Wednesday, July 10, 2019

SATHI MUTRA PULAVAR



சத்தி முற்ற புலவர்     J K SIVAN 



​                                ஏழையின்   தூது  கவி  ​

​​சின்ன வயசில் படிக்கும்போது  ரசிக்கவோ, ருசிக்கவோ தெரியவில்லை. மனப்பாடம் பண்ணும் சக்தி இருந்தது.  அதனால் தான் நிறைய பாடல்களை, செய்யுள்களை, ஸ்லோகங்களை முதலில் மனப்பாடம் பண்ண கண்டிப்பாக  வற்புறுத்தினார்கள். அடித்தார்கள். இப்போது வயது  ஏற  ஏற  அசைபோடும்போது பாட்டு நன்றாக நினைவில் இருக்கிறது. அர்த்தமும் அனுபவத்தால் புரிகிறது.   அக்கால ஆசிரியர்களே  சாஷ்டாங்க நமஸ்காரம் உங்கள் திசைக்கே. 

நாரை விடு தூது என்ற ​ பாடலை  வறுமையால் வாடிய சத்தி​ முற்றப் புலவர்​  எழுதினார் ​ சத்தி முற்றம் இப்போது ​சத்தி​ ​முத்தம்​.  கும்பகோணம் அரு​கே உள்ள கிராமம்.  அருமையான பழைய சிவன் கோவில் இருக்கிறது.  சிவன் பெயர்  சிவக்கொழுந்து நாதர். அம்பாள் பெரியநாயகி.  சக்தியாகிய பார்வதி பரமேஸ்வரனை தழுவிக்கொண்டிருக்கும் சிலை கோவிலில் இருக்கிறது. அதனால் தான்  சக்தி சிவனை கட்டி  முத்தமிட்டதால் சத்தி முத்தம். ​  கோயிலில் காணும் கல்வெட்​டு   சிவனை  "திருச்சத்தி முற்றம் உடை​யார்'', திருச்சத்திவனப் பெருமாள்"​ என்கிறது. சித்தி முத்தம்  ஆகாமல்  எதிர்காலம் காப்பாற்றவேண்டும். 
 தஞ்சை மாவட்டம் ​ கும்பகோணத்திற்கு தென் மேற்கே 3. கி.மீ. தூரத்தில் பட்டீச்சரத்திற்கு அருகில் உள்ளது.குலோத்துங்க ​சோழன் காலத்தியது. 
​முக்கால் வாசி கல்வெட்டுகள்  கோவிலில் தீபம் எரிய நந்தாவிளக்குக்கு  எண்ணெய்  கைங்கர்யத்துக்கு வருமானம் தர  காசு, ஆடு, நிலம் எல்லாம்   மானியமாக எழுதி வைத்ததை சொல்லும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். ஒரு பரம தரித்ரன். எங்கோ யாசகம் வாங்கி வர தனது புலமையை நம்பி வெளியூர் செல்கிறான். வெகுநாட்களாகி விட்டது ஊரை விட்டு வந்து தெற்கு தேசம் எங்கோ வந்து தடுமாறுகிறார்.  வடக்குப்பக்கம் தோலை தூரத்தில்  இருக்கும்  தனது சத்திமுற்றத்தில்   மனைவி குடும்பம் எப்படி வாடுகிறதோ. அங்கிருந்து சேதி இல்லை, இங்கிருந்தாவது என் நிலைமை பற்றி ஒரு சேதி போகட்டும் என்று நினைக்கிறான். எப்படி யார் மூலம் சேதி அனுப்புவது. நாம் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள். ஒவ்வொரு நிமிஷமும் மனைவி நம்மை  WHATSAPP, SMS, மொபைல்  போன், மூலம் கண்டுவிடுத்து விடுகிறாள். அவர் இப்படி யோசிக்கும்போது ஒரு ஜோடி நாரைகள் அவர் எதிரில் ஒரு குளத்தில் நீராடி மீன் பிடித்து தின்று பறக்க போகும் சமயத்தில் அவற்றை வேண்டிக்கொண்டு

அழகான பனங்கிழங்கை பிளந்தாற்போல் நீண்ட அலகு கொண்ட, சிவப்பு  நிற உயர கால்களை உடைய ழகு பறவைகளே,  நீயம்  உன் அழகிய மனைவியும்  இருவரும்  அருகே இருக்கும்  கன்னியாகுமரி  கோவில் குளத்தில் நீராடி, ங்கள் வடக்கு பக்கமாக பறப்பதாக இருந்தால் அங்கே சத்தி முற்றம் என்ற ஊரில் ஒரு பெரிய  குளம் இருக்கிறது அங்கே நிறைய உங்களுக்கு மீன் தின்ன கிடைக்கும். அந்த குளக்கரையில் இப்போதோ, நாளையோ இடிந்து  விழும் நிலையில் ஈரச்சுவர்கள் கொண்ட மண் சுவர் ஒரே வீடு என்னுடையது. அதில் என் அருமை மனைவி இருக்கிறாள். பல்லி  சுவற்றில் ''டிக்  டிக்'' என்று சபித்தம்செய்யும்போதெல்லாம்  நல்ல சகுனமாக நான் திரும்பி வந்துவிடுவேன் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாள்.   அவளிடம்   அம்மா  உன் கணவனை நாங்கள்   பாண்டியன் ஆளும் மதுரையில் ஒரு  பக்கம்  பசியால் காதடைத்து கண் பஞ்சு ஆகி,  பலத்த  வாடைக்காற்று  தந்த  குளிரில் தங்க இடமின்றி  முழங்கால் இட்டு உடலை சுருக்கி  இரு கைகளாலும் உடலைப் போர்த்திக் கொண்டு  விட்டுப்போன இடத்தை கால்களால் அணைத்து  வாடைக்காற்றில் நடுங்கிக்கொண்டு பெட்டிப்பாம்பாக சுருண்ட நிலையில்   ''சௌக்யமாக'' உட்கார்ந்திருப்பதை  நாங்கள் பார்த்தோம் என்று நீங்கள் இருவரும் அவளிடம் சொல்லுங்கள்.'' 

பாவம் ராஜாவை கண்டு சீக்கிரம் பரிசு ஏதாவது பெற்று ஊர் திரும்பட்டும் அந்த புலவர். 
இதை எளிய தமிழில் சத்தி முற்ற புலவர்  ஒரு அருமையான ஏழைக்கவிஞனின் பாடலாக  நமக்கு அளித்திருக்கிறார். 
​''​நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே​''​

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...