Saturday, July 27, 2019

NARASIMMAAA



யாத்ரா விபரம்   J K  SIVAN 
நரசிம்மா    ஆ   ஆ   ஆ  ஆ !

                                             

          ஷோடஸ புஜ  நரசிம்மர் 

பூமாதேவி  செல்வத்தை வாரி வழங்கும் கருணா மாதா.  நம்மை வாழவைக்க  இடமும், உயிர்வாழ  காற்றும், நீரும், நிழலும், உணவும் தரும் அவளுக்கு நாம் செய்யும்  துரோகம் இயற்கை வளங்களை பாழ்படுத்துவது. ஒரு கணம் நாம் நினைத்து பார்த்தால் திருந்துவோமா?

பூமியில் அற்புத க்ஷேத்திரங்களும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதே.   நரசிம்மனை பற்றி சிந்திக்கும்போது பூமியும் தோண்ட தோண்ட, மண், நீர், கனிவளம் , எல்லாம் கிடைப்பது போல அற்புத விஷயங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

வேலூர் ரயில் நிலையத்திலிருந்து 21 கிமீ. வேலூர் - போளூர் சாலையில்  ஒரு சிறு குன்றின் மேல் லட்சுமி நரசிம்மர் சிங்கிரிகோயில் என்ற இடத்தில்  குடி கொண்டு இருக்கிறார். குன்று பெரிதல்ல  80 அடி  உயரம் தான். 8ம் நூற்றாண்டு பல்லவன் ராஜவர்மன் கனவில் ''எனக்கு ஒரு கோவில் இங்கே கட்டு'' என்று நரசிம்மன் கேட்டு அவன் கட்டிய  கோவில். ஆறு அடி  உயரமாக, வீற்றிருந்த திருக்கோலம். சதுர்புஜங்களில்  இரண்டில் சங்கு, சக்ரம்,  ஒன்று மடியில் மற்றொன்று  மடியில் அமர்ந்த லக்ஷ்மிதேவியை அணைத்தபடி.  இங்கும் ஒரு அழகிய பால ஆஞ்சநேயருக்கு ஒரு தனி கோவில். கருடனுக்கு ஒன்று. கோவிலுக்கு எதிரே ஒரு சிறு ஆறு. வெள்ள  காலங்களில் குறுக்கே  நடந்து கடக்க முடியாது. அப்போதெல்லாம் ஆலயம் மூடியிருக்கும். 

பரிக்கல், அபிஷேகப்பாக்கம், பூவரசன்குப்பம் என்று மூன்று இடங்களில் உள்ள நரசிம்மரை ஒரே நாளில் பார்க்க ஒன்றிரண்டு முறை  நண்பர்களோடு சென்றதுண்டு.  இதில் அபிஷேகப்பாக்கம் கிராமத்தில் சிங்கிரிக்குடி என்ற கோவிலில் மேற்கு பார்த்த உக்கிர நரசிம்மர் அருள்பாலிக்கிறார். அற்புதமான பல்லவர் கால  ஆயிரம் வருஷத்து கோவில் இது. பதினாறு கரங்கள் கொண்ட ஒரே நரசிம்மன் இவர்.  பிரகலாதனுக்கு தரிசனம் கொடுத்தவர். இங்கே மூலவர் உக்ர  நரசிம்மர். தாயார்  கனகவல்லி. இந்த ஆலயம் செல்ல புதுச்சேரி- கடலூர் மார்கத்தில் தவளைக்குப்பம் என்ற கிராமத்திலிருந்து 2 கி.மீ. பாண்டி வழியாக வந்தால் 10 கி.மீ. 
உக்கிர நரசிம்மன்  இடப்பக்கம், ஹிரண்யன் மனைவி நீலாவதி, மூன்று ராக்ஷஸர்கள். வலப்பக்கம் ப்ரஹ்லாதன், சுக்ராச்சாரியார்,  வசிஷ்டர்.  இன்னொரு இடத்தில் யோக நரசிம்மர், பால நரசிம்மர். பல வித உணர்ச்சிகளோடு, மனோபாவத்தோடு நரசிம்மர்களை காண்பது இங்கே மட்டும். ராஜஸ்தானிலும் எங்கோ இருக்கிறதாம். நான் இன்னும் பார்க்கவில்லை.

உக்ர நர சிம்மனின் 16 கரங்களிலும் ஆயுதங்கள். பாதகஹஸ்தம், பிரயோக சக்ரம், க்ஷீரிக வாள் , வில் அம்பு, சங்கு சக்ரம் கதாயுதம், ஒரு வெட்டிய தலை  ...... மற்ற கரங்களால் ஹிரண்யனை  தனது கூரிய நகங்களை  பிரயோகித்து  வயிறு கிழித்து  குடலை மாலையாக போட்டுக்கொண்டிருக்கிறார்.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...