''சொல்லாம  விடமாட்டியே.  சரி சொல்றேன் கேளு.   ''நான் வீட்டுக்கு போனா அவள் நிச்சயம் கதவை திறப்பாள்'' எங்கிற நம்பிக்கை.  போறுமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...