Wednesday, July 3, 2019

SKST 2019 TALENT AWARD



















     ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் 2019  திறமை விருதுகள் 

ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா  ட்ரஸ்ட்  நிறுவனம் இந்த வருஷம் 2019ல்  இளம்  சிறுவர் சிறுமியரிடம்  உள்ள தனித் திறமையை  ஆராய்ந்து அவர்களது ஈடுபாட்டில்  மேன்மேலும்  சிறக்க, அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு  ஒரு திட்டம் நடைமுறைக்கு  கொண்டு வந்திருக் கிறோம்.

நிறைய  நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அடுத்த தலைமுறையினரின் ஈடுபாட்டை நன்றாக கவனித்து இந்த வருஷம்   ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா ட்ரஸ்ட் 2019  திறமை அங்கீகரிப்புக்கு  ஏற்றவர்களாக மூன்று   சிறுமியரை தேர்ந்தெடுத்தோம்.  

இந்த மாதம்   23. 6. 2019  ஞாயிறு அன்று  நங்கநல்லூர்  அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தில்,  முதன்முறையாக அந்த  ஆலயத் தின் சமீப  கும்பாபிஷேகத்துக்கு பிறகு  ஆலய மண்டபத்தில் அந்த மூன்று  குழந்தைகளையும் அழைத்து ஒவ்வொருவரும் ஒரு மணி நேரம் தங்களது தனித்திறமையை சபையோருக்கு அளித்து  மகிழ்விக்குமாறு  கேட்டுக்கொண்டு, அவர்களுக்கு   விருதுகளை சமர்ப்பித்தோம்.  

1. ஸ்வராத்திமிகா,   வாய்ப்பாட்டுக்கு   விருது பெற்றார். - எடுப்பான குரல், எளிதில் உச்சஸ்தாயியை சர்வ லகுவுடன்  தொடும் வசதி கொண்ட இயற்கையான குரல்வளம். அற்புதமாக  பாடினாள் .  அவளுக்கு  பக்க வாத்தியமாக மிருதங்கமும்   வயலினும் வாசிக்க  இரு  வித்வான்கள்  அமைந்தது நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது.  ஸ்வராதமிகா என்ற பெயரே அவளுக்கு அமைந்தது அவளது ஒளிமயமான எதிர்காலத்தை காட்டுகிறது.   ''கந்தர்வ  கான யுவ கலாமணி''  என்ற  SKST  விருதை , நங்கநல்லூர்   அர்த்தநாரீஸ்வரர் ஆலய ட்ரஸ்டீ   ரோட்டரியன்  ஸ்ரீ  கே. எஸ். ஸ்ரீனிவாசன் அளித்தார்.   

2. வாத்தியங்கள் வாசிப்பவர்கள் பிரிவில்  சிறுமி  R. ஸ்ரீகிருதி,  தேர்வு செய்யப்பட்டு, அவர் ஒருமணி நேரம் அற்புதமாக  சில கீர்த்தனைகளை வயலினில் வாசித்து காட்டினார்.  அவருக்கு அற்புதமாக அவரது தந்தை    டெல்லி ராஜா,  மிருதங்கம் வாசித்தது கூடுதல்  சிறப்பு.  ஸ்ரீகிருதிக்கு ''ஏழிசை வல்லபி''   என்ற  SKST  TALENT  AWARD  விருதை   ரோட்டரியன், நங்கநல்லூர் ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலய நிர்வாக கமிட்டீ தலைவர்  PROF. கே. சுந்தரராஜன் வழங்கினார்.  

3. இந்த மூவரில் மிகச் சிறிய குழந்தை  நேத்ரா. ஆறு  வயதான நேத்ரா, அம்மாவின் துணையோடு, ஸ்ரீ ராம நாம மஹாத்ம்யத்தை  ஸமஸ்க்ரித ஸ்லோகங்களோடு, அற்புதமாக ஒரு குட்டி  சங்கீத ப்ரவசனமாக ஒரு மணிநேரம் நிகழ்த்தினார். எவ்வளவு ஞாபக சக்தி இந்த சிறு குழந்தைக்கு என்று சபையோர் வியந்தனர்.  அவளுக்கு   ''பால ப்ரவசன மணி''  என்ற SKST  TALENT AWARD விருதினை SKST  தலைவர்  ஜே.கே. சிவன் வழங்கினார்.

இந்த மூன்று குழந்தை திறமைசாலிகளுக்கும், ஸ்ரீ அர்த்தநாரிஸ்வரர் ஆலயத்தை சேர்ந்த ஸ்ரீ முத்துமணி ஆசிர்வாதத்தோடு ஆலய பிரசாதம் வழங்கினார். 

SKST   செயலர் ஸ்ரீ   சுந்தரம் ராமச்சந்திரன் இந்த நிகழ்ச்சியின் பொறுப்புகளேற்று அற்புதமாக ஏற்பாடு செய்ததுடன் வரவேற்புரை வழங்கினார். PROF  சுந்தரராஜன் இந்த குழந்தைகளை தேர்வு செய்ததில் பெரும் பங்கு வகித்து அவர்களை வாழ்த்தினார்.  
விழா முடிவில்  அனைவருக்கும் ஆலய  நிர்வாகம்  பிரசாதம் வழங்கியது.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...