Monday, July 8, 2019

ADVICE


மன்னார்சாமி மனம் திறக்கிறான்... J K SIVAN

'சந்தோஷமா வாழறோமோ இல்லையோ, என்னைப்பாரு நான் எவ்வளவு வசதியா வாழறேன்னு மத்தவங்களுக்கு காட்டிக் கொள்ளணும் தான் நிறைய பேர் வாழறாங்க. அதுக்கு தான் பணம் தேவை.
சந்தோஷமா வாழ பணம் அவசியம் இல்லை... இப்படி பணத்தை தேடி வாழ்க்கையை வீணடிப்பது குண்டூசியால் குத்தி குளம் வெட்டறது போல. இந்த பணத்தை செலவழிப்பது அதே குண்டூசியால் பலூனை குத்தி உடைப்பது போல! சரி தானே.
பிச்சை போடுவது கூட நாலு பேர் பார்த்து இதைப்பாரு இவன் எவ்வளவு தர்மிஷ்டன் என்று நினைக்கவே தான். வெறும் சுயநலம். இல்லேன்னா ஒரு சின்ன க்ரில் கேட் ஆஞ்சநேயருக்கு 3' x 5' போட்டுட்டு அதுமேல கோபாலசாமி உபயமுன்னு வெல்டிங் பண்ணி வைப்பானா? அதால் புண்ணியம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்த போது, நினைத்தால் கூட அது தப்பு தானே?

அனுபவத்தால் தான் ஒவ்வொருத்தனும் வாழ்க்கையிலே உண்மையை உணரணும். அது தான் முறை. அவனே அப்படி உணர வேண் டிய ஒரு உண்மையை ஆயிரம் தத்துவ ஞானிகள் வந்து எடுத்து சொன்னாலும் உள்ளே ஏறாது.
வாழ்க்கையில் பாடம் கற்றுக்கொள்வதில் நாம் ஒரு சின்ன குழந்தை போல் இருகாணும் ஸார் . அதுக்கு ஈகோ கிடையாது. மானம் அவமானம் தெரியாது. தொப்புனு கீழே விழும். அழும். அழுதுட்டு தானே எழுந்திருக்கும் சிரிக்கும். திரும்பவும் நடக்கும் விழும் அழும் இல்லையா?

நான் படிச்ச ஒரு விஷயம் ரொம்ப பிடிச்சுது. மரம் சொல்லுது: வெட்டாதீங்க நான் மழை தரேன்... ஐயா என்னை வெட்டுங்க நான் தண்ணி தரேன்...ஏங்குது குளம்... நாம இருக்கிற ஏரி குளம் எல்லாத்தையும் துத்துட்டு வீடு கட்டிடறோம்.வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"

முனாலே போறவன் என்ன அவசரமோ போவட்டும்.. விடு. பின்னாலேயே ஒருத்தன் வந்திட்டுருக்கான் இல்லை. அவன் கிட்டே ஜாக்கிரதையா இருக்கணும். அவன் உங்களை தாண்டி முன்னாலே போயிடுவான். நீ கடோசியாக ஆயிடுவே.
நான் யோசித்தேன். கோவில்லே உண்டிலே கட்டு கட்டா ஐஞ்சு லக்ஷம் தங்கக்கட்டின்னு கொண்டு போடறவன் யாருஸார்? திருட்டு பய தானே? உண்மையா உழைச்சு, வியர்வை சிந்தி, வரி கட்டி நியாயமா சம்பாரிச்சவன் உண்டில்ல திருட்டுத்தனமா கொண்டு போய் பணத்தை போடறதில்லே. அடாவடி, கொள்ளை, லஞ்சம் வாங்கினவன் தான் ஆப்புடக்கூடாது காப்பாத்து சாமி ன்னு துணை தேடறதுக்கு கொண்டு போய கொட்டறான்.

பகல் நேரத்திலே தூங்காதே குப்புசாமி. உன் உடம்பு ரொம்ப வீக்கா இருக்குன்னு அர்த்தம் டா!! ராவிலே தூங்கலேன்னா உன் மனசு ரொம்ப கவலை, வீக்குன்னு அர்த்தம் பா.

இப்பல்லாம் ரொம்ப பொன்மொழிகள் உதுத்து விடறேன் இல்லே? . நிறுத்திக்கறேன் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிட்டு. நாம யாரெல்லாம் துரோகிங்க ன்னு நினைக்கறோமோ அவங்க கிட்ட கொஞ்சம் கூட கோபம் இருக்கறதில்லே. ஏன்னு கேள் . கேட்டியா ? எவன் கோபப்படறானோ, அவன் கிட்டே நிச்சயம் துரோகம் இருக்காதுடா குப்புசாமி.''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...